20211108 இஸ்கான் காங்டாக் மற்றும் அம்பாலா பக்தர்களுக்கு ஸ்ரீல பிரபுபாதா திரோபாவா முகவரி
மூகம் கரோதி வாஞ்சலம் பங்கும் லங்காயதே கிரிம்
யத்-க்ருபா தம் அஹம் வந்தே ஸ்ரீ-குரும் தீன-தாரணம்
பரமானந்த-மாதவம் ஸ்ரீ சைதன்ய ஈஷ்வரம்
ஹரி: ஓம் தத் ஷத்
எனவே இன்று ஸ்ரீல பிரபுபாதாவின் திரோபாவாவின் புனித ஆண்டுவிழா. மேலும் அவர் விடைபெறும்போது வருத்தப்பட ஒன்றுமில்லை என்று கூறினார். ஏனென்றால் அவர் தனது புத்தகங்களை அவருக்குப் பதிலாகவிட்டுச்சென்றார். அவரது போதனைகள் அவரது புத்தகங்களில் உள்ளன. எனவே இந்த வழியில், மக்கள் இன்றளவும் ஸ்ரீல பிரபுபாதாவுடன் தொடர்பு கொள்ளலாம். பௌதிக உலகில், பக்தர்கள் நிபந்தனைக்குட்பட்டவர்களாக ஆகிவிடக் கூடாது என்பதில் ஸ்ரீல பிரபுபாதர் அக்கறை கொண்டிருந்தார். நாம் கிருஷ்ணரை நினைத்தால், கிருஷ்ணருக்குக் சேவைகளைச் செய்தால், கணவன்-மனைவி இருவரின் வாழ்க்கையும் தூய்மையாகும். ஸ்ரீல பிரபுபாதா, தனது ஆண் சீடர்கள், மற்றும் தனது பெண் சீடர்களிடம் மிகவும் அன்பாக இருந்தார். ஒவ்வொருவரும் தங்கள் கிருஷ்ண உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். பகவான் கிருஷ்ணரின் போதனைகளை விரிவுபடுத்தும் ஒரு பார்வை அவருக்கு இருந்தது. அதனால் குருக்ஷேத்திரம், அம்பாளுக்கு அருகில், கீதையைப் பெருமைப்படுத்தும் விதமாகச் சில நினைவுச்சின்னங்களை நிறுவ விரும்பினார். மாயாப்பூரில், நமது முந்தைய ஆச்சார்யர்களை திருப்திப்படுத்த, வேத கோளரங்கம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் விரும்பினார். பகவான் ஸ்ரீ சைதன்யர் தனது பெயர், உலகின் ஒவ்வொரு நகரத்திலும் கிராமத்திலும் பாடப்படும் என்று கணித்திருந்தார், எனவே ஸ்ரீல பிரபுபாதர் அதை நிறைவேற்ற விரும்பினார். மேலும், இந்தியா உலகின் மையம் என்பதையும் அவர் அறிந்திருந்தார், அதனால் அவர் பகவத்-கீதை மற்றும் ஸ்ரீமத்பாகவதம் போன்றவற்றின் போதனைகளை இந்தியாவிலிருந்து உலகம் முழுவதும் பரப்பச் சென்றார். அவர் அமெரிக்காவில் உள்ளவர்களிடம், நீங்கள் பிருந்தாவனம் மற்றும் மாயாபூரிலிருந்து வெகு தொலைவில் தொலைதூரப் பகுதியில் வாழ்கிறீர்கள். அமெரிக்கர்கள் தங்களை உலகின் மையம் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஸ்ரீல பிரபுபாதா அவர்களிடம் நீங்கள் உலகின் தொலைதூர பகுதியில் வாழ்கிறீர்கள் என்று கூறினார்! எனவே, ஸ்ரீல பிரபுபாதா ஒரு உண்மையான புரட்சியாளர். அவர் ஆஸ்திரேலியா சென்ற போது, நீங்கள் ஏழை நாட்டில் இருந்து வருகிறீர்கள், நாங்கள் பணக்கார நாடு, எங்களிடம் இருந்து என்ன எடுக்க வந்தீர்கள் என்றார்கள். ஸ்ரீல பிரபுபாதர், "பூனை மற்றும் நாய்களின் வாழ்க்கை யிலிருந்து உங்களைக் காப்பாற்ற வந்தேன்!" என்றார், அவர் ஒரு துணிச்சலான போதகர்! அவர் மறைந்த இந்த புனித நாளில், அவருடைய போதனைகளைப் பின்பற்றுவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, ஒவ்வொருவரும் அவருடைய போதனைகளைப் பின்பற்றுவதில் மிகவும் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும். இந்தப் புனித பூமியான விருந்தாவனத்தில் உங்களுடன் பேச என்னை அனுமதித்ததற்கு மிக்க நன்றி. ஹரே கிருஷ்ணா!-
Lecture Suggetions
-
20210828 ஸ்ரீமத் பாகவதம் 1.10.33-35
-
20210710 சாந்திபூரில் ஸ்ரீ சைதன்யர் மற்றும் அவரது சகாக்களின் லீலைகளை கேட்பதால் கிடைக்கும் பலன்கள்
-
20210925 ஸ்ரீமத்- பாகவதம் 1.11.21
-
20210905 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20210918 வாமன தூவாதசி அன்று ஸ்ரீமத் பாகவதம்
-
20211001 கேள்வி மற்றும் பதில்கள்
-
20211120 ஸ்ரீமத் பாகவதம் 1.12.35 - 36
-
20210930 கேள்வி மற்றும் பதில்கள்
-
20210624 ஹர்மொனிக்ஸ் லைப்-ஸ்டைல் நல்லாசிவுரை
-
20210914 51வது சன்னியாச ஆண்டுவிழா உரை
-
20211108 ஸ்ரீல பிரபுபாதாவின் திரோபாவா விரிவுரை இஸ்கான் மாயாபூர்
-
20211015 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - விழா துவக்கவுரை
-
20211017 இஸ்கான் சென்னையின் படன உற்சவத்தில் உரையாற்றுகிறார்.
-
20210925 கேள்வி மற்றும் பதில் அமர்வு
-
20211003 ஸ்ரீமத் பாகவதம் 1.11.28
-
20210523 அமோகனை தன் கருணையினால் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காப்பாற்றுதல்
-
20211016 பங்களாதேஷ் பக்தர்களுக்கான செய்தி
-
20211002 பக்தி விருட்ச சம்மேளன உரையாற்றுதல்
-
20211003 கேள்வி மற்றும் பதில்கள்
-
20210711 “திருநாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” — பத்ர பூர்ணிமா நிகழ்ச்சி சொற்பொழிவு
-
20210918 கோலோக பாத்ரா பிரச்சாரத்திற்கு செல்க
-
20211017 ஸ்ரீமத் பாகவதம் 1.12.2
-
20211009 ஸ்ரீமத்பாகவதம் 1.11.34
-
20210625 ஸ்ரீ அத்வைத ஆச்சார்யர் சச்சிமாதாவை அழைத்துவர பல்லக்கினை அனுப்புதல்
-
20211016 உலகளாவிய தாமோதர விழா துவக்கவுரை
-
20211113 ஸ்ரீமத்-பாகவதம் 1.12.29
-
20200903 ஜூம் கேள்வி பதில்கள்
-
20210830 ஸ்ரீமத் பாகவதம்
-
20210904 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20211014 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - சம்பிரதாயசம்மேளன முகவரி