Text Size

20210918 வாமன தூவாதசி அன்று ஸ்ரீமத் பாகவதம்

18 Sep 2021|Duration: 01:57:13|Tamil|Śrīmad-Bhāgavatam|Śrī Māyāpur, India

மூகம் கரோதி வாஞ்சலம் பங்கும் லங்காயதே கிரிம்
யத்-க்ருபா தம் அஹம் வந்தே ஸ்ரீ-குரும் தீன-தாரணம்
பரமானந்த-மாதவம் ஸ்ரீ சைதன்ய ஈஷ்வரம்
ஹரி: ஓம் தத் ஷத்

ஓம் நமோ பகவதே வாஸுதேவாய
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய

ஜெயபதாக ஸ்வாமி:  எனவே இன்று வாமன துவாதசியின் மிகவும் சிறப்பான நாள். நேற்று வாமன ஏகாதசி அன்று விரதம் இருந்தோம். இன்று துவாதசி அன்று விரதம் கூடாது. இன்று வாமனதேவர் அவதரித்த நாள் மற்றும் ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி அவதரித்த நாள். மேலும், நேற்று பக்தி சாரு சுவாமிகளின் வியாச பூஜையும் நடந்தது. எனவே இன்று, வாமனதேவர் அவதரித்த நாள் மற்றும் வழிபாட்டிற்கு மிகவும் விசேஷமான நாளாகும். பலி மகாராஜா முழு பிரபஞ்சத்தையும் சட்டப்பூர்வமாக வென்றார். ஒரு அரசன் மற்றொரு அரசனை வென்றால், அது முறையானதாகக் கருதப்படுகிறது. எனவே, பலி மஹாராஜா, அதே வழியில், பிஸ்வஜிதா யாகம், மற்றும் அஸ்வமேத யாகம் செய்தார், அதன் பின்னர் அவர் முழு பிரபஞ்சத்தையும் வெல்ல புறப்பட்டார். எனவே, அவரிடம் இருந்து சொத்துக்களை திரும்பப் பெற இரண்டு வழிகள் மட்டுமே இருந்தன - ஒன்று அவரை போரில் தோற்கடிப்பது, அல்லது அவரிடம் கெஞ்சுவது. அதனால், இந்திரனின் தாய் அதிதி, இந்திரன் தன் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டதால் மிகவும் வருத்தப்பட்டாள். அப்போது, ​​காச்யப முனி, அவள் கணவன் தியானத்தில் இருந்தான். அவர் தியானத்திலிருந்து வெளியே வந்ததும், அதிதி சோகமாக இருப்பதைக் கண்டு உபதேசித்தார். ஆனால் அதிதிக்கு தன் கணவனின் வார்த்தைகளைக் கேட்டு மகிழ்வில்லை. அம்மா அதிதி இந்திரன் மீண்டும் பதவி பெற வேண்டும் என்று விரும்பினாள், அது அவளுடைய ஆசை. அப்போது காஸ்யப முனி அவள் பரம புருஷ பகவானை வணங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதனால் அவள் பயவ்ருத்தம் செய்து, விஷ்ணுவைத் திருப்திப்படுத்த முயன்றாள். அதன் விளைவாக அவள் இறைவனைத் தன் மகனாகப் பெற்றாள். பகவான் கிருஷ்ணரின் குழந்தைப் பருவ கடந்த கால லீலை நிகழ்வுளில் இருந்ததைப் போல குழந்தைப் பருவ லீலைகளை அவள் அனுபவித்து  மகிழவில்லை. வாமனதேவா், அவர் முதலில் நான்கு கைகள் கொண்ட விஷ்ணு அவதாரமாக தோன்றினார். சங்கு, தாமரை, கதை,சக்கரம் ஆகியவற்றை கைகளில் ஏந்தியிருந்தார். பிறகு இறைவன் ஒரு குள்ள பிராமணனாக உருவெடுத்தார். எனவே, பலி மற்றும் பிற அசுரர்கள் பிராமணர்களிடமிருந்து சிறப்பு அனுகூலத்தைப் பெற்றதால், அவர்கள் கிட்டத்தட்ட வெல்ல முடியாதவர்கள் என்று பரமாத்மா கூறினார். எனவே, விஷ்ணு பகவான், நீ என்னைப் பயவிரதத்தால் வழிபட்டதாலும், உன் மகன் இந்திரனின் நலனை விரும்புவதாலும், நானும் உன் மகனாகி உனக்கு உதவி செய்வேன் என்றார். இவ்வாறே வாமனதேவன் அவள் மகனாகத் தோன்றினார். அன்னை அதிதியின் வயிற்றில் இறைவன் நுழைந்தார். எனவே அன்னை அதிதியின் வயிற்றில் இருந்து தோன்றிய பின் சங்கு, கதை, தாமரை, சக்கரம் ஆகிய நான்கு ஆயுத வடிவங்களை எடுத்தார். அவரது மார்பில் ஸ்ரீவத்ச முத்திரை இருந்தது. மேலும் அவரது காது வளையங்கள் அழகாக சுறா மீன்களை ஒத்திருந்தன. அவரது கைகளில் வளையல்கள் மற்றும் அவரது கைகளில் கவசங்களுடன். தலையில் ஹெல்மெட். மேலும் அவரது மார்பில் ஒரு பூணூல் இருந்தது. மற்றும் அவரது கணுகாலில் கொலுசு மணிகள் இருந்தன. மேலும் அவர் கழுத்தில் அழகான வனமாலை அணிந்திருந்தார். மேலும் அங்கு தேனீக்கள் மாலையில் இருந்து தேன் சேகரித்து சலசலத்தன. மேலும் அவர் கழுத்தில் கௌஸ்துப ரத்தினத்தை அணிந்திருந்தார். காஸ்யப முனிவரின் இல்லம் முழுவதையும் ஒளிரச் செய்யும் பிரகாசம் அவருக்கு இருந்தது. முழு பிரபஞ்சமும் இவர் தோன்றியதால் மிகவும் மகிழ்ச்சியடைந்தது. தேவர்கள், பசுக்கள், பிராமணர்கள், அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். வாமனதேவர் அவதரித்த நாளுக்கு விஜயா என்று இன்னொரு பெயரும் உண்டு. எனவே கிருஷ்ணர் சத் சித் ஆனந்தராவார். அவர் முழுக்க முழுக்க அதீதமானவர். மேலும் பிரம்ம சம்ஹிதை விளக்குவது போல, ஆனந்தி அனந்த ரூபம் உடையவர். அவர் அசல் மற்றும் வரம்பற்ற வடிவங்களைக் கொண்டவர், முக்கிய நடிகரைப் போலவே, அவர் எந்த வடிவத்தையும் எடுக்க முடியும். எனவே, அவர் ஒரு குள்ள பிராமண வடிவத்தை எடுத்தார். மேலும் அவர் இளம் பிரம்மச்சாரியாகத் தோன்றியதைக் கண்டு முனிவர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். சிலர் அவருக்கு உடனே உபநயனம் என்ற பிராமண தீட்சை கொடுத்தனர். சிலர் அவருக்குக் குடையைக் கொடுத்தார்கள்; சிலர் அவருக்கு பிரம்மச்சரிய தண்டம் கொடுத்தனர். சிலர் அவருக்கு கமண்டலமும், தண்ணீர் பானையும் கொடுத்தனர். சிலர் அவருக்கு குடை கொடுத்தனர். எனவே அவர் ஒரு பிராமணருக்குரிய அனைத்து உபகரணங்களையும் கொண்டிருந்தார்.

சைதன்ய பாகவதத்தில், பகவான் ஸ்ரீ சைதன்யருக்கு புனித உபநயனம் விழா நடந்த நேரத்தில் சைதன்ய பகவான் அவரது வாமன அவதாரத்தை வெளிபடுத்தினார் என விளக்கப்பட்டுள்ளது. அவர் வீடு வீடாக சென்று பிச்சை எடுத்தார். இது இறைவனின் மிக அழகான வடிவம். பின்னர் அவர் பலி மகாராஜாவிடம் சென்று தனக்கு மூன்றடி நிலம் தரும்படி கேட்டார். பலி மஹாராஜா, நான் உனக்கு ஒரு முழு கிரகத்தையும் தர முடியும், நீ ஏன் இவ்வளவு குறைவாக கேட்கிறாய்? ஆனால் வாமனதேவர் சொன்னார், எனக்கு அதிகம் தேவையில்லை, நான் மூன்று அடிகளால் திருப்தி அடையவில்லை என்றால், நான் ஒரு கிரகத்தால் திருப்தி அடைய மாட்டேன். எனவே, பலி மஹாராஜா, சரி, நீ விரும்புவதைத் தருகிறேன் என்றார். ஆனால், அவருடைய குருவான சுக்ராச்சாரியார், வேண்டாம், வேண்டாம், அவருக்குக் கொடுக்காதீர்கள்! அவர் உண்மையில் விஷ்ணு, அவர் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்வார்! பலி சொன்னான், நான் ஏற்கனவே அவருக்கு என் வார்த்தையை கொடுத்துவிட்டேன் என்று. அதனால் சுக்ராச்சாரியார் ஒருவர் வெவ்வேறு காலங்களில் மற்றும் வெவ்வேறு வழிகளில் பொய் சொல்லலாம் என்று கூறினார் மேலும்  எனக்கு ஒன்று  ஞாபகம் வருகிறது, திருமணத்தின் போது  கொஞ்சம் கூடுதலாகச் சொன்னால் அதில் தவறேதும் இல்லை என்பார்கள்  என்று கூறினார். அதனால்  நான் கூறியது  பொய் என சொல்லி விடுங்கள் என்று சுக்ராச்சாரியார் கூறினார். ஆனால் பலி, தன் குருவுக்குக் கீழ்ப்படியவில்லை. அதனால் சுக்ராச்சாரியார் அவரை சபித்தார், நீங்கள் எல்லாவற்றையும் இழப்பீர்கள். பிறகு வாமனதேவர், தனது கமண்டலத்திலிருந்து சிறிது தண்ணீரை பலி மகாராஜாவின் கையில் ஊற்ற விரும்பினார். ஆனால் சுக்ராச்சாரியார், ஒரு ஈ வடிவத்தை எடுத்து கமண்டலத்தின் துவாரத்தில் நுழைந்து தண்ணீரைத் தடுத்தார். ஆனால் வாமனதேவர், கமண்டலத்தை உயர்த்திப் பார்த்தார், ஒரு ஈ அதைத் தடுப்பதைக் கண்டார். அவர் ஒரு வைக்கோலை எடுத்து ஈயைக் குத்தினார், அந்த வழியில் சுக்ராச்சாரியாரின் ஒரு கண் வாமனதேவரின் வைக்கோலால் குருடானது. எனவே, வாமனதேவர் தனது படிகளின் அளவீட்டின்படி மூன்றடி நிலம் மட்டுமே வேண்டும் என்றார். நீங்கள் மிகவும் புத்திசாலி இல்லை என்று பலி மஹாராஜா சொன்னார், நான் உங்களுக்கு எல்லாவற்றையும் கொடுக்க முடியும், நான் உங்களுக்கு ஒரு முழு கிரகத்தையும் கொடுக்க முடியும், நான் உங்களுக்கு அனைத்தையும் கொடுக்க முடியும், பணம் மற்றும் மனைவிகள், ஆனால் உங்களுக்கு மூன்றடி நிலம் மட்டுமே போதும் என்கிறீர்கள் ! அச்சமயம் வாமனதேவர் தனது கமண்டலிருந்து  பலியின் கையில் மூன்று சொட்டுகள் தண்ணீரை ஊற்றினார், இதனால் ஒப்பந்தம் உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர், வாமனதேவர், அவர் தன்னை விரிவுபடுத்தத் தொடங்கினார், ஒரு அடி முழு பூமியையும் மூடினார். இரண்டாவது அடியால், அவர் முழு பிரபஞ்சத்தையும் மூடினார். மேலும் அவர் பிரபஞ்சத்தின் விளிம்பை அடைந்து பிரபஞ்சத்தின் ஓட்டை உடைத்தார், கங்கை நீர் அதன் வழியாக நுழைந்தது. அப்போது சிவபெருமான் கங்கையைத் தன் தலையில் பிடித்தார். மேலும் சொர்க்க கிரகங்களிலிருந்து கங்கை கொட்டியது. பின்னர், பாகி மகாராஜா கங்கையை இந்த கிரகத்திற்கு கீழே வரச் சொன்னார். மாயாபூரில் பாகீரதி உள்ளது. அது கபில முனிவரின் ஆசிரமத்திற்கு அருகில் கங்கா சாஹரத்தை அடைந்தது. எனவே, வாமனதேவரின் தெய்வ வடிவம் மிகவும் முக்கியமானது, ஏனென்றால் அதன் காரணமாகத்தான்  கங்கை நமது கிரகத்தில் நுழைந்தது. பிறகு வாமனதேவன் பலி மஹாராஜாவிடம், மூன்றாவது அடியை எங்கே வைக்க வேண்டும் என்று கேட்டார். அப்போது பலி மகாராஜா, அதை என் தலையில் வை என்றார். அப்போது, ​​வாமனதேவரின் தாமரை பாதத்தை பலி தன்  தலையில் ஏந்தினார். அதன்பின் பலி திருடனைப் போல் கட்டிவைக்கப்பட்டார். பின்னர் பலிக்கு ஸுதல லோக கிரகம் வழங்கப்பட்டது. வாமனதேவவரும், பலியின் அரண்மனை வாசலில் வாயிற்காவலனாக இருக்க சம்மதித்தார். மேலும், பலியை  அனைத்து பகைவர்களிடமிருந்தும் பாதுகாத்தார். மேலும் மூன்று மனுக்களுக்குப் பிறகு பலி  சட்டபூர்வமான இந்திரனாக இருப்பார் என்றும் அறிவித்தார். எனவே இது மிகவும் சுவாரஸ்யமான கடந்த கால லீலை நிகழ்வாகும். இதன்மூலம் இறைவனிடம் சரணடைவதால் நாம் எதையும் இழக்க மாட்டோம் என்பதைக் காணலாம். எனவே இரண்டு அடிகளில், அவர் பலி மஹாராஜாவிடம் இருந்து எல்லாவற்றையும் எடுத்துவிட்டார், மூன்றாவது அடி நான் எங்கே வைக்க வேண்டும் என்று கேட்டார்? அவர் தனது உடைமைகளை இரண்டு அடிகளில் எடுத்தார். எனவே பலி மஹாராஜா இறைவனை எந்த வகையிலும் திருப்திப்படுத்த விரும்பினார், அதனால்தான்  தயவு செய்து உனது மூன்றாவது அடியை என் தலையில் வைக்கவும் என்று கூறினார். அப்போது பலி மஹாராஜா, இறைவனின் பாதம் அவரது தலையில் இருந்ததால், இறைவன் விரிவடைவதை உண்மையில் பார்க்க முடியவில்லை. காஞ்சிபுரம் கோவிலில் பார்த்திருக்கிறேன். பலி மஹாராஜா, உனது வடிவத்தை என்னால் பார்க்க முடியவில்லை, தயவு செய்து உனது அந்த வடிவத்தை எனக்குக் காட்டு. என்று கேட்பதையும், அதற்காக வாமனதேவர் அளித்த காட்சி ரூபமே தென்னிந்தியாவின் காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ உலகலர்ந்த பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். எப்படியிருந்தாலும், அங்கு ஒரு பெரிய தெய்வம் சுமார் 35 அடி அகலத்தில் உள்ளது. அவர் ஒரு அடியை இவ் வழியிலேயே விரிவுபடுத்தினார். இதைப் போலவே தெய்வம் மூன்று அடிகளாக விரிவதையும்  காண முடிந்தது. நான் அந்த கோவிலுக்கு சென்றேன், அது மிகவும் அழகாக இருக்கிறது. 35 அடி தெய்வம் - அப்படி ஒரு கோவில் இருப்பதாக நான் நினைக்கவில்லை! எது எப்படியோ, இன்று வாமனதேவரின் கடந்த கால லீலை நிகழ்வை விளக்க முயன்று, நமது முழு நேரமும் கடந்துவிட்டது.

 மேலும் ஸ்ரீல ஜீவ கோஸ்வாமியைப் பற்றியும் பேச விரும்பினேன். அவர் ஸ்ரீல ரூப மற்றும் ஸனாதன கோஸ்வாமியின் மருமகன் ஆவார். அவர் எப்போதும் பகவான் ஸ்ரீ சைதன்யரை நினைத்துக் கொண்டிருந்த போது அவரது தந்தை அனுபமா மறைந்தார். ஆகவே ஸ்ரீல ஜீவ கோஸ்வாமியும்  எப்போதும் பகவான் ஸ்ரீ சைதன்யரை பின்பற்ற வேண்டும் என்றும், ஸ்ரீல ரூப மற்றும் ஸனாதன கோஸ்வாமியுடன் பிருந்தாவனத்தில் சேர வேண்டும் என்றும் விரும்பினார். எனவே, காசியில், பனாரஸில், சர்வபௌமா பட்டாச்சாரியாரின் சீடரிடம் சமஸ்கிருதம் கற்க வேண்டும் என்று தனது கனவின் மூலம் பகவான் ஸ்ரீ சைதன்யரிடம் கட்டளை பெற்றார். அதனால் அவர் சமஸ்கிருதத்தில் சிறந்த அறிஞர் ஆனார். மேலும் அவர் அனைத்து வேதங்களையும், வைணவ தத்துவத்தின் பிராமணங்களையும் படித்தார். ஸ்ரீல பிரபுபாதர் தனது ஸத சந்தர்பத்தில் உலகின் தலைசிறந்த தத்துவமான அனைத்து தத்துவங்களையும் கொடுத்ததாக கூறியுள்ளார். எப்படியிருந்தாலும், அவர் விருந்தாவனத்திற்குச் சென்றார், அங்கு ஸனாதன கோஸ்வாமி கூறியது போல் ஸ்ரீல ரூப கோஸ்வாமியிடம் தீட்சை எடுத்துக் கொண்டார். ஒரு திக்விஜய பண்டிதர் விருந்தாவனத்திற்கு வந்து, ஸ்ரீல ரூப கோஸ்வாமியிடம் நான் உங்களுடன் விவாதம் செய்ய விரும்புகிறேன் என்று கூறினார். ஸ்ரீல ரூப கோஸ்வாமி, ஓ! நீங்கள் ஒரு பெரிய பண்டிதர், உங்கள் நேரத்தை வீணடிப்பதில் எந்த பயனும் இல்லை என்றார், அப்போது நீங்கள் என்னால் தோற்கடிக்கப்பட்டீர்கள் என்று எனது புத்தகத்தில் கையெழுத்திடுங்கள் என்று பண்டிதர்  கூறினார். அதனால் இருவரும் கையெழுத்திட்டனர். ஸ்ரீலபக்தி சித்தாந்த சரஸ்வதி தாகூரா, ஜடேர் பிரதிஸ்தா, சுகேரர் பீஷ்டா - பொருள் புகழ் என்பது பன்றிகளின் மலத்திற்கு ஒப்பிடப்படுகிறது என்று கூறினார். ஆனால் இந்த பண்டிதர், நான் ஸ்ரீல ரூபாவையும் ஸனாதனத்தையும் தோற்கடித்துவிட்டேன், என் முன்னால் எதுவுமே இல்லை! என்றார், இதைக் கேட்ட ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி கோபமடைந்தார். அப்போது அந்த பண்டிதருக்கு சவால் விட்டார். பின்னர் ஏழு நாட்கள் அவர் பண்டிதருடன் விவாதம் செய்து ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி வெற்றி பெற்றார் என்று முடிவு செய்யப்பட்டது. அவர் தனது சொந்த புகழுக்காகவும், பெருமைக்காகவும் இதைச் செய்யவில்லை, அவர் தனது ஆன்மீக குருவின் மரியாதை மற்றும்  நன்மதிப்புக்காக தனது மரியாதையை காப்பாற்றினார். ஆனால் ஸ்ரீல ரூப கோஸ்வாமியின் நடத்தையால் அவரது குரு அதிருப்தி அடைந்தார். ஏழு நாட்களை வீணடித்துள்ளாய், விருந்தாவனத்தில் வசிக்கத் தகுதியில்லை என்றார். அதனால் தனது குரு அதிருப்தி அடைந்ததில் ஜீவ கோஸ்வாமி மிகவும் வருத்தப்பட்டார். அதன்பின் அவர் ஏதோ ஒரு முதலை குழியில் வசித்து வந்தார். மேலும் அவர் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை சாப்பிடுவார். எப்படியோ ஸனாதன கோஸ்வாமி அந்த ஊருக்கு வந்து அங்கே ஒரு துறவி இருப்பதாக கேள்விப்பட்டார். பின்னர் அவர் முதலை துளைக்குச் சென்று ஜீவ கோஸ்வாமியைப் பார்த்தார், அந்த நேரத்தில் ஜீவ கோஸ்வாமி துளையை விட்டு வெளியேற மிகவும் பலவீனமாக இருந்தார், எனவே ஸனாதன கோஸ்வாமி அவரை வெளியே அழைத்து வந்து பிருந்தாவனத்திற்கு அழைத்துச் சென்றார். ஸனாதன கோஸ்வாமி ஸ்ரீல ரூப கோஸ்வாமியிடம் பகவான் ஸ்ரீ சைதன்யரின் தத்துவத்தில் நீங்கள் புரிந்து கொள்ளாத ஒரு விஷயம் இருக்கிறது என்று கூறினார். அது ஜீவர் தயா - அனைத்து உயிரினங்களின் மீதும் கருணை. ஜீவா என்பது ஒரு வகையான நகல் - ஜீவ தயா, ஜீவா என்றால் அனைத்து உயிரினங்களையும் குறிக்கிறது, மேலும் ஜீவ கோஸ்வாமி என்றும் அவர் கூறினார். எப்படியோ, ரூபா கோஸ்வாமி ஜீவ கோஸ்வாமியைத் தழுவினார். ஜாஹ்னவி தேவி பின்னர் ஜீவ கோஸ்வாமிக்கு கோஸ்வாமிகள் எழுதிய இந்த புத்தகங்கள் அனைத்தும் எங்களுக்குத் தேவை என்று எழுதினார், எனவே ஜீவ கோஸ்வாமி அனைத்து புத்தகங்களையும் நகலெடுக்க வங்காளத்திற்கு அனுப்பினார். அந்த நேரத்தில், ஸ்ரீல ரூப கோஸ்வாமி நரோத்தம தாச தாகுரா, ஸ்ரீநிவாச ஆசார்யா மற்றும் ஸ்யாமானந்த பண்டிதா ஆகியோரின் சிக்ஷா குருவாக இருந்தார். எப்படியிருந்தாலும், பல வரலாறுகள் உள்ளன. ரூபா மற்றும் ஸனாதன கோஸ்வாமிகளுக்குப் பிறகு, ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி அனைத்து வைஷ்ணவர்களின் சிகரமாக விளங்கினார். எனவே அவர் தனது ஆறு சந்தர்பங்களில் அனைத்து தத்துவங்களையும் எழுதினார்.

எப்படியிருந்தாலும், இன்று ஸ்ரீல ஜீவாவின் தோற்றமும் நேற்று பக்தி சாரு சுவாமியின் தோற்றமும் அல்லது வியாச பூஜையும் ஆகும். அவர் ஸ்ரீல பிரபுபாதாவின் ஆங்கில புத்தகங்களை வங்காள மொழியில் மொழிபெயர்த்தார். எனவே பக்தி சாரு ஸ்வாமி, அவர் ஸ்ரீல பிரபுபாதாவின் கட்டளையைப் பின்பற்றுவதற்கு அர்ப்பணிக்கப்பட்டார். எப்படியிருந்தாலும், இன்று ஒரு மிகசிறப்பான நாள். இறைவனுக்கு எல்லையற்ற வடிவங்கள் உள்ளன, அவர் எப்படி வேண்டுமானாலும் தோன்றலாம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதையெல்லாம் மீறி, அவர் அதே பரம புருஷர் ஆவார். நான் சில கேள்விகளை எடுத்துக்கொள்கிறேன், பின்னர் நாம் இங்கே முடிக்க வேண்டும்.  பேசுகையில் ஒரு பெங்காலி மற்றும் ஒரு ஆங்கில கேள்வியை வைக்கவும்.

பெங்காலி: ஸுகமல் நித்யானந்த தாஸா, ஹபீப்கஞ்ச்: பலி மஹாராஜா மூன்றடி நிலத்தை தானம் செய்தார், மேலும் இறைவன் இரண்டு அடிகளால் முழு பிரபஞ்சத்தையும் மூடிவிட்டார், பின்னர் பலி மஹாராஜா எல்லாவற்றையும் இறைவனுக்குக் கொடுப்பதற்காக, தனது சுயத்தையே கூட, அதாவது தனது தலையையே அர்ப்பணித்தார் இறைவனின் மூன்றாவது அடிக்கு. எனவே இங்கே நாம் பார்க்கிறோம், பலி மகாராஜா மிகவும் தொண்டு செய்பவர், அதனால் அவர் எல்லாவற்றையும் தானமாக இறைவனுக்கு அளித்துள்ளார். ஆனால் அதே சமயம் அனைத்தையும் அர்ப்பணித்து சரணடைந்துள்ளார். எனவே பலி மகாராஜாவின் எந்த அம்சம் மிகவும் புகழப்பட்டது - இறைவனிடம் முழு சரணாகதி அடைந்த அம்சமா? அல்லது ஒரு சிறந்த தொண்டு நபர் என்ற அவரது அம்சமா?

ஜெயபதாக ஸ்வாமி:  இறைவனுடைய பக்தனாக மற்றும் ஒரு அம்சம் கடந்த கால லீலை நிகழ்வாக வேறு சில யுகத்தில் நிகழ்ந்துள்ளது.  அப்போது இந்திரனின் ஒன்றுவிட்ட சகோதரர் பாஸ்கர பண்டிதர், பாஸ்கர மகாராஜா என்பவர் ஆவார். வாமனதேவர் இந்த பாஸ்கர மஹாராஜனையும் வென்று மூன்றடி நிலம் வேண்டினார். பின்  அனைத்து பிரபஞ்சத்தையும் மூன்று அடிகளில் பெற்று கொண்டார். அதன்பின் பாஸ்கர மகாராஜாவிடம், நீங்கள் மிகவும் தானம் புரிபவர், நீங்கள் என்ன வரம் வேண்டுமானாலும் கேட்கலாம் என்றார். இந்த லீலையில் பாஸ்கர மகாராஜா அவரது தொண்டுக்காக போற்றப்பட்டிருக்கலாம். பாஸ்கரா் கேட்டார், நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள், நான் அந்த இடத்திற்கு செல்ல விரும்புகிறேன்! நான் அங்கு செல்ல விரும்புகிறேன்! நான் வைகுண்டம் செல்ல வேண்டும்! அதனால் இறைவனின் கருணையைப் பெற்றார். எனவே, இது இன்னொரு பிரம்மாவின் வாழ்க்கையில் இருந்திருக்கலாம், எனக்குத் தெரியாது. கடைசி கேள்வி ஆங்கிலத்தில்.

ஸுதாமயி சித்ரா தேவி தாஸி:  இவ்வளவு கருணையைப் பெற்ற பிறகும் பலி மகாராஜா ஏன் கடவுளிடம் திரும்பிச் செல்லவில்லை, இந்திரனாக ஏன் திரும்பி வருகிறார்?

ஜெயபதாக ஸ்வாமி: அவருக்கு கிருஷ்ணரின் கருணை கிடைத்தது. அதனால் இந்திரன் பதவி பெற வேண்டும் என்பது அவருக்கு ஆசையாக இருந்தது. அதனால் அவர் ஒரு இந்திரனாக, மூன்று மனுவிற்கு பிறகு மாறுவார். மேலும் அவரது வாழ்க்கையின் முடிவில், அவர் நிச்சயமாக கடவுளுடைய வீட்டிற்கு திரும்புவார்.

சரி, அனைவருக்கும் மிக்க நன்றி, மாயாபூர் பக்தர்களைப் பார்ப்போம், அவர்கள் காலை உணவை எடுத்துக் கொள்ளலாம். பின்னர் கோயில்கள் மற்றும் தூர கிழக்கு பக்தர்களைப் பார்வையிடலாம்.

- END OF TRANSCRIPTION -
Transcribed by ஜனதா சுந்தர்
Verifyed by
Reviewed by

Lecture Suggetions