மூகம் கரோதி வாஞ்சலம் பங்கும் லங்காயதே கிரிம்
யத்-க்ருபா தம் அஹம் வந்தே ஸ்ரீ-குரும் தீன-தாரணம்
பரமானந்த-மாதவம் ஸ்ரீ சைதன்ய ஈஷ்வரம்
ஹரி: ஓம் தத் ஷத்
மரீசி தாஸா,தொகுப்பாளர்: நீங்கள் எங்களிடம் என்ன சொன்னாலும், அக்கறை கொள்வதென்பது, உங்களுக்கு இயற்கையாக கிடைத்த வரம் குருதேவா. முதல் கேள்வி, இந்த அற்புதமான பரிசை நாம் எவ்வாறு உருவாக்குவது என்பதுதான், இரண்டாவது கேள்வியைப் பார்ப்போம், ஏனெனில் இதுவும் அக்கறையைப் பற்றியதே. குரு மஹாராஜா பல ஆண்டுகளாக நீங்கள் உங்கள் சீடர்களை கவனித்துக் கொள்ள அக்கறை கொள்கிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். இப்போது நீங்கள் JPS Care ஐ உருவாக்கியுள்ளீர்கள், நீங்கள் JPS E-Care ஐயும் உருவாக்கியுள்ளீர்கள், இப்போது உலகம் முழுவதும் JSSS குழுக்கள் உள்ளன, சீடர்களைப் பராமரிக்கும் சேவையில் இந்த பகுதிகள் அனைத்தும் உங்களுக்கு எவ்வாறு உதவும் என்பதை நீங்கள் விளக்க விரும்புகிறோம். இவைகள் அனைத்தும் எவ்வாறு ஒருங்கிணைக்கப்படலாம் மற்றும் சீடர்களாகிய நாம் எவ்வாறு அதில் பங்களிக்க முடியும்? இந்த மூன்று பகுதிகளின் பெரிய படத்தை உங்களிடமிருந்து பெற நாங்கள் விரும்புகிறோம்.
ஜெயபதாக ஸ்வாமி: எனவே மரீசி தாஸா, நீங்கள் மிகவும் அன்பான சீடர். ஜெகன்னாத கீர்த்தானந்தா விளக்கியது போல், நீங்கள் பலரின் இதயத்தில் இடம் பிடித்துள்ளீர்கள். தேவமாதவ பிரபுவும் இளைஞர்களிடம் எவ்வாறு அக்கறை செலுத்துவது என்பது குறித்து தனது அறிவுரையை வழங்குகிறார், இவைகள் ஸ்ரீதர சுவாமி மகாராஜா நமக்கு அறிவுறுத்தியதை எனக்கு நினைவூட்டுகிறது. நீங்கள் நன்கொடையாளர்களிடமிருந்து பணம் விரும்பினால், அவர்கள் உங்களுக்கு ஆலோசனை வழங்குவார்கள். அவர்களிடம் ஆலோசனை கேட்டால் பணம் தருவார்கள். இது மகிழ்ச்சி அளி்ப்பதாய் உள்ளது! அவர் கூறுகிறார் மக்களிடம் சிறிது அக்கறை காட்டினால் அவர்கள் உயிரையும் கொடுப்பார்கள், ஆனால் நீங்கள் அவர்களின் வாழ்க்கையை விரும்பினால், அவர்கள் உங்களுக்கு எதையும் கொடுக்க மாட்டார்கள். அம் மாதிரி ஏதாவது. நிச்சயமாக, அவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாயாபூரில் ஒரு JSSS நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். அதில் சுமார் 2000 பேர் கலந்து கொள்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். ஆனால் எப்படியோ, உலகளாவிய JSSS நிகழ்ச்சி 952 உறுப்பினர்களைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறது. இது சரியானதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் என்ன இருந்தாலும் சீடர்களை என்னுடன் இணைக்கவும் உதவுகிறார்கள். மேலும் சீடர்கள் சீடர்களுக்கு உதவுவது, ஷப்த ஹரி குறிப்பிட்டது போல் தமது அனுபவங்களைச் சொல்வது, ஜானகி ராமச்சந்திர தாஸாவால் பராமரிக்கபடும் சமூக ஊடகங்களில் இடுகைகளைப் படிப்பது அல்லது சத்யமேத கௌரங்கரால் பராமரிக்கபடும் ஜெயபதாக சுவாமி செயலியின் ஒரு அங்கத்தினராக இருப்பது, இவை அனைத்தும் ஸ்ரீல பிரபுபாதாவின் பணியை நிறைவேற்ற உதவுவதாகும். ஸ்ரீல பிரபுபாதர் என்னிடம் பல சீடர்களை உருவாக்கும்படி கேட்டார் அல்லது அறிவுறுத்தினார். ஆனால் கஸ்தூரி மஞ்சரி கிருபா தேவி தாசி குறிப்பிட்டது போல் சீடர்களை உருவாக்குவது என்பது ஒரு விஷயம், அவர்களைத் தக்கவைத்துக்கொள்வது என்பது வேறு விஷயம் என்பதை நான் உணர்ந்தேன். நாம் சீடர்களைத் தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறோம். சில சமயங்களில், சீடர்கள் தங்கள் மந்திரத்தை கைவிட்டு விடுகிறார்கள், அவர்கள் நினைக்கிறார்கள், பௌதிக உலகில் இன்னும் துன்பம் இருக்கிறது என்று, மற்றும் சில தவறான எதிர்பார்ப்புகளும் அவர்கள் கொண்டுள்ளனர், எப்படியாவது பக்தனாக இருப்பதன் மூலம் ஜடவுலகம் அமிர்தமாக மாறிவிடும். ஜட உலகம் ஒரு பௌதிக உலகம், மேலும் கிருஷ்ணரின் கருணையால் நீங்கள் அதன் மோசமான பகுதியிலிருந்து காப்பாற்றப்படலாம். நாம் அனுபவிக்கும் துன்பம் நமக்கு தகுதியானவற்றை விட மிகக் குறைவு என்று நினைக்கிறோம்.
எனவே மக்கள் JPS கேரில் பங்கேற்க வேண்டும் என்றும், மக்கள் JSSS இல் சேர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், மேலும் அவர்களின் முயற்சிகளை ஒருங்கிணைக்க உலகளவில் JSSS க்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். உண்மையில், தொழில்நுட்ப ரீதியாக, அவைகள் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். சில சீடர்கள் வந்து, ஸப்த ஹரி தாஸாவும் மற்றவர்களும் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று கருத்து சொன்னார்கள். நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், எப்படியாவது இந்த வைஷ்ணவ சங்கத்தில் பக்தர்கள் இணைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஜேபிஎஸ் கேரில் நாங்கள் ஆர்வமுள்ளவர்கள், அடைக்கலம் பெற விரும்புபவர்கள், தீக்ஷா பெற்றவர்கள், சிக்ஷா மற்றும் பக்ர்கள் நலம் விரும்பும் சீடர்கள் அல்லது பக்தர்களைப் பராமரிக்க விரும்புகிறோம். ஆனால் இப்போது, எனக்குத் தெரியாது, அதிகபட்சமாக 20% தொடர்புகள் புதுப்பித்த நிலையில் உள்ளன. பெரும்பாலும் அவைகள் மீண்டும் மாறுகின்றன. மக்கள் தங்கள் மின்னஞ்சலை மாற்றுகிறார்கள், தங்கள் சூழ்நிலையை மாற்றும்போது. மேலும் அவர்கள் எங்களுக்கு அறிவிப்பதில்லை. எனவே, JSSS பல்வேறு வழிகளில் நமக்கு உதவக்கூடும்.
அதனால் தினமும் நான் என்ன செய்தாலும், ஜெயபதாக ஸ்வாமி ஆப்பில் கொடுக்கிறேன். எனது செல்லுலைடிஸினால் இரண்டு நாட்களாக மங்கள ஆரத்தியை தவறவிட்டுவிட்டேன், ஆனால் இன்று நான் மங்கள ஆரத்தியில் கலந்துகொண்டு அதை செயலியில் பதிவேற்றியுள்ளேன். நான் சில கோயில்களுக்கும் சென்றேன், வழக்கம் போல் இல்லை, சுமார் 9 அல்லது 10 மட்டுமே, வழக்கமான 20 அல்லது அதற்கு மேற்பட்டவை அல்ல! அது போலவே நான் JSSS மெய்நிகர் பின்வாங்கலிலும் எனது இருப்பை புதுப்பிப்பேன். எனவே நான் எவ்வளவோ செய்ய விரும்புகிறேன், இந்த சீடர்கள் அனைவரையும் நன்றாக கவனித்துக் கொள்ள எனது அனைத்து யோசனைகளையும் தர தயாராக உள்ளேன். அவர்கள் கடவுளிடம் திரும்பிச் செல்வதை நான் பார்க்க விரும்புகிறேன். தயவுசெய்து எனக்கு உதவுங்கள்! ஸ்ரீல பிரபுபாதர் நமக்கு பல்லாயிரக்கணக்கான, நூறாயிரக்கணக்கான, மில்லியன் கணக்கான, கோடிக்கணக்கான குருக்கள் இருக்க வேண்டும் என்றார். அதனால், என் வாழ்நாளில், அந்த கோடிக்கணக்கான குருக்களை நான் இன்னும் பார்க்காமல் இருக்கலாம். பகவத் கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதத்தை ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஸ்ரீல பிரபுபாதர் கூறினார். பகவான் ஸ்ரீ சைதன்யரின் போதனைகளை அறிந்து கொள்ளுங்கள். எனவே குறைந்த பட்சம் பக்தர்கள் பக்திவேதாந்த பட்டம் பெற்றிருந்தால், அவர்களால் செய்தியைப் பரப்ப முடியும் என்பதில் நான் ஓரளவு உறுதியாக இருப்பேன். பக்தர்களுக்கு அறிவுறுத்துவதில் JSSS உதவுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதுல் கிருஷ்ணர் என்னிடம் சொன்னார், மூத்த பக்தர்களோ, அல்லது சாஸ்திரத்தை பலமுறை படித்தவர்களோ, ஸ்ரீல பிரபுபாத புத்தகங்களை பலமுறை படிதிருப்பவர்களோ, வகுப்பில் சேர்ந்து படித்து படிப்பை முடிக்க வேண்டியதில்லை, தேர்வில் கலந்துகொண்டு நேரடியாக பட்டம் பெறலாம் . ஆகவே நான் நினைக்கிறேன் வகுப்பில் சேர்ந்து கற்கும் பக்தர்கள் அல்லது ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களை நன்கு அறிந்திருப்பவர்கள், கண்டிப்பாக தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள். இந்த வழியில் என் வாழ்நாளில் 500 சீடர்களை குருவாக உயர்த்த விரும்புகிறேன். தற்போது எங்களிடம் 100 மட்டுமே உள்ளது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் அனைவரும் வயதானவர்கள் ஆகிவிடுவார்கள், அவர்கள் எவ்வளவு காலம் வாழ்வார்கள் என்று தெரியாது. எனவே மக்கள் ஸ்ரீல பிரபுபாத புத்தகங்களைப் படிக்க வேண்டும், தேர்வு எழுத வேண்டும், பட்டங்களைப் பெற வேண்டும். மாறாக சில மக்கள் ஜெபம் செய்வதில்லை, அதைப்பற்றி கவலைப்படுவதில்லை, அதனால்பக்தர்களுடன் தொடர்பு இல்லாமல் போய்விட்டனர். எனவே, jPS கேர் மூலமாகவோ, JPS E கேர் மூலமாகவோ, அல்லது JSSSS மூலமாக உலகளாவிய பல்வேறு குழுக்களால், மக்களை ஈடுபடுத்தவும், அவர்களை உத்வேகப்படுத்தவும், கிருஷ்ண உணர்வைப் பாடவும், பிரசாரம் செய்யவும் பயிற்சி அளிக்க வேண்டும். குருக்களைப் பற்றி என்ன பேச, பலர் பக்தர்களாக கூட இல்லை, அவர்கள் இதயத்தில் பக்தர்களாகவும் ஆனால் அதிகம் பயிற்சி பெறாமலும் உள்ளனர். நீங்கள் என்ன நினைக்கறீர்கள்?
மரீசி தாஸா: உங்கள் வார்த்தைகள் மிகவும் கவர்ந்தன. நீங்கள் அனைத்தையும் சொன்னீர்கள். நாம் ஒருவரையொருவர் கவனித்துக் கொள்ள வேறு ஏதேனும் நடைமுறை வழி? மலேசியாவில் இதை நாங்கள் செய்கிறோம். கோலாலம்பூரில் உள்ள கோவில் நிர்வாகத்தினர் இன்று வரை உடலை விட்டு வெளியேறிய உங்கள் சீடர்கள் அனைவரையும் ஆய்வு செய்தனர். மொத்த எண்ணிக்கை 75. எனவே ஜெகன்னாதா மந்திரில் அவர்கள் ஒவ்வொரு நபருக்கும் ஒரு தீபம் என நரசிம்மதேவருக்கு அர்ப்பணிக்கிறோம். வருடத்திற்கு இரண்டு முறை 75 விளக்குகள் கொண்ட ஒரு தட்டில் - ஒரு முறை நரசிம்ம சதுர்தசி மற்றும் ஒரு முறை தாமோதர மாத ஏகாதசி நாளில் அதுமட்டுமன்றி அவர்களின் குடும்பத்தினருக்கும் இதை நாங்கள் தெரிவித்தோம். மேலும் எல்லோரையும் இது மிகவும் கவர்ந்தது. பிரிந்த ஆன்மாக்களுக்கு மட்டுமின்றி, நோய்வாய்ப்பட்ட பக்தர்களுக்கு மேலும் ஒரு தட்டு, குறிப்பாக இப்போது பல பக்தர்கள் கோவிட் நோயால் அவதிப்படும் போது, மேலும் ஒன்று சபை உறுப்பினர்கள் மற்றும் ஸ்பான்சர்கள் மற்றும் யாத்திரைக்கான ஆசீர்வாதங்களுக்காக. பக்தர்களிடம் நாம் எப்படி அக்கறை காட்டலாம் என்பதற்கு இது ஒரு எளிய உதாரணம்.
ஜெயபதாக ஸ்வாமி: அவர்கள் மலேசியாவில் செய்வது மிகவும் சுவாரஸ்யமான விஷயம். என் மாமா காலமானார், என் சகோதரி உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார், அவர்களுக்காக ஜெபிக்கும்படி என்னிடம் கடிதங்கள் வந்து கொண்டிருந்தன. அவர்களின் முகவரியை covid@jayapatakaswami.com என தரும்படி அவர்களிடம் கேட்டேன், அவர்களுக்காக நான் நரசிம்மதேவரிடம் பிரார்த்தனை செய்தேன். எனவே இவை அனைத்தையும் நாம் செய்கிறோம், அதனால் அவர்கள் ஏதும் செய்யாமல் விட்டுவிட்டதாக உணரக்கூடாது. covid@jayapatakaswami.com க்கு எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன். அது போல நான் வேறு வழிகளைப் பற்றி யோசிக்க முடியும் ஆனால் ஸப்த ஹரி தாஸா, அவர் பல்வேறு பரிந்துரைகளை செய்துள்ளார் மற்றும் அவை நிச்சயமாக மிகவும் நடைமுறைக்குரியவை என்று நான் நினைக்கிறேன். இப்போது வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
மரீசி தாஸா: உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்க வார்த்தைகள் இல்லை. நன்றி.
ஜெயபதாக ஸ்வாமி: எனவே, JSSS குழுக்களில் அதிகமானவர்கள் இணைவதும் நன்றாக இருக்கும். ஹரே கிருஷ்ணா! அவர் ஆலோசனை வழங்குவதில் ஒரு குறிப்பிட்ட படிப்பைக் கொண்டிருக்கிறார், இது பக்தர்களுக்கு உதவும் ஒரு வழியாகும். மேலும் ஸப்த ஹரி தாஸா, எப்படி ஆலோசனை வழங்குவது என்ற புத்தகத்தையும் தயாரித்து வெளியிட்டுள்ளார்.
Lecture Suggetions
-
20211017 ஸ்ரீமத் பாகவதம் 1.12.2
-
20211113 ஸ்ரீமத்-பாகவதம் 1.12.29
-
20211014 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - சம்பிரதாயசம்மேளன முகவரி
-
20211001 கேள்வி மற்றும் பதில்கள்
-
20211108 இஸ்கான் காங்டாக் மற்றும் அம்பாலா பக்தர்களுக்கு ஸ்ரீல பிரபுபாதா திரோபாவா முகவரி
-
20211003 கேள்வி மற்றும் பதில்கள்
-
20211016 உலகளாவிய தாமோதர விழா துவக்கவுரை
-
20211009 ஸ்ரீமத்பாகவதம் 1.11.34
-
20211017 இஸ்கான் சென்னையின் படன உற்சவத்தில் உரையாற்றுகிறார்.
-
20210918 கோலோக பாத்ரா பிரச்சாரத்திற்கு செல்க
-
20211016 பங்களாதேஷ் பக்தர்களுக்கான செய்தி
-
20210625 ஸ்ரீ அத்வைத ஆச்சார்யர் சச்சிமாதாவை அழைத்துவர பல்லக்கினை அனுப்புதல்
-
20210904 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20211002 பக்தி விருட்ச சம்மேளன உரையாற்றுதல்
-
20211120 ஸ்ரீமத் பாகவதம் 1.12.35 - 36
-
20200903 ஜூம் கேள்வி பதில்கள்
-
20210925 கேள்வி மற்றும் பதில் அமர்வு
-
20210930 கேள்வி மற்றும் பதில்கள்
-
20210918 வாமன தூவாதசி அன்று ஸ்ரீமத் பாகவதம்
-
20210711 “திருநாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” — பத்ர பூர்ணிமா நிகழ்ச்சி சொற்பொழிவு
-
20210828 ஸ்ரீமத் பாகவதம் 1.10.33-35
-
20210523 அமோகனை தன் கருணையினால் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காப்பாற்றுதல்
-
20210710 சாந்திபூரில் ஸ்ரீ சைதன்யர் மற்றும் அவரது சகாக்களின் லீலைகளை கேட்பதால் கிடைக்கும் பலன்கள்
-
20210925 ஸ்ரீமத்- பாகவதம் 1.11.21
-
20211015 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - விழா துவக்கவுரை
-
20211003 ஸ்ரீமத் பாகவதம் 1.11.28
-
20210914 51வது சன்னியாச ஆண்டுவிழா உரை
-
20211108 ஸ்ரீல பிரபுபாதாவின் திரோபாவா விரிவுரை இஸ்கான் மாயாபூர்
-
20210624 ஹர்மொனிக்ஸ் லைப்-ஸ்டைல் நல்லாசிவுரை
-
20210830 ஸ்ரீமத் பாகவதம்