யத்-க்ருபா தம் அஹம் வந்தே ஸ்ரீ-குரும் தீன-தாரணம்
பரமானந்த-மாதவம் ஸ்ரீ சைதன்ய ஈஷ்வரம்
ஹரி: ஓம் தத் ஷத்
ஜெகந்நாத கீர்த்தானந்த தாஸா, தொகுப்பாளர்: குரு மகாராஜா தாங்கள் எப்படி இருக்கிறீர்கள்?
ஜெயபதாக ஸ்வாமி: உடல் ரீதியாகவா அல்லது ஆன்மீக ரீதியாகவா? என் வலது காலில் இன்னும் கொஞ்சம் செல்லுலிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். இல்லையெனில், நான் நன்றாக இருப்பதாகத் தெரிகிறது.
ஜெகந்நாத கீர்த்தானந்த தாஸா: நீங்கள் எங்கள் அனைவரையும் ஊக்குவிக்கும் ஒருவர். எத்தனையோ உடல் பிரச்சனைகள் இருந்தும் அக்கறை காட்டியுள்ளீர்கள். நீங்கள் எங்கள் அனைவரையும் ஊக்கப்படுத்துகிறீர்கள், அவ்வாறிருக்க உங்கள் சீடர்கள் கொண்டிருக்கும் அக்கறை பற்றி என்ன அறிய விரும்புகிறீர்கள்?
ஜெயபதாக ஸ்வாமி: JSSS திட்டத்திற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், அவர்கள் சீடனுக்கு சீடனை அணுகுகிறார்கள், அதுவும் மிக முக்கியமானது. ஜேபிஎஸ் கேர் மூலம் சச்சி ஜனனி தேவி தாஸி குறிப்பிட்டது போல் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன். எனவே இது சீடர்களைப் பராமரிப்பதற்கான எனது முன்முயற்சி, ஆனால் JSSS என்பது சீடர்கள் மற்ற சீடர்களுக்கு உதவும் ஒரு திட்டமாகும், மேலும் அவர்கள் தங்களுக்குக் கிடைத்த சில அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம், அது மக்களை ஊக்குவிக்க உதவுகிறது. சிக்ஷா சீடர்களும் இருக்கிறார்கள் என்று கூறிய சச்சி ஜனனியின் விளக்கத்தில் சில பிரிவுகள் விடுபட்டுள்ளன. அவர்கள் மற்ற குருக்களின் சீடர்களாக இருக்கலாம், ஆனால் அவர்களும் என்னை சிக்ஷா குருவாகவே பார்க்கிறார்கள். நமக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சிக்ஷா குருக்கள் இருக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியும், எனவே யார் என்னை சிக்ஷா குருவாக ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்களை நான் கவனித்துக் கொள்ள விரும்புகிறேன், மேலும் ஸ்ரீல பிரபுபாதாவின் அறிவுறுத்தல்களை நிறைவேற்ற எனக்கு உதவுவதால் அவர்களைக் கவனித்துக் கொள்ளும்படி என்னிடம் கேட்டவர்களும் இருக்க வேண்டும். அவர்கள் சீடர்களாகவோ, ஆர்வலர்களாகவோ அல்லது சிக்ஷாவாகவோ இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் உதவ விரும்புகிறார்கள் அல்லது என்னுடைய உதவியை அவர்கள் விரும்புகிறார்கள். எனவே அந்த விஷயத்தில் அவர்களும் கவனம் செலுத்த வேண்டும். எனவே இப்போது கஷதேசத்தில் பல குருக்களின் சீடர்கள் என்னை சிக்ஷா குருவாக, புதிய துவாரகா மற்றும் பிற இடங்களிலும் ஏற்றுக்கொண்டதைக் காண்கிறோம். அப்படி உலகம் முழுவதும் சிக்ஷா சீடர்கள் இருக்கிறார்கள். ஆனால் அடிப்படையில், மாலை 5.30 மணியளவில் நான் கௌட சரஸ்வத பிராமண சமூகத்திற்கு ஒரு நிகழ்ச்சியைக் கொடுத்தேன், அங்கு நூற்றுக்கணக்கான மக்களில் 13 தீட்சை பெற்ற சீடர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் என்னிடம் கூறினார், அவர்கள் 2002 இல் தீட்சை எடுத்ததாகவும் ஆனால் இன்னும் பௌதிக பிரச்சனையில் உள்ளதாகவும். அதனால் தீட்சை எடுத்தால் பௌதிக பிரச்னை வராது என்ற எதிர்பார்ப்பு அவருக்கு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் அப்படி இல்லை என்று சொன்னேன். இந்த உலகம் துக்காலயம் அஷாஸ்வதம் என்று பகவத் கீதையில் கிருஷ்ணர் விளக்குகிறார். எனவே நாம் சில பௌதிக துன்பங்களை அனுபவித்தாலும், அது மிகவும் மோசமாக இருந்திருக்க வேண்டும், ஆனால் கிருஷ்ணர் அதைக் குறைத்துவிட்டார் என்று நினைக்கிறோம். எனவே நான் ஒரு உதாரணம் சொன்னேன், பல நாட்களுக்குப் பிறகு இன்று நான் உடற்பயிற்சி செய்ய குளத்திற்குச் சென்றேன். ஆனால் அந்த செல்லுலிடிஸ் காரணமாக எனக்கு காலில் வலி ஏற்பட்டது. ஆதி லீலையின் சைதன்ய சரிதாம்ருதம் 7வது அத்தியாயத்தில், பகவான் சைதன்யரும் அவருடைய சகாக்களான பஞ்ச தத்வாவும் எப்படி, உலகம் முழுவதும் கிருஷ்ண உணர்வால் பாய்ந்தோடியபோது, அவர்கள் பரம உல்ஹாஸர் ஆனார்கள் என்று எப்படிச் சொன்னார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அது ஒரு பரவசம் போல் ஆனது. பஞ்ச தத்வத்தை அப்படிப் பிரியப்படுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்! என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை, அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் அதே நேரத்தில் எனக்கு கால் வலித்தது. எனவே இந்த பௌதிக துன்பம் உங்களின் ஆன்மீக பேரின்பத்துடன் தொடர்புடையது அல்ல என்பதை நான் உணர்ந்தேன். நான் உடல் அல்ல, நான் மனம் அல்ல, நான் ஆன்மீக தளத்தில் மகிழ்ச்சியையும், உடல் தளத்தில் துன்பத்தையும் அனுபவித்துக் கொண்டிருந்தேன்.
குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு இது எவ்வளவு முக்கியம் என்பதை முன்வைத்ததற்காக கவுரங்கி தேவிக்கு நன்றி. எனவே, யமதூதர்களிடமிருந்து மக்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து நான் கூறுகிறேன். சென்னையில் ஒருநாள் ஸ்ரீல பிரபுபாதருக்கு வெவ்வேறு பிரசாதங்களை வழங்கி பக்தி விருக்ஷா குழுக்கள் அந்நாளை கொண்டாடினர் . அதில் ஒரு நாடகமும் இடம்பெற்றது. அதில் இரண்டு யமதூதர்கள் யமராஜாவிடம் புகார் கூறினர். அவர்கள் மக்களை நரகத்திற்கு அழைத்துச் செல்ல விரும்பினர், ஆனால் மக்கள் ஹரே கிருஷ்ணா என்று ஜெபம் செய்கிறார்கள், அதனால் அவர்களை அழைத்துச் செல்ல இயலவில்லை என்று ஒருவர் கூறினார். மற்றவர் சொன்னார், அவர்கள் வீட்டில் கூட கோவில்கள் வைத்திருகிறார்கள், அக் கோயிலில் ஜெகநாதர் இருக்கிறார், கிருஷ்ணர் இருக்கிறார். அவ்வாறிருக்க நாம் அவர்களை எப்படி எடுக்க முடியும். நாம் என்ன செய்ய போகிறோம்? நாம் வேறு வேலை தேட வேண்டியதுதான்! அந்த நாடகம் மிகவும் நன்றாக இருந்தது! ஹா! ஆகவே குழந்தைகள் இவ்வாறு குறும்படங்களை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருந்தனர். நாங்களும் யமதுதாக்களிடமிருந்து தப்பிக்க மக்களுக்கு உதவ விரும்புகிறோம். கடவுளின் வீட்டிற்குத் அவர்கள் திரும்புவதற்கு . எனவே, JSSS எனக்கு உதவ முடியும், யாராவது எனக்கு உதவி செய்தால், நான் இணையத்தளத்தில் உள்ள சீடர்களுக்கு, குறிப்பாக ஜன்மாஷ்டமி மற்றும் வரவிருக்கும் ராதாஷ்டமியில் ஒரு செய்தியை அனுப்ப விரும்புகிறேன், ஆனால் எங்களிடம் புதுப்பிக்கபட்ட தரவுதளம் இல்லை. பெரும்பாலான மின்னஞ்சல்கள் மீண்டும் திரும்பி வருகின்றன. எனவே சச்சி ஜனனி தேவீ தாஸி கூறியது போல் உங்களால் உதவ முடிந்தால், நாங்கள் தொடர்புகளை புதுப்பிக்க வேண்டும். எனவே, பல்வேறு நபர்கள் இதற்கு உதவுகிறார்கள். ஆனால் JSSS ம் அதற்கு உதவ முடியும். மிக்க நன்றி. உங்கள் மனைவியின் உடல்நிலை எப்படி இருக்கிறது?.
ஜெகந்நாத கீர்த்தானந்த தாஸா: இறுதிக் கேள்வி குரு மஹாராஜா: இங்கே அனைவரும் ஆரோக்கியம் குரு மகாராஜா, அவருடைய முன்னேற்றம் குறித்த மின்னஞ்சலை உங்களுக்கு அனுப்புகிறோம். இங்கிலாந்தில் எங்களிடம் ஒரு உறுப்பினர் இருந்தார், அவர் உண்மையில் தற்கொலை செய்து கொள்ள நினைக்கிறார். ஆனால் சரியான நேரத்தில் பிடிபட்டார். இது நிகழும்போது கேட்க மிகவும் வருத்தமாக இருக்கிறது, எனவே ஆன்லைன் என்பது இப்படி யோசிக்க வைக்கிறது:
1. அவர்கள் என்ன செய்ய வேண்டும்?
2.சீடர்களாகிய நாம் அவர்களுக்கு எப்படி உதவலாம்?
ஜெயபதாக ஸ்வாமி: அவர்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம், அதைச் செய்யாதீர்கள். தற்கொலை செய்து கொள்ளாதீர்கள். முதலில் தீட்சை பெற்றவர் பேயாகவும், இரண்டாவது தீட்சை பெற்றவர் பிரம்ம ராட்சசராகவும் மாறுவார்கள். எனவே அதை செய்யாதீர்கள். சில நேரங்களில் நான் தற்கொலை செய்து கொள்ள விரும்புகிறேன் எனும் மின்னஞ்சல்களைப் பார்க்கிறேன் சில காரணங்களால் எனது செயலாளர்கள் உடனடியாக அதை என்னிடம் காட்ட மாட்டார்கள். அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் அதை எனக்கு, JPS கேர், உள்ளூர் JSSS க்கு அனுப்பலாம், மேலும் அவர்கள் ஏதேனும் பெரிய உணர்ச்சிப் பிரச்சனைகள் அல்லது சில தேவைகளை உணர்ந்தால், நாம் அவர்களுக்கு எப்படி உதவலாம் என்று பார்க்கலாம். அவர்கள் தங்கள் விஷயத்தை அவசரம் என்று கொடியிட்டு அனுப்பினால் நாம் உடன் நடவடிக்கை எடுக்கலாம், எனக்கு சில கடிதங்கள் வந்தன, அதில் அவர்கள் குறிப்பாக தற்கொலை என்று சொல்லவில்லை, ஆனால் தங்களுக்கு சில சிக்கல்கள் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். அவர்களுக்கு கணவன் மனைவி பிரச்சனை இருக்கலாம். எனவே எங்களிடம் மக்கள் உள்ளனர், பக்தர்கள் உள்ளனர், அவர்கள் இந்த விஷயத்தில் உதவ முன்வந்துள்ளனர். மேலும் என்னிடம் சில உளவியலாளர்கள் உள்ளனர், அவர்களும் தேவைப்பட்டால் கவுன்சிலிங் கொடுக்க முன்வந்துள்ளனர். எனவே பல்வேறு வழிகளில் நாம் அவர்களுக்கு உதவ முயற்சி செய்யலாம். ஆனால் இந்த எண்ணங்கள் மனதில் தோன்றினால் அது மிகவும் ஆபத்தானது. சில நுட்பமான உருபொருள்கள் நமது தொடர்பை விரும்புகிறது மற்றும் அதைச் செய்யுங்கள்! அதைச் செய்யுங்கள்! என வற்புறுத்தும், அதனால் லாபம் இல்லை. நீங்கள் உடலில் இருக்கும் அதே நேரம் பேயாகவும் இருப்பீர்கள், உங்களுக்கு புலன்கள் இருக்காது. உங்கள் மனம் மட்டும் உங்களிடம் இருக்கும். அதுதான் முழுப் பிரச்சனையே.
ஜெயபதாக ஸ்வாமி: மிக்க நன்றி. பக்தி புருஷோத்தம ஸ்வாமி, ரேவதி ராமன் பிரபு மற்றும் ராம்பரு மாதாஜி ஆகியோருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். ராம்பரு மாதாஜி அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள சாப்ளினில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். சாப்ளின் என்றுதான் நினைக்கிறேன், இவ்விடம் பலருக்கு வெவ்வேறு ஆன்மீக மற்றும் உணர்ச்சிகரமான கவனிப்பை வழங்குகிறது. JSSS திட்டத்திற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், அவர்கள் ஸ்ரீல பிரபுபாத லீலாவைப் பகிர்ந்து கொண்டால், அதுவும் நன்றாக இருக்கும். குறிப்பாக அவருடைய வியாச பூஜையின் போது, ஸ்ரீல பிரபுபாதாவைப் பற்றிச் சொல்வது நன்றாக இருக்கும். சமீபத்தில் சில - ஐரோப்பிய JSSS திட்டத்திற்கு வருமாறு எனக்கு அழைப்பு வந்தது. ஏதேனும் ஒரு இடத்திற்கு வருமாறு அழைத்தால், அங்கு செல்ல முயற்சிப்பேன், இல்லையெனில் கடினமான நேரமாக இருந்தால் சில வீடியோ கிளிப் அனுப்ப முயற்சிப்பேன்.
Lecture Suggetions
-
20210905 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20211016 பங்களாதேஷ் பக்தர்களுக்கான செய்தி
-
20211108 ஸ்ரீல பிரபுபாதாவின் திரோபாவா விரிவுரை இஸ்கான் மாயாபூர்
-
20211017 ஸ்ரீமத் பாகவதம் 1.12.2
-
20210925 கேள்வி மற்றும் பதில் அமர்வு
-
20210930 கேள்வி மற்றும் பதில்கள்
-
20210710 சாந்திபூரில் ஸ்ரீ சைதன்யர் மற்றும் அவரது சகாக்களின் லீலைகளை கேட்பதால் கிடைக்கும் பலன்கள்
-
20211015 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - விழா துவக்கவுரை
-
20211017 இஸ்கான் சென்னையின் படன உற்சவத்தில் உரையாற்றுகிறார்.
-
20211001 கேள்வி மற்றும் பதில்கள்
-
20210918 கோலோக பாத்ரா பிரச்சாரத்திற்கு செல்க
-
20211016 உலகளாவிய தாமோதர விழா துவக்கவுரை
-
20210625 ஸ்ரீ அத்வைத ஆச்சார்யர் சச்சிமாதாவை அழைத்துவர பல்லக்கினை அனுப்புதல்
-
20211014 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - சம்பிரதாயசம்மேளன முகவரி
-
20211003 கேள்வி மற்றும் பதில்கள்
-
20210918 வாமன தூவாதசி அன்று ஸ்ரீமத் பாகவதம்
-
20211113 ஸ்ரீமத்-பாகவதம் 1.12.29
-
20211003 ஸ்ரீமத் பாகவதம் 1.11.28
-
20210711 “திருநாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” — பத்ர பூர்ணிமா நிகழ்ச்சி சொற்பொழிவு
-
20210830 ஸ்ரீமத் பாகவதம்
-
20211002 பக்தி விருட்ச சம்மேளன உரையாற்றுதல்
-
20211108 இஸ்கான் காங்டாக் மற்றும் அம்பாலா பக்தர்களுக்கு ஸ்ரீல பிரபுபாதா திரோபாவா முகவரி
-
20200903 ஜூம் கேள்வி பதில்கள்
-
20210624 ஹர்மொனிக்ஸ் லைப்-ஸ்டைல் நல்லாசிவுரை
-
20211120 ஸ்ரீமத் பாகவதம் 1.12.35 - 36
-
20210925 ஸ்ரீமத்- பாகவதம் 1.11.21
-
20210914 51வது சன்னியாச ஆண்டுவிழா உரை
-
20210828 ஸ்ரீமத் பாகவதம் 1.10.33-35
-
20211009 ஸ்ரீமத்பாகவதம் 1.11.34
-
20210523 அமோகனை தன் கருணையினால் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காப்பாற்றுதல்