மூகம் கரோதி வாஞ்சலம் பங்கும் லங்காயதே கிரிம்
யத்-க்ருபா தம் அஹம் வந்தே ஸ்ரீ-குரும் தீன-தாரணம்
பரமானந்த-மாதவம் ஸ்ரீ சைதன்ய ஈஷ்வரம்
ஹரி: ஓம் தத் ஷத்
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய
ஜெயபதாக ஸ்வாமி: இன்று ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த நாள், ஜனாமாஷ்டமி. எனவே கிருஷ்ணர் எப்படி தோன்றினார் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நான் புரிந்துகொண்டேன். கம்சனின் சிறைச்சாலைக்கு அவர் எப்படி வந்தார், அங்கு தான் அவர் நான்கு கரங்களுடன் முதலில் தோன்றினார். இது அவர் பரம புருஷர் என்பதை நிரூபிப்பதற்காக அமைந்தது. தேவகி பகவானை வாத்ஸல்ய பாவத்தில் அல்லது சாதாரண குழந்தை வடிவில் தரிசிக்க வேண்டினாள். இவ்வாறே இறைவன் குழந்தையாக உருவெடுத்து வாசுதேவரை வேறு இடத்திற்கு தன்னை அழைத்துச் செல்லும்படி கட்டளையிட்டார். அப்படியென்றால் இந்த கடந்த கால லீலா நிகழ்வுகளை எல்லாம் நீங்கள் கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். கிருஷ்ணரின் மாய சக்திகளால் காவலர்கள் அனைவரும் எப்படி உறங்கினர். வாசுதேவனின் தளைகள் எவ்வாறு திறக்கப்படுகின்றன, மற்றும் அவர் குழந்தை கிருஷ்ணனை எவ்வாறு கோகுலத்திற்கு அழைத்துச் சென்றார் போன்றவை பற்றி அறிவீர்கள். பிரம்மாவின் ஒரு நாளுக்கு ஒருமுறை, கிருஷ்ணர் வருகிறார். ஒரு நாள் 1000 யுகங்கள், அந்த யுகங்களில் ஒரு யுகத்தில் அவர் தோன்றுகிறார். மேலும் அவர் தூய்மையான பக்தியுடன் உலகம் முழுவதையும் ஆசீர்வதிக்க வருகிறார். விருந்தாவனம், மதுரா, துவாரகை ஆகிய இடங்களில் கடந்தகால நிகழ்வுகளை பக்தர்களுக்குக் காட்ட வருகிறார். ஆனால் இந்த விருந்தாவன லீலா மிகவும் கவர்ந்திழுக்கக் கூடியது. உண்மையில், இந்த கிரகத்தில் நாம் கொண்டிருக்கும் பிருந்தாவனம் ஆன்மீக உலகில் உள்ள பிருந்தாவனத்திலிருந்து வேறுபட்டதல்ல. இப்போது கொஞ்சம் காய்ந்திருந்தாலும் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எங்கும் பசுமையாக மிக அழகாக இருந்தது. பகவான் கிருஷ்ணருக்குள் அனைத்து விஷ்ணு அவதாரங்களும் உள்ளன. மகாவிஷ்ணு சங்கர்சனின் விரிவங்கம் மற்றும் அவர் நாராயணனின் விரிவங்கம். நாராயணா் என்பது சதுர் வியூஹத்தின் விரிவங்கம். சதுர் வியூஹங்கள் பலதேவரின் முழுமையான விரிவங்கங்கள். பலதேவா கிருஷ்ணரின் முதல் விரிவங்கம். இந்த விரிவங்கங்கள் அனைத்தும் கிருஷ்ணரின் உடலில் உள்ளன. எனவே அசுரர்களைக் கொல்பவர் கிருஷ்ணரின் விஷ்ணு அம்சம். ஆன்மீக உலகில் இப்போதும் பேய்கள் உள்ளன, அதனால் அசுரர்கள் ஜட உலகிலும், விஷ்ணு அவதாரங்கள் ஜட உலகிலும் உள்ளனர். கிருஷ்ணா, தனது கடந்த கால லீலா நிகழ்வுகளைக் காட்டுகிறார். கிருஷ்ணரால் விருந்தாவனத்தில் நட்பு, பெற்றோர் பாசம் மற்றும் தாம்பத்திய அன்பு வெளிக் காட்ட்படுகிறது. இதை நிகழ்த்த கிருஷ்ணர் கீழ் இறங்கி வருகிறார். ஆனால் இந்த நிகழ்வுகளை தூய பக்தர்களின் வாயிலிருந்து கேட்க வேண்டும். மக்கள் கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதில் சிறிதளவு கூட ஆர்வம் காட்டினால், அவர்கள் விடுதலை பெறுகிறார்கள். ஒவ்வொருவரும் தங்களை உடல் என்று நினைக்கிறார்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கையின் குறிக்கோளாக புலன் திருப்தியைக் கொண்டிருக்கிறார்கள் உண்மையில், இவர்களுக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பெருமைகள், ஸ்ரீ கிருஷ்ணரின் இனிமை ஆகியவை புரியவில்லை. அதனால்தான், கிருஷ்ணரின் இந்த அன்பை விநியோகிக்க, பகவான் கிருஷ்ணர் கௌரங்காவின் வடிவில் வந்துள்ளார். எனவே ஸ்ரீல பிரபுபாதா அவர் கௌர வாணியைத் தருகிறார் என்று பிரார்த்திக்கிறோம். சைதன்ய பகவானின் பக்தர்களாக இருப்பவர்கள் ஒரே நேரத்தில் கோலோக விருந்தாவனத்திலும் சைதன்ய லீலையிலும் இருப்பார்கள். கோலோக விருந்தாவனத்திற்கு நான்கு முறையான அணுகுமுறைகள், அதாவது பிருந்தாவனம், மதுரா மற்றும் துவாரகா மற்றும் ஸ்வேதத்வீபா ஆகியவை மூலமாக அணூகலாம். மேலும் ஸ்வேதத்வீபா பகவான் ஸ்ரீ சைதன்யரின் ஸ்தலமாகும். நீங்கள் விரும்பினால், கிருஷ்ண லீலையில், கிருஷ்ணரிடம் முழுமையாக சரணடைபவர்கள் அவருடைய கருணையைப் பெறலாம். ஆனால் பகவான் ஸ்ரீ சைதன்யர் கிருஷ்ணரை விட கருணை உள்ளவர். அவர் சுதந்திரமாக கிருஷ்ணரின் அன்பைக் கொடுத்தார். நாங்கள் கிருஷ்ண பக்தர்கள் என்று ஸ்ரீல பிரபுபாதர் கூறினார். எனவே, அவர் அவதாரம் மற்றும் கிருஷ்ண ஜன்மாஷ்டமி மற்றும் கௌர பூர்ணிமா அன்று முழு விரதத்தை மேற்கொள்வது கடமையாகும். ஜன்மாஷ்டமி அன்று நள்ளிரவு வரை விரதம் இருந்து அனுகல்பம் செய்கிறோம். மேலும் கௌர பூர்ணிமா அன்று சந்திரன் உதிக்கும் வரை விரதம் இருந்து பின் அனுகல்பம் எடுக்கிறோம். மற்ற நாட்களில் முழு விரதம் அல்லது தானியங்களை எடுத்துக் கொள்ளல் என்பது விருப்பத்தை பொறுத்தது .
எனவே நாம் பிறக்கிறோம், நமக்கு வேறு வழியில்லை. நம் தாய் யார், தந்தை யார், இவற்றை நாம் தேர்ந்தெடுக்க முடியாது. பகவான் கிருஷ்ணர் இவர்களை நமக்காக அனுப்புகிறார். எனவே, இந்த குழந்தைகள் வைகுண்ட குழந்தைகள் என்று ஸ்ரீல பிரபுபாதர் கூறினார். ஆனால் பகவான் கிருஷ்ணர் வரும்போது, அவருடைய பெற்றோர் யார், அவர் எங்கு தோன்றுவார் என்பது எல்லாம் முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகிறது. கிருஷ்ணரின் தோற்றம் அதீதமானது என்பதையும், அவரது தோற்றம், அவரது லீலா நிகழ்வுகள் அனைத்தும் அதீதமானது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறினார்:
ஜன்ம கர்ம ச மே திவ்யம்
ஏவம் யோ வேத்தி தத்வதஹ:
த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம
நைதி மாம் எதி ஸோ அர்ஜுன
இறைவனின் தோற்றம் மற்றும் அவரது செயல்பாடுகள் அனைத்தும் அதீதமானவை என்பதை நாம் புரிந்து கொண்டால், இந்த ஜடத்தை விட்டு வெளியேறிய பிறகு, நாம் மீண்டும் கடவுளின் வீட்டிற்கு திரும்புவோம், மீண்டும் இந்த ஜட உலகத்திற்கு வர மாட்டோம்.
எனவே பௌதிகவாதிகள் கிருஷ்ணரின் தோற்றம் ஒரு சாதாரண விஷயம் போல் இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் எல்லா பக்தர்களும் கிருஷ்ணரின் தோற்றம் அதீதமானது என்பதை புரிந்துகொள்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். அவர் தனது தாயார் யார், அவரது தந்தை யார் என்பதை அவர் தேர்ந்தெடுக்கிறார். கிருஷ்ணரைத் தங்கள் மகனாகப் பெறுவதற்கு அவர்கள் எப்படி கடுமையான துறவறம் செய்தார்கள் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். பாகவதத்தின் பகுதிகளில் கிருஷ்ணரின் ஒவ்வொரு லீலா நிகழ்வும் தெய்வீகமயமானது. அதனால்தான் ஒவ்வொரு க்ருஹஸ்தரின் வீட்டிலும் ஸ்ரீமத்-பாகவதம் இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம். ஸ்ரீமத்-பாகவதம் தொகுப்பை வைத்திருக்கும் திறன் அவர்களிடம் இல்லையென்றால், குறைந்தபட்சம் கிருஷ்ணர் புத்தகத்தையாவது வைத்துக் கொள்ளலாம். மொத்தத்தில், ஸ்ரீமத்-பாகவதம் மற்றும் சைதன்ய-சரிதாமிருதத்தின் முழு தொகுப்பையும் வைத்திருக்கலாம். கிருஷ்ணர் வந்து அவருடைய தோற்றம் மற்றும் மறைவு அனைத்தும் தெய்வீகமானது என்பதை நிறுவுகிறார். எனவே அவரது தோற்றம், இருப்பு, மறைதல் ஆகிய அனைத்தும் தெய்வீகமயமானவை. ஜட இயற்கையின் மூன்று கட்டுப்பாட்டு விதிகளுக்கு அப்பாற்பட்டது. மேலும் அவர் பரம புருஷ பகவான் ஒரு நபர் என்பதைக் காட்டுகிறார். பல மதங்களுக்கு கடவுள் என்றால் என்ன என்று தெரியாது, கடவுள் அருவமானவர் என்று நினைக்கிறார்கள். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, அவர் குர்ஆனைப் பற்றிப் பேசினார், மேலும் அல்லாஹ் ஒரு நபர் என்று பதான்களை நம்பவைத்தார். நான் அஜர்பைஜானில் ஒருவரை குர்ஆனைப் படிக்க வைத்தேன், அப்போது அவர் அல்லாஹ் ஒரு ஒளி போன்றவர் என்று கூறும் ஒரு வசனத்தை கண்டுபிடித்து கூறினார். ஆனால் மற்ற இடங்களில் அல்லாஹ் கருணையுள்ளவர், அல்லாஹ்வுக்கு வேறு பல குணங்கள் உள்ளன என்று கூறப்படுகிறது, எனவே வெறுமனே ஒரு ஒளி கருணையுடன் இருக்க முடியாது. நாங்களும் அவ்வாறு நினைக்கவில்லை ஓ! கருணை விளக்கு! ஹா! எனவே கிருஷ்ணா, ஒரு நபர், அவர் லீலா புருஷோத்தமர் என்று தனது கடந்த கால லீலா நிகழ்வுகளைக் காட்டுகிறார். எனவே அருவமானவர் என்பது பற்றிய இந்த எண்ணம் பகவான் கிருஷ்ணரை மிகவும் புண்படுத்துவதாக உள்ளது. கிருஷ்ணருக்கு கைகள் இல்லை, கால்கள் இல்லை, தலை இல்லை என்று அருவவாதிகள் கூறுகிறார்கள். உங்கள் மனைவியிடம் முகம் இல்லை, கைகள் இல்லை, கால்கள் இல்லை, என்று கூறி பாருங்கள் சண்டையிடுவாள். எனவே, மாயாவாதிகள் பகவான் கிருஷ்ணரின் தாமரை பாதங்களில் குற்றவாளிகள் என்று கூறப்படுகின்றனர். எனவே நமது முந்தைய ஆசார்யர்கள், கிருஷ்ணர் எப்படி ஒரு தெய்வீகமான மனிதர் என்பதை சாஸ்த்திரங்கள் மூலமாக நமக்குக் கூறுகின்றனர். கிருஷ்ணர் கோவர்த்தன மலையைத் தூக்கியதைப் போல் எல்லோராலும் முடியாது! அவர் அர்ஜுனனிடம் பகவத் கீதையின் 11வது அத்தியாயத்தைப் பேசும்போது, விஸ்வரூபத்தைக் காட்டினார். யாரேனும் பகவான் என்று சொன்னால், அவர்களின் பிரபஞ்ச வடிவத்தைக் காட்டச் சொல்லுங்கள். பகவான் ஸ்ரீ சைதன்யரே வராஹதேவராக உருவெடுத்த போது அவருக்கு நான்கு குளம்புகள் இருந்தன. ஆனால் யாரேனும் தங்களை பகவான் என்று கூறினால், அவர்களின் குளம்புகளைக் காட்டச் சொல்லுங்கள். ராஜமுந்திரியில் ஒருவர் இருந்தார், அவர் தன்னை கல்கி அவதாரம் என்றார். கலி யுகத்தின் இறுதியில் கல்கி வருவார் என்று சாஸ்திரங்கள் கூறியிருக்கிறது, அதாவது 4,32,000 வருடங்கள் மைனஸ் ஐந்து. ஆகவே, அந்த மனிதரிடம் கேட்டார்கள், நீங்கள் சற்று முன்னதாக வந்துவிட்டீர்களா என்று? அவர் சொன்னார், நான் கல்கியாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் நான் ஒரு அவதாரம் என்றார்!அதன்பின் இவை அனைத்தும் மிகவும் மலிவான ஏமாற்று வேலை என்று மக்கள் உணர்ந்தார்கள். கிருஷ்ண லீலையில் பௌண்டரகன் கிருஷ்ணரைப் போல் பாவித்து முயற்சி செய்ததைக் காண்கிறோம். துவாபர யுகத்தில் இப்படி ஒரு ஏமாற்றுக்காரன் இருந்தான். இப்போது கலியுகத்தில் எண்ணற்ற போலி அல்லது போலி அவதாரங்கள் உள்ளனர். ஸம்பவாமி யுகே யுகே என்று கிருஷ்ணர் கூறுகிறார் என்று ஒரு வைஷ்ணவர் சொன்னார். அவர் ஒவ்வொரு யுகத்திலும் வருவார். ஆனால் கலியுகத்தில் ஒவ்வொரு நூற்றாண்டிலும், ஒவ்வொரு பத்தாண்டுகளிலும், ஒவ்வொரு நிமிடத்திலும் நடைமுறையில் அவதாரம் உள்ளது.
எனவே, கிருஷ்ணர் கலியுகத்தில் பிரகடனப்படுத்தப்பட்ட அவதாரமாக வரவில்லை, ஏனென்றால் ஏராளமான போலிகள் உள்ளனர். ஆனால் அவர் ஒரு மூடிய அவதாரமாக வருகிறார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக வந்தார் ஆனால் தன்னை கடவுள் என்று அறிவிக்கவில்லை. கிருஷ்ணர், தான் பரம புருஷர் என்பதை மறைக்கவில்லை என்றாலும், அவர் ஒரு மனிதனைப் போலவே செயல்பட்டார். அதனால் அவர் நந்த மகாராஜாவின் காலணிகளைத் தலையில் சுமந்தார். அன்னை யசோதை கிருஷ்ணருக்கு மிகுந்த அன்புடன் சேவை செய்தார். கிருஷ்ணரின் தாமோதர லீலை நடக்கும் போது, யசோதை கிருஷ்ணரை ஒரு கயிற்றால் கட்ட முயற்சிக்கிறாள். ஆனால் எப்போதும் இரண்டு அங்குலங்கள் பற்றாக்குறை இருந்தது. இறுதியாக, கிருஷ்ணரின் கருணையால் அவளால் கிருஷ்ணனை பிணைக்க முடிந்தது. பின்னர் கிருஷ்ணர் இரண்டு யமல அர்ஜுன மரங்களுக்கு நடுவே சென்று அம்மரங்களை முறித்து எடுத்தார். அதனால் அந்த இரண்டு மரங்களும் முறிந்து விழுந்தன. அதனால் குபேரனின் இரண்டு மகன்களும் விடுவிக்கப்பட்டனர். நாரத முனியால் அவர்கள் சபிக்கபட்டிருந்தனர், ஆனால் அச்சாபம் மறுபுறத்தில் ஒரு வரமாகவும் இருந்தது. அவர்கள் பார்வையற்றவர்களாகவும் புலன் திருப்தியில் மூழ்கியவர்களாகவும் இருந்ததால், நாரத முனி நந்த மகாராஜாவின் வீட்டில் அவர்கள் மரங்களாக இருக்கட்டும் என்று சாபம் கொடுத்தார். அதன்பின் பகவான் கிருஷ்ணர் அவர்களை விடுவித்தார். பின்னர் அவர்கள் கிருஷ்ணரை வணங்கிவிட்டு மீண்டும் சொர்க்க லோகங்களுக்குச் சென்றனர்.
அப்போது, நந்த மகாராஜா அங்கு வந்து விழுந்த மரங்களைப் பார்த்தார். பிறகு மற்ற குழந்தைகளிடம் என்ன நடந்தது என்று கேட்டார். இரண்டு மரங்களுக்கு நடுவே கிருஷ்ணர் வந்து மரங்களை உடைத்ததாகவும், அங்கிருந்து இரண்டு ஒளிமயமான ஆளுமைகள் தோன்றியதாகவும், அவர்கள் கிருஷ்ணரை வணங்கிவிட்டு சொர்க்க கிரகங்களுக்குப் பறந்ததாகவும் குழந்தைகள் சொன்னார்கள். எப்படி இந்தக் குழந்தைகள், என்ன கற்பனை!! எனவே இது போன்ற கிருஷ்ணரின் கடந்தகால லீலா நிகழ்வுகள் மிகவும் இனிமையானவை! உண்மையில் கம்சனைப் பின்பற்றுபவர்களால், குழந்தைகள் பூதனாவால் எவ்லாறு கொல்லப்பட்டார்கள் என்பதை கேள்விப்பட்டிருப்பார்கள். கிருஷ்ணர் எவ்வளவு இரக்கமுள்ளவராக இருந்தார் என்பதையும் ஆன்மீக உலகில் தனது தாயின் நிலையை எப்படி உயர்த்தினார் என்பதையும் அறிவார்கள். இந்த கடந்த கால லீலா நிகழ்வுகள் பற்றி ஸ்ரீவாச தாகூராவின் சகோதரரால் பாடப்பட்டது, இதைக் கேட்ட சைதன்ய பகவான் முற்றிலும் பரவசமடைந்து மயக்கமடைந்தார். எனவே முகுந்த தத்தா, அவர் இந்தப் பாடலைப் புண்டரிகா பிரேமநிதிக்கு முன்பாகப் பாடினார். மேலும் புண்டரிக பிரேமாநிதி பரவசத்துடன் முற்றிலும் காட்டுமிராண்டியாக மாறினார். இதைக் கண்ட கதாதர் தான் செய்தது குற்றம் என்பதை உணர்ந்தார். எனவே, கிருஷ்ணரின் லீலா நிகழ்வுகள் அமிர்தமயமாய் உள்ளன. பகவான் அனந்ததேவர் ஆயிரக்கணக்கான தலைகள் கொண்டிருக்கிறார், அவரின் வாய்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் கிருஷ்ணரை மகிமைப்படுத்துகின்றன. அவ்வாறிருந்தும் அவரால் கிருஷ்ணரின் பெருமைகளுக்கு ஒரு முடிவையும் காண முடியவில்லை! பிறகு நமக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது?
எனவே நாம் கிருஷ்ணரின் லீலா நிகழ்வுைகளை நினைவுகூறும் இன்றைய நாள் மிகவும் புனிதமானது. எனவே, கிருஷ்ணர் கோகுலத்திற்குச் சென்றது, யசோதையுடன் இருந்தது, சென்னையில் ரத யாத்திரை நடத்தியது, சிவபெருமான் எப்படி யசோதையின் வீட்டிற்கு வந்தார் என்பது பற்றி தீனபந்து சொல்லிக்கொண்டிருந்தார். எங்கள் ரத யாத்திரை ஒரு சிவன் கோவில் முன் தொடங்கியது! அதற்கு யசோதை, இல்லை, இல்லை! உன்னைக் கண்டு என் குட்டி லாலா பயப்படுவான் என்று! ஆனால் சிறு குழந்தையாக இருந்த கிருஷ்ணர் சாப்பிடுவதை நிறுத்திவிட்டார். அப்போது மற்ற பெண்கள், இந்த சாது, துறவியிடம் ஏதாவது குற்றம் நடந்திருக்கலாம் என்று கூறினர். எனவே அவள் ஒரு சாது வடிவில் இருந்த சிவபெருமானை அழைத்தாள், மேலும் அவருக்கு சப்பாத்தி கொடுக்க விரும்பினாள். ஆனால் அவர் சொன்னார், நான் தண்ணீரை எடுக்க விரும்புகிறேன், ஒவ்வொரு நாளும் நீங்கள் குழந்தையை குளிப்பாட்டுங்கள், மீதமுள்ள தண்ணீரை எனக்குக் கொடுங்கள், நான் அதை குடிக்கலாம். ஹரிபோல்! எப்படியிருந்தாலும், வகுப்பை இங்கே முடிக்க வேண்டிய நேரம் இது. இன்று, உண்மையில் அவர்கள் இப்போது செய்கிறார்களா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை, அவர்கள் கிருஷ்ணா புத்தகத்தைப் படித்துவிட்டு நள்ளிரவில் படித்து முடிக்க முயற்சித்தார்கள். எப்படியிருந்தாலும், இன்றும், ஒவ்வொரு நாளும் கிருஷ்ணரை நினைத்துப் பார்க்க முயற்சிப்போம்! ஆனால் இன்று ஒரு சிறப்பு நாள். எனவே இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
Lecture Suggetions
-
20211009 ஸ்ரீமத்பாகவதம் 1.11.34
-
20211016 பங்களாதேஷ் பக்தர்களுக்கான செய்தி
-
20200903 ஜூம் கேள்வி பதில்கள்
-
20211003 ஸ்ரீமத் பாகவதம் 1.11.28
-
20210925 கேள்வி மற்றும் பதில் அமர்வு
-
20210625 ஸ்ரீ அத்வைத ஆச்சார்யர் சச்சிமாதாவை அழைத்துவர பல்லக்கினை அனுப்புதல்
-
20210918 வாமன தூவாதசி அன்று ஸ்ரீமத் பாகவதம்
-
20210918 கோலோக பாத்ரா பிரச்சாரத்திற்கு செல்க
-
20211017 இஸ்கான் சென்னையின் படன உற்சவத்தில் உரையாற்றுகிறார்.
-
20210711 “திருநாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” — பத்ர பூர்ணிமா நிகழ்ச்சி சொற்பொழிவு
-
20210914 51வது சன்னியாச ஆண்டுவிழா உரை
-
20211108 இஸ்கான் காங்டாக் மற்றும் அம்பாலா பக்தர்களுக்கு ஸ்ரீல பிரபுபாதா திரோபாவா முகவரி
-
20210905 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20211002 பக்தி விருட்ச சம்மேளன உரையாற்றுதல்
-
20211015 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - விழா துவக்கவுரை
-
20211016 உலகளாவிய தாமோதர விழா துவக்கவுரை
-
20210828 ஸ்ரீமத் பாகவதம் 1.10.33-35
-
20211108 ஸ்ரீல பிரபுபாதாவின் திரோபாவா விரிவுரை இஸ்கான் மாயாபூர்
-
20211001 கேள்வி மற்றும் பதில்கள்
-
20210523 அமோகனை தன் கருணையினால் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காப்பாற்றுதல்
-
20210710 சாந்திபூரில் ஸ்ரீ சைதன்யர் மற்றும் அவரது சகாக்களின் லீலைகளை கேட்பதால் கிடைக்கும் பலன்கள்
-
20211120 ஸ்ரீமத் பாகவதம் 1.12.35 - 36
-
20211014 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - சம்பிரதாயசம்மேளன முகவரி
-
20210930 கேள்வி மற்றும் பதில்கள்
-
20210624 ஹர்மொனிக்ஸ் லைப்-ஸ்டைல் நல்லாசிவுரை
-
20210925 ஸ்ரீமத்- பாகவதம் 1.11.21
-
20211017 ஸ்ரீமத் பாகவதம் 1.12.2
-
20211003 கேள்வி மற்றும் பதில்கள்
-
20211113 ஸ்ரீமத்-பாகவதம் 1.12.29
-
20210904 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை