மூகம் கரோதி வாஞ்சலம் பங்கும் லங்காயதே கிரிம்
யத்-க்ருபா தம் அஹம் வந்தே ஸ்ரீ-குரும் தீன-தாரணம்
பரமானந்த-மாதவம் ஸ்ரீ சைதன்ய ஈஷ்வரம்
ஹரி: ஓம் தத் ஷத்
ஜெயபதாகா ஸ்வாமி: தற்போது நான், உலகளாவிய தாமோதர தீப நிகழ்ச்சியை துவக்கி வைப்பதற்காக மலேசியாவில் இருக்கின்றேன். இந்த நிகழ்ச்சியின் முடிவில், பங்களாதேஷ் பக்தர்களுக்காக நரசிம்ம கவசத்தைப் படிப்பதாக கூறியுள்ளனர். பங்களாதேஷ் பக்தர்களின் நிலைமையால் உலக மக்கள் அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாயாபுர் இத்தகைய திட்டத்தை ஏற்பாடு செய்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது கலியுகம். கலியுகத்தில் காரணமில்லாமல் சண்டை சச்சரவுகள் உருவாகும். எத்தகைய முயற்சியுமின்றியே, இதுபோன்ற சூழ்நிலைகள் உருவாகிவிடுகின்றன. இது இரண்டு மூங்கில் மரங்கள் காற்றில் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து காட்டுத் தீயை உருவாக்குவதைப் போன்றதாகும். எளிமையான காரணமே பெரும் காட்டுத்தீக்கு காணமாகிவிடுகிறது. இவ்விதமாக, கலி யுகத்தில், காரணமின்றியே சண்டை சச்சரவுகள் உருவாகிவிடுகின்றன. மக்கள், சில தவறான வதந்திகளால் கொந்தளிக்கின்றனர். நாங்கள் அனைத்து மதத்தினரையும் மதிக்கிறோம், அனைத்து மதங்களையும் பெரிதுமே போற்றுகிறோம். ஆனால், தவறான தகவல்களைப் பரப்பும் ஃபேஸ்புக் போன்றதான சமூக ஊடகங்களின் தவறான பயன்பாட்டினால், எண்ணற்ற பிரச்சனைகள் உருவாகின்றன. இவ்விதமாக, பங்களாதேசத்து இந்துக்களும் முஸ்லிம்களும், ஒற்றுமையுடன் அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் கலியுகத்தின் தாக்கத்தால் தேவையின்றி சிலர் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
பங்களாதேஷ் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பு நிலவுவது குறித்து நாங்கள் மிகவும் கவலை கொள்கிறோம். பங்களாதேஷில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருப்பதால் அவர்கள் பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். சமீபத்தில் நியூசிலாந்தில் ஒரு மசூதி தாக்கப்பட்டது மற்றும் ஆப்கானிஸ்தானில் சில பயங்கரவாத குழுக்கள் ஷியா மசூதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும் அங்கு பலர் கொல்லப்பட்டனர். இவையனைத்தும் கலியுகத்தின் விளைவுகளே. உலகில் எங்கு சிறுபான்மையினராக இருந்தாலும் அவர்கள் துன்புறுத்தப்படுவதை நாம் காண்கிறோம். இஸ்கான் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இருந்தாலும், சில சமயங்களில் அவர்களும் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். ஆனால் இது அதிகப்படியானது - இதற்கு முன்பு இதுபோன்ற சம்பவத்தை நாங்கள் பார்த்ததில்லை. பங்களாதேஷில் இதுபோன்ற கலவர கும்பல் அப்பாவி இந்துக்களை தாக்கியுள்ளனர். இந்துக் கோவில்களையும் முகாம்களையும் அழித்துள்ளனர். எனவே பங்களாதேஷில் உள்ள நமது சகோதர சகோதரிகள் இதுபோன்றதான ஆத்யாசாரத்திற்கு ஆளாகியிருப்பது குறித்து நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம். ஆன்மீகவாதிகளும், அரசாங்கமும் இது போன்றதான பிரச்சனைகளை விரும்பாது என்பதை நாங்கள் உறுதிபடுத்துகிறோம். எனவே, பல்வேறு மதங்கள் மீது நடத்தப்படும் இதுபோன்றதான அறிவற்ற தாக்குதலுக்கு எதிராக வெகுஜனப் போராட்டம் நடத்தப்படும் என்று நம்புகிறோம். மலேசியாவிலும் பிற நாடுகளிலும் நரசிம்மர் கவசமந்திரங்களை உச்சரித்து வருகிறார்கள். இதற்காக நாம் மாயாபுரில் என்ன மேற்கொண்டுள்ளோம் என்பதை கேட்க விரும்பினேன்.
நாங்கள் ஒரு யாகம் செய்கிறோம் என்றும், நரசிம்மதேவருக்கு விசேஷ பூஜை நடப்பதாகவும் கேள்விப்பட்டேன். நானும் பிரார்த்திக்கிறேன், கிருஷ்ணர் மகிழ்வுற்றால் மருத்துவமனையில் உள்ள பக்தர்கள் குணமடைவர், கொலை செய்யப்பட்ட பக்தர்கள் கடவுளிடம் திரும்பிச்செல்வர், கிருஷ்ண பக்தராகிய அவர் தனது உயிரைத் தியாகம் செய்துள்ளார். பங்களாதேஷின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு நாமஹட்டாக்கள், மற்றும் கோவில்கள் தாக்கப்பட்டுள்ளதைக் கேள்விப்பட்டோம். சிலர் துப்பாக்கி குண்டுகளால் சுடப்பட்டுள்ளனர். உலகின் மற்றைய இடங்களில் அமைதி நிலவவேண்டும் எனவும், இதுபோன்றதான அசுரத்தனமான, பயங்கரவாத செயல்கள் இருக்காது என்றும் நம்புகிறோம். நாம் தர்ம சாந்தி கொள்ளவேண்டும். மதங்களுக்கு இடையே அமைதி நிலவவேண்டும். நாம் அனைவரும் ஒரே பரமபுருஷரையே வணங்குகிறோம். சிலர் துர்கா தேவி அல்லது மற்றைய தேவ தேவிகளையும் கூட வழிபடுகிறார்கள். அவள் பரம புருஷரின் சக்தியாவாள், அவள் ஒரு தேவதையாக கருதப்படுகிறாள். துர்கா பூஜைக்கான பழங்கால முறை என்னவென்றால், முதலில் நீங்கள் சமர்ப்பணங்களை சாலக்ராம-சிலாவிற்கு அர்ப்பணித்து, அதன்பின்னரே துர்கா தேவிக்கு அர்ப்பணிக்க வேண்டும். இவ்வாறாக குரான் கூட முகம்மதியர்களிடம், ஒரு தேவதூதன் மூலமாக அவரை அமைதிப்படுத்துங்கள் என்கிறது. எப்படியிருந்தாலும், மதங்களுக்கிடையில் அன்பும் அமைதியும் நிலவவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறாக, எங்கள் உணர்வுகள் மூலம், நாங்கள் பங்களாதேஷ் பக்தர்களை சென்றடைகிறோம்.
மேலும் இது போன்று இனி நடக்காது என்று பிரதமர் ஷேக் ஹசீனா கூறியதாக கேள்விப்பட்டு அதில் அவர் வெற்றி பெறுவார் என நம்புகிறோம். மேலும் ஸ்ரீல பிரபுபாதர் கலியுகத்தில் இவைகள் நடக்கும் என்று கூறியுள்ளார். எனவே இதுபோன்றதான செயல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பதை உலக சமூகம் கருத்தில் கொள்ளும் என்று நம்புகிறோம். நேற்று நாங்கள் ஸ்ரீல பிரபுபாதர் TOVP க்கு வந்ததை கொண்டாடிக்கொண்டிருந்தோம். அதனால் நேற்று எங்களால் எதனையும் கேட்கமுடியவில்லை. காலையில் எழுந்ததும் இந்த சோகமான செய்தி கிடைத்தது. இந்த விஷயம் தொடர்பாக அனைத்து ஜிபிசி உறுப்பினர்களும் மிகவும் கலக்கமடைந்துள்ளனர். அவர்கள் தங்கள் சக்திக்கு ஏற்ப அனைத்தையும் செய்ய முயற்சிப்போம் என்று கூறியுள்ளனர். எனவே, மாயாபுரில் நடைபெறும் இந்த அணிவகுப்பு ஒரு நல்ல தொடக்கம் என்று நினைக்கிறேன், உலகம் முழுவதும் நாம் ஊர்வலங்களும் போராட்டங்களும் நடத்த வேண்டும். மாயாபுரில் நடத்தப்படும் இந்த அணிவகுப்பை, இந்த இயக்கம் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரிப்பதன் மூலமாக மேற்கொள்ளும். அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக போராட வேண்டும். மேலும் இது வேற்றுமையில் ஒற்றுமையை உருவாக்கும் என நம்புகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை. மிக்க நன்றி. ஹரே கிருஷ்ண!
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
Lecture Suggetions
-
20210523 அமோகனை தன் கருணையினால் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காப்பாற்றுதல்
-
20211003 கேள்வி மற்றும் பதில்கள்
-
20211014 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - சம்பிரதாயசம்மேளன முகவரி
-
20210918 கோலோக பாத்ரா பிரச்சாரத்திற்கு செல்க
-
20210625 ஸ்ரீ அத்வைத ஆச்சார்யர் சச்சிமாதாவை அழைத்துவர பல்லக்கினை அனுப்புதல்
-
20210904 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20210905 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20211017 இஸ்கான் சென்னையின் படன உற்சவத்தில் உரையாற்றுகிறார்.
-
20211003 ஸ்ரீமத் பாகவதம் 1.11.28
-
20210918 வாமன தூவாதசி அன்று ஸ்ரீமத் பாகவதம்
-
20210828 ஸ்ரீமத் பாகவதம் 1.10.33-35
-
20211108 ஸ்ரீல பிரபுபாதாவின் திரோபாவா விரிவுரை இஸ்கான் மாயாபூர்
-
20211009 ஸ்ரீமத்பாகவதம் 1.11.34
-
20211108 இஸ்கான் காங்டாக் மற்றும் அம்பாலா பக்தர்களுக்கு ஸ்ரீல பிரபுபாதா திரோபாவா முகவரி
-
20211016 உலகளாவிய தாமோதர விழா துவக்கவுரை
-
20210930 கேள்வி மற்றும் பதில்கள்
-
20210830 ஸ்ரீமத் பாகவதம்
-
20200903 ஜூம் கேள்வி பதில்கள்
-
20211120 ஸ்ரீமத் பாகவதம் 1.12.35 - 36
-
20210914 51வது சன்னியாச ஆண்டுவிழா உரை
-
20210711 “திருநாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” — பத்ர பூர்ணிமா நிகழ்ச்சி சொற்பொழிவு
-
20211017 ஸ்ரீமத் பாகவதம் 1.12.2
-
20210710 சாந்திபூரில் ஸ்ரீ சைதன்யர் மற்றும் அவரது சகாக்களின் லீலைகளை கேட்பதால் கிடைக்கும் பலன்கள்
-
20211002 பக்தி விருட்ச சம்மேளன உரையாற்றுதல்
-
20210624 ஹர்மொனிக்ஸ் லைப்-ஸ்டைல் நல்லாசிவுரை
-
20211015 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - விழா துவக்கவுரை
-
20210925 ஸ்ரீமத்- பாகவதம் 1.11.21
-
20210925 கேள்வி மற்றும் பதில் அமர்வு
-
20211113 ஸ்ரீமத்-பாகவதம் 1.12.29
-
20211001 கேள்வி மற்றும் பதில்கள்