மூகம் கரோதி வாஞ்சலம் பங்கும் லங்காயதே கிரிம்
யத்-க்ருபா தம் அஹம் வந்தே ஸ்ரீ-குரும் தீன-தாரணம்
பரமானந்த-மாதவம் ஸ்ரீ சைதன்ய ஈஷ்வரம்
ஹரி: ஓம் தத் ஷத்
ஜெயபதாக ஸ்வாமி:
ஸம்ப்ரதாய-விஹினா யே மந்த்ரஸ் தே நிஷ்பல மத:
அத: கலௌ பவிஷ்யந்தி சத்வார: ஸம்ப்ரதாயின:
ஶ்ரீ-பிரஹ்மா-ருத்ர-ஷனக: வைஷ்ணவ: க்ஷிதி-பவன: சத்வரஸ் தே
கலௌ பாவ்ய ஹை உட்காலே புருஷோத்தமதத: கலௌ பவிஷ்யந்தி
வெவ்வேறு வைஷ்ணவ-சம்பிரதாய தலைவர்கள் பேசியதற்காக நான் நன்றி சொல்ல விரும்புகிறேன், குறிப்பாக பத்மபுராணம் கூறுகிறது: (மேற்கோள்) எனவே இந்த நான்கு சம்பிரதாயங்களில் இருந்து பெறப்படாத எந்த மந்திரமும் – ஸ்ரீ-சம்பிரதாயம், பிரம்ம-சம்பிரதாயம், குமார-சம்பிரதாயம் ருத்ர-சம்பிரதாயம், அதாவது ராமானுஜ-சம்பிரதாயம், மத்வாசார்ய-சம்பிரதாயம், நிம்பார்க-சம்பிரதாயம் மற்றும் வல்லபாசார்ய-சம்பிரதாயம். எனவே இந்த நான்கு சம்பிரதாயங்களும் இந்தச் சந்தர்ப்பத்தில் ஒன்றாகக் கொண்டுவரப்பட்டுள்ளன. பகவான் சைதன்யர் ஒவ்வொரு சம்பிரதாயத்திலிருந்தும் இரண்டு கருத்துக்களை எடுப்பதாகக் கூறினார். மத்வசம்பிரதாயத்திலிருந்து அவர் மாயாவாத தத்துவ கொள்கைகாரர்களின் கேவல-அத்வைத தத்துவத்தை தோற்கடிக்கும் சித்தாந்தத்தை , மேலும் கிருஷ்ணரின் மூர்த்தி நித்தியமானது என்பதையும் எடுத்து கொண்டார். ராமானுஜ-சம்பிரதாயத்தில் இருந்து, அவர் இரண்டு பகுதிகளை ஏற்றுக்கொண்டார்- கர்மா அல்லது ஞானத்தால் மாசுபடாத பக்தி, உணர்வு நிலையில் பகவான் விஷ்ணு அல்லது கிருஷ்ணர் யாரை சார்நதிருப்பது, நிம்பார்கஆசார்யாவிடமிருந்து அவர் இரண்டு பகுதிகளை ஏற்றுக்கொண்டார் - கிருஷ்ணரோடு கூடிய ராதாராணியின் அடைக்கலம் பெறுதல் மற்றும் கோபி-பாவத்தின் உயர்ந்த கருப்பொருள்களை.
நாம் பிரம்ம-மத்வ-கௌடீய-சம்பிரதாயத்தில் இருக்கிறோம். அதாவது பிரம்மாவிடமிருந்து நாரதர், வியாசர், மத்வர் ஆகியோர் தோன்றினர். எனவே மேலிருந்து கீழாக மத்வ சம்பிரதாயத்தில் ஜெயதீர்த்தர் மற்றும் மாதவேந்திர புரி, மாதவேந்திரபுரி, ஈஸ்வர புரி மற்றும் பகவான் ஸ்ரீ சைதன்யர் வரை. எனவே ஒவ்வொரு சம்பிரதாயத்திலும் பிரம்ம-சூத்திரத்தில் குறிப்பிடபட்டுள்ள திலகம் உள்ளது. விசிஷ்ட-அத்வைதம், சுத்த-அத்வைதம், த்வைத-அத்வைதம் மற்றும் சுத்த-அத்வைதம். பகவான் ஸ்ரீ சைதன்யரின் அசிந்த்ய-பேத-அபேத-தத்துவம். எனவே இவ்வழியில் வைஷ்ணவத்தை உலகம் முழுவதும் பரப்புவது எவ்வளவு கடினம் என்பதை பற்றி கூறி அதை பாராட்டியும் உள்ளனர். அதை செய்தார் தெய்வீக அருளாளரானஅபய் சரண் பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்கள். மற்றும் உலகின் எல்லாப்பகுதிகளிலும் ஹரே கிருஷ்ணா மற்றும் ஹரே ராமா புனித மந்திரத்தைக் கேட்டபதையும் பாராட்டியுள்ளனர். பகவான் ஸ்ரீ சைன்யர் உலகின் ஒவ்வொரு நகரத்திலும்கிராமத்திலும் அவருடைய புனித நாமம் உச்சரிக்கப்படும் என்று கணித்ததையும் அவர்கள் பாராட்டியுள்ளனர். ஸ்ரீ சம்பிரதாயத்தில் ஆண்டாள் புனித நாமங்களை உச்சரிக்கின்றாள். எல்லா சம்பிரதாயங்களும் ஒரு வழி அல்லது வேறு வழிகளில்ஹரிநாமத்தைஜபிக்கின்றனர். எனவே அவர்கள் அனைவரும் ஒன்றாக இணைப்பது மற்றும் அவர்களின் நல்ல விளக்கங்களைக் கேட்பது போன்றவை மிகவும் மங்களகரமானது. ஸ்ரீ சம்பிரதாயத்திலிருந்து ரமண தீக்ஷித்லுகாரு அவர்களிடமிருந்தும், சின்ன ஜீயர் சுவாமிகளிடமிருந்தும், பேராசிரியர் வசுதா நாராயணனிடமிருந்தும் நாம் கேட்கின்றோம். ருத்ரசம்பிரதாயத்தில் இருந்து ஸ்ரீ துவாரகேசலாலாஜி மஹாராஜா மற்றும் அவரது புனிதமான வ்ரஜராஜாஜி மஹாராஜா ஆகியோரிடமிருந்து கேட்கின்றோம். நிம்பார்க சம்பிரதாயத்திலிருந்து ஷ்யாமசரண தேவாஜி மஹாராஜா மற்றும் டாக்டர் பிரம்மச்சாரி சரணாவிடமிருந்து கேட்கின்றோம். மத்வ சம்பிரதாயத்திலிருந்து அடையாறு மடத்தின் தற்போதைய பெரியாறு சுவாமியாக இருக்கும் பூஜ்யரிஷிவிஸ்வப்ரிய தீர்த்த ஸ்வாமிகளிடமிருந்து கேட்கிறோம். மேலும் பேஜாவரமடத்தின் பூஜ்யஸ்ரீ ஸ்ரீ விஸ்வபிரசன்னதீர்த்தரிடமும்கேட்டுள்ளோம். வைஷ்ணவ ஆய்வுக் கழகத்தின் கிருஷ்ணஅபிசேககோஷிடமிருந்தும் கேட்டிருக்கிறோம், இவர் நமது பிரம்மா-மத்வ-கௌடீய-சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர். ஆகவே, இவரகள்அனைவரிடம் இருந்தும் கேட்பதில் நாம் நன்றியுடைவர்களாக இருப்போம், இவர்கள் அனைவரும் மிகப் பெரிய வைஷ்ணவர்கள், வைஷ்ணவிகள், இதை சிறப்பாக பார்த்து கொண்டமைக்கு எங்கள் கௌரங்கதாஸருக்கு நன்றி கூறுகிறோம். இப்போது புனிதமான கோபாலகிருஷ்ணகோஸ்வாமியிடம் இதை ஒப்படைக்கிறேன். ஹரே கிருஷ்ணா!
Lecture Suggetions
-
20210828 ஸ்ரீமத் பாகவதம் 1.10.33-35
-
20211017 ஸ்ரீமத் பாகவதம் 1.12.2
-
20210523 அமோகனை தன் கருணையினால் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காப்பாற்றுதல்
-
20210830 ஸ்ரீமத் பாகவதம்
-
20211108 இஸ்கான் காங்டாக் மற்றும் அம்பாலா பக்தர்களுக்கு ஸ்ரீல பிரபுபாதா திரோபாவா முகவரி
-
20211016 பங்களாதேஷ் பக்தர்களுக்கான செய்தி
-
20211016 உலகளாவிய தாமோதர விழா துவக்கவுரை
-
20211009 ஸ்ரீமத்பாகவதம் 1.11.34
-
20210711 “திருநாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” — பத்ர பூர்ணிமா நிகழ்ச்சி சொற்பொழிவு
-
20211017 இஸ்கான் சென்னையின் படன உற்சவத்தில் உரையாற்றுகிறார்.
-
20211015 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - விழா துவக்கவுரை
-
20211113 ஸ்ரீமத்-பாகவதம் 1.12.29
-
20210914 51வது சன்னியாச ஆண்டுவிழா உரை
-
20210925 ஸ்ரீமத்- பாகவதம் 1.11.21
-
20211108 ஸ்ரீல பிரபுபாதாவின் திரோபாவா விரிவுரை இஸ்கான் மாயாபூர்
-
20211003 கேள்வி மற்றும் பதில்கள்
-
20210905 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20210904 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20200903 ஜூம் கேள்வி பதில்கள்
-
20210930 கேள்வி மற்றும் பதில்கள்
-
20211003 ஸ்ரீமத் பாகவதம் 1.11.28
-
20210710 சாந்திபூரில் ஸ்ரீ சைதன்யர் மற்றும் அவரது சகாக்களின் லீலைகளை கேட்பதால் கிடைக்கும் பலன்கள்
-
20211120 ஸ்ரீமத் பாகவதம் 1.12.35 - 36
-
20210925 கேள்வி மற்றும் பதில் அமர்வு
-
20210624 ஹர்மொனிக்ஸ் லைப்-ஸ்டைல் நல்லாசிவுரை
-
20211001 கேள்வி மற்றும் பதில்கள்
-
20210625 ஸ்ரீ அத்வைத ஆச்சார்யர் சச்சிமாதாவை அழைத்துவர பல்லக்கினை அனுப்புதல்
-
20211002 பக்தி விருட்ச சம்மேளன உரையாற்றுதல்
-
20210918 கோலோக பாத்ரா பிரச்சாரத்திற்கு செல்க
-
20210918 வாமன தூவாதசி அன்று ஸ்ரீமத் பாகவதம்