20210711 “திருநாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” — பத்ர பூர்ணிமா நிகழ்ச்சி சொற்பொழிவு
இங்கு கூடியிருக்கும் பக்தர்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தையும் இந்த பத்ர பூர்ணிமா வெற்றியடைவதற்கான நல்வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இப்போது, எனக்கு முன்பு இங்கு தவத்திரு கோபால கிருஷ்ண கோஸ்வாமி அவர்கள் உரையாற்றினார்; ஸ்ரீல பிரபுபாதர் எம்மிடம், கல்கத்தாவில் 10 கோவில்கள் நிர்மாணிக்க வேண்டும் என்று கூறினார்; ஆனால் கோபால கிருஷ்ண கோஸ்வாமி, தில்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அதனை விஞ்சிவிட்டார். அவர் அங்கு பண்ணிரண்டு முதல் பதினான்கு கோயில்களை எழுப்பியுள்ளார்; அனைத்து கோவில்களும் புத்தக வினியோகத்தை பிரதானமாகக் கொண்டுள்ளன. சில சமயங்களில் மாயாபுரில் உள்ள பக்தர்கள் தில்லியை விஞ்ச பார்த்தனர், ஆனால் வழக்கம்போல் தில்லி என்றுமே முதல் இடத்திலேயே உள்ளது. இந்த வகையிலான அர்ப்பணிப்பு நம்மிடம் இருந்தால் நிச்சயமாக இந்தியா வெற்றி அடைவது உறுதி.
நேற்றைய தினம் பக்திவினோத தாகூரின் மறைவு நாள் ஆகும். சைதன்ய சரிதாம்ருதத்தின் ஒரு பிரதியைக் கண்டறிய எவ்வாறு அவர் முயற்சியை மேற்கொண்டார் என்பதை நான் படித்துக்கொண்டிருந்தேன்; ஆனாலும் அவரால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் ஸ்ரீமத் பாகவதம், சைதன்ய சரிதாம்ருதம், பகவத்கீதை ஆகிய புத்தகங்கள், பல்வேறு மொழிகளில், இந்த உலகம் முழுவதற்கும் உடனே கிடைக்குமாறு ஸ்ரீல பிரபுபாதர் செய்திருக்கிறார். இந்திய நாட்டில் பல மொழிகள் இருக்கின்றன; வங்காளம், இந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியன. பக்திவேதாந்த புத்தக நிறுவனம் ஆங்கிலத்தில் மட்டுமல்லாது எல்லா மொழிகளிலும் உலகம் முழுவதிலும் வெளியிடுமாறு ஸ்ரீல பிரபுபாதர் ஏற்பாடு செய்தார். இது, நம்முடைய உயர்ந்த ஆச்சாரியரான ஸ்ரீல பக்தி வினோத தாகூரின் அடிச்சுவட்டைப் பின்பற்றுவதன் மூலம் திருநாட்டிற்குத் திரும்பிச் செல்வதற்கான மிகப்பெரும் வாய்ப்பாகும்; மேலும், இவ்வகையில் நாம் வெற்றி அடையலாம்.
இன்று காலை ஸ்ரீல பிரபுபாதரின் ஒரு கடிதத்தை நாம் படித்தோம். அக்கடிதத்தில் “தன் சீடன் கோலோகத்திற்கு, வைகுண்டத்திற்கு மாற்றம் பெறும் வரை குரு இந்த பௌதிக உலகில் இருக்க வேண்டியிருக்கும்” என்று உறுதிப் படுத்துகிறார்.
எனவே இந்த பத்ர பௌர்ணமி அன்று ஸ்ரீமத் பாகவத புத்தகங்களை வினியோகிப்பதன் மூலம் கோலோக பிருந்தாவனத்திற்கு திரும்பிச் செல்வதற்கான வாய்ப்பை அனைத்து பக்தர்களும் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நாம் நம்புகிறோம். ஸ்ரீல பக்தி வினோத தாகூரின் காலத்தில் இதற்கு தட்டுப்பாடு இருந்தது. இப்போது ஸ்ரீல பிரபுபாதரின் கருணையினாலும் பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையினாலும் நமக்கு புத்தகங்கள் கிடைக்கின்றது. மக்களுக்கு இந்தப் புத்தகங்கள் கிடைக்கும்படியும் அவர்கள் இந்தப் புத்தகங்களை வாசிக்கும்படியும் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். உண்மையில், பாகவத மஹாத்மியத்தில் “யார் ஒருவர் தம் வீட்டில் ஸ்ரீமத் பாகவத புத்தக தொகுப்பினை வைத்திருக்கிறாரோ அவருடைய வீடு, ஒரு புண்ணிய தீர்த்த ஸ்தலமாக மாறிவிடுகிறது. ஸ்வர்கத்திலிருந்து எல்லா தேவர்களும் கிருஷ்ணருடையய இந்த இலக்கிய அவதாரத்தை வணங்குவதற்காக கீழே வருகிறார்கள்” என்று படித்தேன். எனவே, ஒவ்வொரு வீட்டையும் தெய்வீக புண்ணிய தீர்த்த ஸ்தலமாக மாற்றுங்கள். அவர்களுக்கு ஸ்ரீமத் பாகவதத்தின் பிரதியினை வழங்குங்கள். அவர்கள் எந்த அளவிற்கு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று கணக்கிட முடியாது. நீங்கள் அளித்த இந்த யோசனையின் மூலம் கடந்த வருடம் நான் நூற்றுக்கணக்கான பாகவதங்களைப் பெற்றேன். நான் அந்தப் பிரதிகளை நூலகங்களுக்கும் கௌடிய மடத்திற்கும் அளித்தேன். ஸ்ரீல பிரபுபாதர், இந்த உலகத்திற்கு ஆற்றியுள்ள பெரும் பணியை அனைவரும் புரிந்து கொள்ளட்டும். அவர், பாகவதம், ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் போன்றவை அனைத்தையும் இந்த உலகம் முழுவதற்கும் வழங்கியுள்ளார். ஸ்ரீல பக்தி வினோத தாகூருக்கு ஒரு பிரதிகூட கிடைக்கவில்லை; சைதன்ய சரிதாம்ருதத்தின் ஒரு பிரதியும்கூட! இப்போது அதற்குத் தட்டுப்பாடு இல்லை; ஆனால், மக்கள் அதனைப் பெற வேண்டும். அதன் மூலம் அவர்கள் தங்கள் வீட்டினை ஒரு புண்ணிய ஸ்தலமாக மாற்றலாம். அவர்கள் பாகவதத்தைப் படித்து ஆசிகளைப் பெறலாம். கீதையும் பாகவதமும், பகவான் சைதன்யர் பரிந்துரைத்த முக்கியமான அம்சங்களாகும். “போலோ கிருஷ்ண, பஜ கிருஷ்ண, கரோ கிருஷ்ண சிக்ஷா.” கிருஷ்ணா சிக்ஷா இரண்டு அம்சங்களில் உள்ளது: ஒன்று, கிருஷ்ணர் தனிப்பட்ட முறையில் பேசிய பகவத் கீதை ஆகும்; மற்றொன்று, கிருஷ்ணரை பற்றிப் பேசப்பட்ட பாகவதம் ஆகும். எனவே இதுவே பகவான் சைதன்யரின் எளிமையான வேண்டுகோள் ஆகும். அவர் அனைவரையும் பகவத் கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதத்தைப் படிக்குமாறு கேட்டுக் கொண்டார். பக்தர்கள் இதனை மிகவும் தீவிரமாக ஏற்றுக்கொள்வார்கள் என்று நாம் நம்புகிறோம்.
ஸ்ரீமத் பாகவதத்தையும் ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களில் எத்தனை புத்தகங்களையும் அவர்கள் படித்துள்ளார்கள் என்று நான் சில பக்தர்களிடம் கேட்டேன். பெரும்பாலானவர்கள், இரண்டாம் தீக்ஷை பெறுவதற்கு குறைந்தபட்சம் தேவையான அளவிற்கு படித்திருந்தார்கள். ஒரு சீடர், ஸ்ரீல பிரபுபாதரின் எல்லா புத்தகங்களையும் படித்திருந்தார். ஒருவர், எட்டாம் ஸ்கந்தம் வரை படித்திருந்தார். இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு தலைவர்களிடம் நான் இதனை கேட்கின்றேன். மேலும் ஒருவர் பாகவதத்தை 20 முறை படித்துள்ளார்! 20 முறை! சிந்தித்துப் பாருங்கள். இதனை செவியுற்ற போது நான் மிகவும் மகிழ்ந்தேன். எப்படியோ அனைவரும் புத்தகங்களை வினியோகிக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். தவத்திரு கோபாலகிருஷ்ண கோஸ்வாமி மஹாராஜரின் உதாரணத்தைப் பின்பற்றுங்கள். மேலும் வைசேஷிக பிரபுவின் உதாரணத்தைப் பின்பற்றுங்கள். நாம் கிருஷ்ண சிக்ஷாவால் இந்த உலகத்தை மூழ்கடிக்க வேண்டும். மேலும் திருநாட்டிற்குத் திரும்ப வேண்டும். இங்கேயே நிலைத்திருந்து, உங்கள் குருவை திரும்பி வருமாறு செய்யாதீர்கள்! ஹரே கிருஷ்ண! ஹரி போல்!!
Lecture Suggetions
-
20210904 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20211003 ஸ்ரீமத் பாகவதம் 1.11.28
-
20211003 கேள்வி மற்றும் பதில்கள்
-
20210925 கேள்வி மற்றும் பதில் அமர்வு
-
20211017 இஸ்கான் சென்னையின் படன உற்சவத்தில் உரையாற்றுகிறார்.
-
20211108 இஸ்கான் காங்டாக் மற்றும் அம்பாலா பக்தர்களுக்கு ஸ்ரீல பிரபுபாதா திரோபாவா முகவரி
-
20210625 ஸ்ரீ அத்வைத ஆச்சார்யர் சச்சிமாதாவை அழைத்துவர பல்லக்கினை அனுப்புதல்
-
20211113 ஸ்ரீமத்-பாகவதம் 1.12.29
-
20211120 ஸ்ரீமத் பாகவதம் 1.12.35 - 36
-
20210930 கேள்வி மற்றும் பதில்கள்
-
20210828 ஸ்ரீமத் பாகவதம் 1.10.33-35
-
20211015 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - விழா துவக்கவுரை
-
20200903 ஜூம் கேள்வி பதில்கள்
-
20210918 கோலோக பாத்ரா பிரச்சாரத்திற்கு செல்க
-
20210624 ஹர்மொனிக்ஸ் லைப்-ஸ்டைல் நல்லாசிவுரை
-
20210830 ஸ்ரீமத் பாகவதம்
-
20210918 வாமன தூவாதசி அன்று ஸ்ரீமத் பாகவதம்
-
20211009 ஸ்ரீமத்பாகவதம் 1.11.34
-
20211014 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - சம்பிரதாயசம்மேளன முகவரி
-
20210914 51வது சன்னியாச ஆண்டுவிழா உரை
-
20211016 பங்களாதேஷ் பக்தர்களுக்கான செய்தி
-
20211002 பக்தி விருட்ச சம்மேளன உரையாற்றுதல்
-
20211001 கேள்வி மற்றும் பதில்கள்
-
20210905 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20211016 உலகளாவிய தாமோதர விழா துவக்கவுரை
-
20211017 ஸ்ரீமத் பாகவதம் 1.12.2
-
20210710 சாந்திபூரில் ஸ்ரீ சைதன்யர் மற்றும் அவரது சகாக்களின் லீலைகளை கேட்பதால் கிடைக்கும் பலன்கள்
-
20210523 அமோகனை தன் கருணையினால் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காப்பாற்றுதல்
-
20211108 ஸ்ரீல பிரபுபாதாவின் திரோபாவா விரிவுரை இஸ்கான் மாயாபூர்
-
20210925 ஸ்ரீமத்- பாகவதம் 1.11.21