மூகம்ʼ கரோதி வாசாலம்ʼ பங்கு₃ம்ʼ லங்க₄யதே கி₃ரிம்
யத்-க்ருʼபா தம் அஹம்ʼ வந்தே ஸ்ரீ-கு₃ரும்ʼ தீ₃ன தாரிணம்
பரமானந்த₃-மாத₄வம் ஸ்ரீ சைதன்ய ஈஷ்₂வரம்
ஹரிஹி ஓம்ʼ தத் ஸத்
ஜயபதாகா ஸ்வாமி: ஹரே கிருஷ்ண! நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. இந்தத் தலைப்பைப் பற்றி நான் அதிகமாகப் பேசி வருகிறேன்; ஆனால் நீங்கள் எல்லோரும் ஜபம் செய்து கொண்டிருக்கிறீர்கள், ஆகவே நான் அதிகமாகச் சொல்லமாட்டேன்! உங்களது பெயர் உங்களிடமிருந்து வேறுபட்டது. ஏனெனில் நாம் எல்லோரும் இந்த பௌதிக உலகில் வாழும் உயிர்கள். ஆனால் கிருஷ்ணரும் அவருடைய நாமமும் வேறல்ல. நீங்கள் கிருஷ்ணரை அழைக்கும்போது, உண்மையில் அது அவருடைய நாமம், லீலைகள் போன்றவற்றிலிருந்து வேறல்ல. ஆகவே நீங்கள் கிருஷ்ணருடன் சங்கம் செய்கிறீர்கள். அதைச் செய்வதன் மூலம் நீங்கள் தூய்மையடைகிறீர்கள். இரும்பை நெருப்பில் வைத்தால் அது மிகவும் சூடாகி, நெருப்பைப் போலவே ஆகிவிடுவது போல்! ஆகவே நீங்கள் ‘ஹரே கிருஷ்ண’ என்று ஜபித்தால், பகவான் கிருஷ்ணரின் சங்கத்தைப் பெறுகிறீர்கள்; அதன் பின் நீங்கள் ஆன்மீகமயமாகிறீர்கள்! அது வெளிப்புறமாகத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் உங்கள் சூக்ஷ்ம உடல் மாறுகிறது! புலன்களை ஒழுக்கமற்ற முறையில் திருப்திப்படுத்துவதற்குப் பதிலாக, நாம் கிருஷ்ணருக்கு சேவை செய்ய விரும்புகிறோம். ஆகவே இல்லத்தரசிகளுக்கு குழந்தைகள் உள்ளனர், வீட்டு வேலைகள் உள்ளன; ஆனாலும் அவர்கள் ‘ஹரே கிருஷ்ண’ என்று ஜபிக்கலாம். அவர்கள் பிரசாரம் செய்து பல்வேறு செயல்களையும் செய்கிறார்கள். அதுபோலவே, சமுதாயத்தில் உள்ள நவீன மக்கள் தங்களுடைய அசல் வர்ணாஷ்ரமத்தில் ஆர்வமுள்ளவர்களாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்; அவர்களுக்கு செய்ய நிறைய வேலைகள் இருக்கலாம். ஆனால் அவர்கள் எதைச் செய்தாலும், அதை கிருஷ்ண உணர்வில் செய்யுங்கள். அதுவே கிருஷ்ண உணர்வுடைய தை₃வ-வர்ணாஷ்ரமம். ஆகவே, இந்தத் தலைப்பில் எனக்கு மிகவும் அதிகமான ஆர்வம் உள்ளது.
பக்தர்கள் இதை பொதுமக்களிடம் முன்வைக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். உங்களுக்கெல்லாம் உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள், சக ஊழியர்கள், சக மாணவர்கள், யாராக இருந்தாலும் இருக்கலாம். ஆகவே அவர்களை ஈடுபடுத்த நாம் விரும்புகிறோம் — பகவான் சைதன்யர் கூறினார்: யாரே தே₃க₂, தாரே கஹ ‘கிருஷ்ண’-உபதே₃ஷ₂ [சை.ச. மத்ய 7.128]. ஒரு மாதத்தில், எத்தனை புதிய மக்களை ‘ஹரே கிருஷ்ண’ என்று ஜபிக்க வைக்க முடியும்? சில சமயம் மனைவி கணவரை ஜபிக்க வைக்கலாம்; அல்லது கணவர் மனைவியை ஜபிக்க வைக்கலாம். ஆகவே அது சாத்தியம். சில சமயம் மனைவியால் கணவரை ஜபிக்க வைக்க முடியாது; கணவரால் மனைவியை ஜபிக்க வைக்க முடியாது; சில சமயம் கணவரால் மனைவியை ஜபிக்க வைக்க முடியாது! ஆகவே இது கலி-யுகம். ஒருவரை ஜபிக்க வைப்பது, உண்மையில் ஒருவர் கிருஷ்ணரை ஏற்றுக்கொள்வதாகும். பகவான் சைதன்யர் தென்னிந்தியாவில் நடந்து சென்றபோது, சாலையில் மக்களைத் தழுவுவார்; உடனே அவர்கள் கிருஷ்ணரின் அன்பால் ஆழமாக ஆட்கொள்ளப்படுவார்கள். நமக்கு அதே திறன் இல்லை. ஆனால் எப்படியாவது மக்களை, தவறுதலாக இருந்தால்கூட, ஜபிக்க வைத்தால் — பகவான் ஸ்ரீ சைதன்யரின் ஒரு பக்தர் ஒரு பெரிய காஜியைச் சந்தித்தார். காஜி என்பது ஒரு வகை முஸ்லிம் நீதிபதி. அவர் சாந்த் காஜி அல்ல; வேறு ஒரு காஜி. அந்த பக்தர், “நீங்கள் மிகவும் அழகானவர், நீங்கள் மிகவும் சக்திவாய்ந்தவர், நீங்கள் மிகவும் மதநெறி உள்ளவர்,” என்று இவ்வாறு அவரை மிகவும் புகழ்ந்தார். ஆனால் எனக்கு ஒரு வேண்டுகோள் இருக்கிறது, “நான் உங்களிடம் கேட்கலாமா?” அவர், “ஆம்! நிச்சயமாக!” என்றார். காஜி, “சரி,” என்றார். “தயவு செய்து இதையெல்லாம் மறந்துவிட்டு ‘ஹரே கிருஷ்ண’ என்று ஜபியுங்கள்!” காஜி, “நான் நாளை ‘ஹரே கிருஷ்ண’ என்று ஜபிப்பேன்!” என்றார். அந்த பக்தர் கைதட்டி, “நீங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டீர்கள்!” என்றார். ஆகவே இவ்வாறு எப்படியாவது மக்களை ஜபிக்க வையுங்கள்; அவர்கள் ஒருமுறை ஜபித்தால்கூட, அவர்களுக்கு சில கருணை கிடைக்கும். அவர்கள் எப்போதும் ஜபித்தால், முழு கருணையையும் பெறுவார்கள்!
ஆகவே இது டிஜிட்டல் யுகம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்; பக்தர்கள் பல்வேறு வீடியோக்களை உருவாக்க வேண்டும். ஒருவர் ஏதாவது சொன்னால், அதை ஒரு காதால் கேட்டு மற்றொரு காதால் விட்டுவிடலாம். ஆனால் மீண்டும் மீண்டும் காட்டக்கூடிய ஒரு வீடியோ இருந்தால், அது உங்கள் மனதில் இன்னும் அதிகமாகப் பதியலாம். ஆனால் அது குறுகிய வீடியோவாக இருக்க வேண்டும், ஏனெனில் மக்களின் கவன நேரம் குறைவு. ஒரு வைஷ்ணவி இல்லத்தரசி வீடியோ இருக்கிறது; அது எத்தனை திருத்தங்களைச் சந்தித்தது? அது சுமார் மூன்று நிமிட வீடியோ! நான் கிருஷ்ண உணர்வுடைய தை₃வ-வர்ணாஷ்ரமம் பற்றிய வீடியோக்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். அது சுமார் நான்கு திருத்தங்களைச் சந்தித்தது; அது மிகவும் நன்றாக உள்ளது. எல்லாவற்றையும் திருத்தும்படி நான் அவரிடம் கேட்கவில்லை; ஆனால் அவர் அதைச் செய்தார். இப்போது ஒரு புதிய பிரதியும் இருக்கிறது. நான் அதை இன்னும் பார்க்கவில்லை. அதை பார்க்க விரும்புகிறேன் — நீங்கள் என்னுடன் அதை பார்த்து, அதைத் திருத்த உதவ விரும்புகிறீர்களா? நான் சொல்ல வருவது, கிருஷ்ண உணர்வு மிகவும் ஆனந்தமானது! அது நிறைய திவ்ய ஆனந்தம்! உண்மையிலேயே ஆனந்தம்! அதை என்னால் விளக்கக்கூட முடியாது! மக்கள் அதை அனுபவிக்காமல் இருந்தால், அவர்கள் அதை இழக்கிறார்கள்! பல ஆண்டுகளுக்குப் பிறகு நான் வட அமெரிக்காவிற்கு வருகிறேன். ஆகவே மாயாபுர் என்ற புனித தாமத்தில் தங்குவது மிகவும் முக்கியம். நான் பகவான் ஸ்ரீ சைதன்யரின் லீலைகளை வாசித்துக் கொண்டிருந்தேன்; அவர் அனைவரும் பக்தர்களாக வேண்டும் என்று விரும்புகிறார்! ஹரிதா₃ஸ டா₂குரர் அவரிடம் கேட்டார், “செடிகள் மற்றும் பூச்சிகள் பற்றி என்ன?” நீங்கள் பூச்சிகள் மற்றும் கொசுக்கள் பற்றிக் கவலைப்படுகிறீர்கள்!
உங்களிடம் அந்த KCDV வீடியோ இருக்கிறதா, ஹரிதா₃ஸ சைதன்ய தா₃ஸ? சரி!
Lecture Suggetions
-
20211017 இஸ்கான் சென்னையின் படன உற்சவத்தில் உரையாற்றுகிறார்.
-
20211001 கேள்வி மற்றும் பதில்கள்
-
20210711 “திருநாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” — பத்ர பூர்ணிமா நிகழ்ச்சி சொற்பொழிவு
-
20210523 அமோகனை தன் கருணையினால் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காப்பாற்றுதல்
-
20210925 ஸ்ரீமத்- பாகவதம் 1.11.21
-
20210624 ஹர்மொனிக்ஸ் லைப்-ஸ்டைல் நல்லாசிவுரை
-
20210930 கேள்வி மற்றும் பதில்கள்
-
20211015 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - விழா துவக்கவுரை
-
20211002 பக்தி விருட்ச சம்மேளன உரையாற்றுதல்
-
20210914 51வது சன்னியாச ஆண்டுவிழா உரை
-
20210828 ஸ்ரீமத் பாகவதம் 1.10.33-35
-
20211016 பங்களாதேஷ் பக்தர்களுக்கான செய்தி
-
20211120 ஸ்ரீமத் பாகவதம் 1.12.35 - 36
-
20211017 ஸ்ரீமத் பாகவதம் 1.12.2
-
20210905 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20211009 ஸ்ரீமத்பாகவதம் 1.11.34
-
20211014 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - சம்பிரதாயசம்மேளன முகவரி
-
20210918 வாமன தூவாதசி அன்று ஸ்ரீமத் பாகவதம்
-
20210830 ஸ்ரீமத் பாகவதம்
-
20210918 கோலோக பாத்ரா பிரச்சாரத்திற்கு செல்க
-
20211003 ஸ்ரீமத் பாகவதம் 1.11.28
-
20210925 கேள்வி மற்றும் பதில் அமர்வு
-
20200903 ஜூம் கேள்வி பதில்கள்
-
20211108 இஸ்கான் காங்டாக் மற்றும் அம்பாலா பக்தர்களுக்கு ஸ்ரீல பிரபுபாதா திரோபாவா முகவரி
-
20211113 ஸ்ரீமத்-பாகவதம் 1.12.29
-
20210625 ஸ்ரீ அத்வைத ஆச்சார்யர் சச்சிமாதாவை அழைத்துவர பல்லக்கினை அனுப்புதல்
-
20210904 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20211016 உலகளாவிய தாமோதர விழா துவக்கவுரை
-
20210710 சாந்திபூரில் ஸ்ரீ சைதன்யர் மற்றும் அவரது சகாக்களின் லீலைகளை கேட்பதால் கிடைக்கும் பலன்கள்
-
20211108 ஸ்ரீல பிரபுபாதாவின் திரோபாவா விரிவுரை இஸ்கான் மாயாபூர்