மூகம் கரோதி வாஞ்சலம் பங்கும் லங்காயதே கிரிம்
யத்-க்ருபா தம் அஹம் வந்தே ஸ்ரீ-குரும் தீன-தாரணம்
பரமானந்த-மாதவம் ஸ்ரீ சைதன்ய ஈஷ்வரம்
ஹரி: ஓம் தத் ஷத்
ஜெயபதாகா ஸ்வாமி: தாமோதர விரதத்தின் ததுவக்கத்தை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். குறிப்பாக பரவலான நிகழ்வாக பகவான் தாமோதரர் மற்றும் யசோதா ஆகியோருக்கு தீபம் ஏற்றி வழிபடப்படுகிறது. உலகெங்கிலும் இது மிகவும் துடிப்பான திட்டமாக மாறுவதை நாங்கள் கண்டோம், மேலும் மக்கள் யசோதா தாமோதரருக்கு தீபம் ஏற்றி, இவ்வாறாக தங்கள் ஆன்மீக வாழ்க்கையை வலுவான நிலையில் தொடங்குவதைக் கண்டோம். மலேசியா இந்த திட்டத்தை முதன்மையாக வழிநடத்தியது மற்றும் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்களைக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி நாளில் தேசிய சாதனை படைத்தனர் என்று நினைக்கிறேன். ஆனால் அதுமட்டுமன்றி உலகம் முழுவதும், அவர்கள் தாமோதர-பூஜையைச் சிறப்பாக செய்கிறார்கள். இறைவனுக்கும் அன்னைக்கும் தீபம் ஏற்றுவது மிகவும் எளிதான நிகழ்வு. மக்கள் இந்த நிகழ்வை மிகவும் விரும்புகிறார்கள், இதைச் செய்வது மிகவும் எளிதானது, அவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் ஒரு சிறந்த பயனை அடைகிறார்கள், தங்களுக்கு மட்டுமல்ல தங்களின் முன்னோர்களுக்கும், மற்றும் அவர்களின் சந்ததியினருக்கும் இதுகுறித்து பல்வேறு புராணங்களில் சிறப்பித்தும் கூறப்பட்டுள்ளது . இது மிக முக்கியமான சேவை.
பக்தர்கள் இப்போது தாமோதர பூஜையை தொடங்குவார்கள் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், மக்கள் தங்களின் முன்னேற்றத்தை தங்கள் மொபைல் போனில் பதிவு செய்ய ஒரு செயலியை சபை மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கியுள்ளது. பெரும்பாலான மக்களிடம் ஸ்மார்ட் போன்கள் உள்ளன, மேலும் இது மதிப்பெண்களைப் பதிவுசெய்து அனுப்புவதை எளிதாக்குகிறது. தென் அமெரிக்கா மற்றும் குயென்காவில் கூட மக்கள் யசோதா தாமோதராவின் படத்திற்கு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்றியதைப் பார்த்தோம். ஒருவேளை அவர்கள் செய்தது கர்த்தராகிய இயேசு மற்றும் அன்னை மரியாவை நினைவூட்டினார்கள்.
எது எவ்வாறானாலும் அது கிருஷ்ணர் மற்றும் யசோதா என்று நாங்கள் அவர்களிடம் சொன்னோம், அவர்கள் வரிசையில் நின்று விளக்கை வழங்கினர். அதனால் அவர்கள் அனைவரும் அஜ்ஞாத ஸுக்ருதி பெறுகிறார்கள், அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ பலன் பெறுகிறார்கள், மலேசியாவில் சில ஸ்டால்களில், தீபாவளி விற்பனையின் போது தாமோதர பூஜைக்கு அர்ப்பணித்ததாக நான் கேள்விப்பட்டேன். எனவே பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் வந்து இந்த தீப நிகழ்வில் பங்கேற்பார்கள். எனவே நான் அனைவரையும் ஊக்குவிக்க விரும்புகிறேன், இது மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன், இந்த முறையால் நீங்கள் ஏற்கனவே உள்ள சபை உறுப்பினர்களை ஊக்குவிக்கலாம் மற்றும் நீங்கள் புதிய சபை உறுப்பினர்களையும் உருவாக்கலாம். எனவே, இது மிகவும் பயனுள்ள அணுகுமுறையாகும். பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவர்களுடைய சுறுசுறுப்பான பங்கேற்பை அதிகரிக்கவும், அவர்களுக்கு ஆசீர்வாதத்தையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் வழங்கவம் செய்கிறது. தொற்றுநோய்க்குப் பிறகு இருள் நிறைந்த சூழலில் இது நம்பிக்கையின் கதிராகும். நான் அதிக நேரம் பேச விரும்பவில்லை.
நிச்சயமாக இந்த நேரத்தில் பங்களாதேஷில் சமீபத்தில் பல்வேறு தாக்குதல்கள் மற்றும் கலவரங்களுக்கு ஆளான நமது சகோதர சகோதரிகளுக்கு நமது ஹரே கிருஷ்ண மந்திரத்தின் சுருக்கமான பிரார்த்தனையை அர்பணிக்க விரும்புகிறேன். சிலர் மருத்துவமனையில் உள்ளனர்; ஒருவர் உடலை துறந்தார். எனவே இது சில பயங்கரவாதக் குழுக்களின் சில அரசியல் காரணங்ளால் ஆகும். அதனால், நான் ஹரே கிருஷ்ண மஹா-மந்திரத்தை ஜபிக்க விரும்புகிறேன்:
ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே! முடிந்தவரை எவ்வளவு நேரம் இருக்க முடியுமோ இருக்க முயற்சிப்பேன். நான் பங்களாதேஷ் பக்தர்களுக்காக ஒரு சிறப்பு பிரார்த்தனைக் கூட்டத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. தாமோதராவின் பணி சிறக்க என் வாழ்த்துக்கள் மற்றும் ஆசிகள். யசோதா தாமோதர மதிர் அஸ்து!
Lecture Suggetions
-
20211003 ஸ்ரீமத் பாகவதம் 1.11.28
-
20210830 ஸ்ரீமத் பாகவதம்
-
20211016 பங்களாதேஷ் பக்தர்களுக்கான செய்தி
-
20211108 இஸ்கான் காங்டாக் மற்றும் அம்பாலா பக்தர்களுக்கு ஸ்ரீல பிரபுபாதா திரோபாவா முகவரி
-
20211003 கேள்வி மற்றும் பதில்கள்
-
20211015 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - விழா துவக்கவுரை
-
20210918 வாமன தூவாதசி அன்று ஸ்ரீமத் பாகவதம்
-
20210523 அமோகனை தன் கருணையினால் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காப்பாற்றுதல்
-
20210624 ஹர்மொனிக்ஸ் லைப்-ஸ்டைல் நல்லாசிவுரை
-
20210914 51வது சன்னியாச ஆண்டுவிழா உரை
-
20211017 ஸ்ரீமத் பாகவதம் 1.12.2
-
20210904 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20211014 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - சம்பிரதாயசம்மேளன முகவரி
-
20210711 “திருநாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” — பத்ர பூர்ணிமா நிகழ்ச்சி சொற்பொழிவு
-
20211001 கேள்வி மற்றும் பதில்கள்
-
20211120 ஸ்ரீமத் பாகவதம் 1.12.35 - 36
-
20210925 கேள்வி மற்றும் பதில் அமர்வு
-
20210905 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20210710 சாந்திபூரில் ஸ்ரீ சைதன்யர் மற்றும் அவரது சகாக்களின் லீலைகளை கேட்பதால் கிடைக்கும் பலன்கள்
-
20210625 ஸ்ரீ அத்வைத ஆச்சார்யர் சச்சிமாதாவை அழைத்துவர பல்லக்கினை அனுப்புதல்
-
20210828 ஸ்ரீமத் பாகவதம் 1.10.33-35
-
20210925 ஸ்ரீமத்- பாகவதம் 1.11.21
-
20211009 ஸ்ரீமத்பாகவதம் 1.11.34
-
20211113 ஸ்ரீமத்-பாகவதம் 1.12.29
-
20211108 ஸ்ரீல பிரபுபாதாவின் திரோபாவா விரிவுரை இஸ்கான் மாயாபூர்
-
20200903 ஜூம் கேள்வி பதில்கள்
-
20211017 இஸ்கான் சென்னையின் படன உற்சவத்தில் உரையாற்றுகிறார்.
-
20211002 பக்தி விருட்ச சம்மேளன உரையாற்றுதல்
-
20210930 கேள்வி மற்றும் பதில்கள்
-
20210918 கோலோக பாத்ரா பிரச்சாரத்திற்கு செல்க