மூகம் கரோதி வாஞ்சலம் பங்கும் லங்காயதே கிரிம்
யத்-க்ருபா தம் அஹம் வந்தே ஸ்ரீ-குரும் தீன-தாரணம்
பரமானந்த-மாதவம் ஸ்ரீ சைதன்ய ஈஷ்வரம்
ஹரி: ஓம் தத் ஷத்
ஜெயபதாக ஸ்வாமி: ஆகவே நாங்கள் விரஜ விலாஸ பிரபுவிடம் இருந்து ஸ்ரீல பிரபுபாதாவுக்கு 10,00,000 டாலர் தக்ஷிணை வழங்க விரும்புகிறோம் என்றும், ஏற்கனவே 8,00,000 வசூலித்துவிட்டோம் என்றும், 2,00,000 குறைவாக உள்ளது என்றும், அது ஒரு கோடி ரூபாய்க்கு சற்று அதிகம் என்றும் கேள்விப்பட்டோம். எனவே நீங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்த முறை இல்லை அடுத்த முறையாவது கொடுப்பதாக உறுதிமொழி எடுப்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன், அதன்பின் நாம் இந்த தக்ஷிணையை ஸ்ரீல பிரபுபாதாவுக்கு வழங்கலாம். உண்மையில், வேதக் கோளரங்கம் கோயிலில் ஏராளமான பொது மக்கள் பங்கேற்கும் முதல் பெரிய பொது நிகழ்ச்சி இதுவாகும். இந்த கோவில் அறை மிகவும் பிரமாண்டமாகவும், போதுமானதாகவும், பரவசமான பக்தர்களின் கூட்டமாக இருப்பதையும் நாம் காணலாம். இருந்தாலும் இன்னும் கூட்டமாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். அதனால் தெய்வங்களை வழிபட ஏராளமானோர் வருவார்கள். உண்மையில், ஸ்வாஹா தேவி தாஸி கூறியது போல், பகவான் நித்யானந்தா ஜீவ கோஸ்வாமியை பரிக்ரமத்திற்கு அழைத்துச் சென்ற போது , அவர் ஒரு அத்பூத மந்திர் ஹோய்பே பிரகாஷா, கௌரங்கர் நித்ய-சேவா ஹோய்பே விகாஸா என்று கணித்தார். அந்தக் கணிப்பை இந்தக் கோயில் பூர்த்தி செய்யும் என்று நம்புகிறோம். எப்படியிருந்தாலும், அம்பரீஷா பிரபு மற்றும் ஸ்வாஹா தேவி தாஸிக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். உண்மையில்கிரஹஸ்தர்களில்,கணவனும் மனைவியும் ஒன்றாகவே மாறுகிறார்கள். எனவே, இன்று நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கிறோம், நாங்கள் ஒரு முழு அலகை கொண்டிருக்கிறோம்! அதனால் இந்த ஆலயம் ஓரளவு கட்டி முடிக்கப்பட்டாலும் எவ்வளவு அழகாக இருக்கிறது.
பகவான்ஸ்ரீ சைதன்யரின் சங்கீர்தனஇயக்கத்தை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்ற விருப்பம் ஸ்ரீல பிரபுபாதாவுக்கு இருந்தது. பிருந்தாவனத்தில் இருந்தவர்களிடம் தான் மேற்கு நாடுகளுக்குச் செல்ல விரும்புவதாகக் கூறினார். பகவான் ஸ்ரீசைதன்யர் தனது செய்தி உலகம் முழுவதும் பரவும் என்று அப்போதே கணித்திருந்தார். ஆனால் விருந்தாவனத்தின் மற்ற சாதுக்கள், ஓ, இது நாகரீக உலகத்துக்கானது அல்ல, இது இந்தியாவுக்கானது என்றார்கள். இது உலகம் முழுவதும் பரவும் என்றும் அவர்கள் நம்பவில்லை. ப்ருதிவைட் என்பதன் அர்த்தம் உலகம் முழுவதும் என்பதாகும். பகவான் ஸ்ரீ சைதன்யரின் இச் செய்தியை ஸ்ரீல பிரபுபாதா எவ்வாறு பெற்று , பின் இவ்விஷயத்தினை மேற்கத்திய நாடுகளுக்கு கொண்டு சென்று இந்த பெரிய தியாகத்தை மேற்கொண்டார். அந்த நேரத்தில் அவரிடம் இவ்வளவு பெரிய பக்தர்கள் இல்லை - அவரிடம் சில ஸ்ரீமத்-பாகவத புத்தகங்களும் அவரும் மட்டுமே இருந்தார்கள். ஒருவர் கேட்டார், "நீங்கள் மேற்கத்திய நாடுகளுக்கு செல்கிறீர்களா?" என்று, அவர் கூறினார் “ஸ்ரீமத்-பாகவதம் போகிறதுநானும் உடன் செல்கிறேன்” என்று. ஸ்ரீமத்-பாகவதம் கிருஷ்ணரின் இலக்கிய அவதாரம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். 1968ல் நான் முதன்முதலாக கோவிலுக்கு வந்தபோது, நான் ஸ்ரீமத்-பாகவதத்தின் முதல் காண்டத்தின் முதல் நகலை விற்பனை செய்தேன். அந்த வழியில் எனக்கு ஆசி கிடைத்தது. மேலும் ஸ்ரீல பிரபுபாதா 10வது காண்டம் வரை அனைத்து பாகவதத்தையும் மொழிபெயர்த்துள்ளார். பின்னர் 10வது காண்டத்தை முடித்து 11வது மற்றும் 12வது காண்டத்தை எழுத அவர் தனது சீடர்களை வைத்திருந்தார். அவர் சைதன்ய சரிதாம்ருதத்தையும், பகவத் கீதை உண்மை உருவில் என்பதையும் எழுதினார், மற்றும் பல சிறிய புத்தகங்கள். கிருஷ்ணா புத்தகத்தையும் எழுதினார், இது 10வது காண்டத்தின் சுருக்கப்பட்டவேதமாகும்.
அவர் மாயாபூருக்கு வருடத்திற்கு இரண்டு முறை வீதம் பலமுறை வருவார். கௌர பூர்ணிமா நேரத்தில் வருவார், மேலும் உலகம் முழுவதிலுமிருந்து வரும் பக்தர்கள் கௌர பூர்ணிமா நேரத்தில் மாயாப்பூரில் கூட வேண்டும் என்று கூறிவார். இந்த நேரத்தில் அவரும் வந்திருந்தார். கார்த்திகைக்கு முன்போ அல்லது கார்த்திகைக்குப் பிறகோ, வழக்கமாக அவர் கார்த்திகை மாதத்தை விருந்தாவனத்தில் தான் கழிப்பார். ஆனால் அவர் அதற்கு முன் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் மாயாப்பூருக்கு வருவார் என்பதும், தாமரை கட்டிடத்திற்கு வெளியே நின்று மக்கள் பார்ப்பதும், தூரத்தில் அவர் கார் வருவதை கண்டதும் சைரன் கொடுப்பதும் சரித்திர உண்மை. அது ஒரு உற்சாகம்! “எல்லாப் புகழும்! ஸ்ரீல பிரபுபாதர் வருகிறார்!” பிரஜா விலாச பிரபு, அம்பரீஷ பிரபு மற்றும் ஸ்வாஹா தேவி தாசி ஆகியோருக்கு நன்றி, ஸ்ரீல பிரபுபாதா மீண்டும் பக்தி பரவசத்தில் வருவதை காணும் சுவையை நாங்கள் கொண்டிருக்கிறோம்! அந்தச் சமயத்தில், ஸ்ரீல பிரபுபாதாவுக்குக் கொடுக்க எங்களிடம் எதுவும் இல்லை. கட்டிடம் முழுமை அடையாமல் இருந்தது, அவரது முன்னிலையில் தான் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. பின்னர் இங்கே TOVP வேத கோளரங்கம், ஸ்ரீல பிரபுபாதாவின் முன்னிலையில் விரைவில் கட்டி முடிக்கப்படும் என்று நம்புகிறோம். ஒரு மில்லியன் டாலர் உறுதிமொழிகள் அடுத்த ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் நிறைவேறும் என்று நம்புகிறோம். நீங்களும் அதைப் பற்றி சிந்திப்பீர்கள் என்று நம்புகிறேன்.
எனவே இந்த வேதக் கோளரங்கம் கோவிலைக் கட்ட வேண்டும் என்ற அவரது கனவை நிறைவேற்ற ஸ்ரீல பிரபுபாதாவுக்கு உதவவும், அவருக்கு சேவை செய்வதற்கும் நன்றி செலுத்துவதற்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். கோவிலை இந்த நிலைக்கு கொண்டு வருவதற்கு உழைத்த அனைத்து பக்தர்களுக்கும், அம்பரீஷ பிரபு, ஸ்வாஹா தேவி தாசி மற்றும் அனைத்து குழுவினருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். வேதக் கோளரங்கம் கோயில் அருங்காட்சியகத்தில் கண்காட்சிகளை எவ்வாறு காட்சி படுத்துவது என்பது குறித்து மேற்குப் பகுதியிலும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். ஆகவே, இது நமது தலையில் உள்ள நகை, ஷிரோமணி, பிரச்சார கடவுளாகிய பகவான் ஸ்ரீ சைதன்யரின் கிரீடம் , அந்த மகுடத்தில் உள்ள நகை இந்த கோவில். எனவே ஸ்ரீல பிரபுபாதர் உலகம் முழுவதும் அயராது சென்று, தனிப்பட்ட முறையில் 108 கோவில்களை நிறுவினார். பின்னர் அவர் எங்களிடம் கூறினார், தான் மறைந்த பிறகு குறைந்த பட்சம் அவரது சொத்துக்களை விற்காதிருக்க வேண்டும் என்று, அதன் காரணமாகவே அவர் செய்தவைகளை முடிந்தவரை பாதுகாக்கிறோம். இயன்றவரை நம்மால் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.ஆனால் இன்று நம்மிடம் சுமார் 800 கோயில்கள், ஆயிரக்கணக்கான பக்தி விருட்சக் குழுக்கள், நாமஹட்டா குழுக்கள் மற்றும் கீதா-சக்கரங்கள் மற்றும் பல உள்ளன என்று நினைக்கிறேன். எனவே, ஸ்ரீல பிரபுபாதரின் கருணையால் அனைவரும் பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் செய்தியையும் பஞ்ச தத்துவத்தையும் பிரசாரம் செய்ய தூண்டப் படுகிறார்கள். எனவே, தயவுசெய்து அதைத் தொடருங்கள், ஸ்ரீல பிரபுபாதர் மிகவும் மகிழ்வார். வேறு நிகழ்ச்சிகள் இருக்கலாம் என்பதால் நான் அதிக நேரம் பேசமாட்டேன்.
Lecture Suggetions
-
20211113 ஸ்ரீமத்-பாகவதம் 1.12.29
-
20211001 கேள்வி மற்றும் பதில்கள்
-
20210925 கேள்வி மற்றும் பதில் அமர்வு
-
20200903 ஜூம் கேள்வி பதில்கள்
-
20210624 ஹர்மொனிக்ஸ் லைப்-ஸ்டைல் நல்லாசிவுரை
-
20210904 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20210711 “திருநாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” — பத்ர பூர்ணிமா நிகழ்ச்சி சொற்பொழிவு
-
20211002 பக்தி விருட்ச சம்மேளன உரையாற்றுதல்
-
20210925 ஸ்ரீமத்- பாகவதம் 1.11.21
-
20210918 வாமன தூவாதசி அன்று ஸ்ரீமத் பாகவதம்
-
20211016 பங்களாதேஷ் பக்தர்களுக்கான செய்தி
-
20210830 ஸ்ரீமத் பாகவதம்
-
20210828 ஸ்ரீமத் பாகவதம் 1.10.33-35
-
20211003 கேள்வி மற்றும் பதில்கள்
-
20211017 இஸ்கான் சென்னையின் படன உற்சவத்தில் உரையாற்றுகிறார்.
-
20211009 ஸ்ரீமத்பாகவதம் 1.11.34
-
20210625 ஸ்ரீ அத்வைத ஆச்சார்யர் சச்சிமாதாவை அழைத்துவர பல்லக்கினை அனுப்புதல்
-
20211014 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - சம்பிரதாயசம்மேளன முகவரி
-
20210710 சாந்திபூரில் ஸ்ரீ சைதன்யர் மற்றும் அவரது சகாக்களின் லீலைகளை கேட்பதால் கிடைக்கும் பலன்கள்
-
20210930 கேள்வி மற்றும் பதில்கள்
-
20210914 51வது சன்னியாச ஆண்டுவிழா உரை
-
20211120 ஸ்ரீமத் பாகவதம் 1.12.35 - 36
-
20210523 அமோகனை தன் கருணையினால் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காப்பாற்றுதல்
-
20211108 ஸ்ரீல பிரபுபாதாவின் திரோபாவா விரிவுரை இஸ்கான் மாயாபூர்
-
20211108 இஸ்கான் காங்டாக் மற்றும் அம்பாலா பக்தர்களுக்கு ஸ்ரீல பிரபுபாதா திரோபாவா முகவரி
-
20210918 கோலோக பாத்ரா பிரச்சாரத்திற்கு செல்க
-
20211016 உலகளாவிய தாமோதர விழா துவக்கவுரை
-
20211003 ஸ்ரீமத் பாகவதம் 1.11.28
-
20210905 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20211017 ஸ்ரீமத் பாகவதம் 1.12.2