Text Size

20210828 ஸ்ரீமத் பாகவதம் 1.10.33-35

28 Aug 2021|Duration: 00:53:38|Tamil|Śrīmad-Bhāgavatam|Śrī Māyāpur, India

மூகம் கரோதி வாஞ்சலம் பங்கும் லங்காயதே கிரிம்
யத்-க்ருபா தம் அஹம் வந்தே ஸ்ரீ-குரும் தீன-தாரணம்
பரமானந்த-மாதவம் ஸ்ரீ சைதன்ய ஈஷ்வரம்
ஹரி: ஓம் தத் ஷத்

ஓம் நமோ பகவதே வாஸுதேவாய 
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய

ஸ்ரீமத் பாகவதம் 1.10.33

அத தூராகதான் சௌரி:
 கௌரவான் விரஹா துரான்
ஸன்னிவர்த்ய த்ருடம் ஸ்னிக்தான்
ப்ராயாத் ஸ்வ-நகரீம் ப்ரியை:

மொழிபெயர்ப்பு: பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் இருந்த ஆழ்ந்த பாசத்தினால், குரு வம்சத்தைச் சேர்ந்த பாண்டவர்கள் அவரை வழியனுப்புவதற்காக நீண்ட தூரம் அவரைப் பின்தொடர்ந்து சென்றனர். இனி வரப்போகும் பிரிவை எண்ணி அவர்கள் கலக்கமடைந்தனர். ஆனால் அவர்களை திரும்பிச் செல்லும்படி பகவான் கேட்டுக் கொண்டார். பிறகு அவர் தமது பிரியமான சகாக்களுடன் துவாரகையை நோக்கிப் புறப்பட்டார்.

ஸ்ரீமத் பாகவதம்  1.10.34 – 35

குரு-ஜாங்கள-பாஞ்சாலான்
சூரஸேனான் ஸயாமுனான்
ப்ரஹ்மாவர்தம் குருக்ஷேத்ரம்
 மத்ஸ்யான் ஸாரஸ்வதான் அத

மரு-தன்வம் அதிக்ரம்ய
 ஸௌவீராபீரயோ: பரான்
ஆனர்தான் பார்கவோபாகாச்
 ச்ரான்தவாஹோ மனாக் விபு:

 மொழிபெயர்ப்பு: சௌனகரே, பகவான் பிறகு குருஜாங்களம், பாஞ்சாலம், சூரஸேனா, யமுனா நதிக் கரையிலுள்ள நிலப்பரப்பு, பிரம்மாவர்தம், குருட்சேத்திரம், மத்ஸ்யம், ஸாரஸ்வதம், பாலைவனங்களைக் கொண்ட மாகாணம் மற்றும் நீர்ப்பஞ்சமுள்ள நிலப்பகுதி ஆகிய இடங்களை நோக்கி முன்னேறிச் சென்றார். இம்மாகாணங்களைக் கடந்து சென்றபின், படிப்படியாக அவர் ஸௌவீர மற்றும் ஆபீர மாகாணங்களை அடைந்தார். பிறகு மேற்கே சென்று, இறுதியாக துவாரகையை அடைந்தார்.

பொருளுரை: பகவான் முன்பு கடந்து சென்ற மாகாணங்கள் வேறு பெயர்களை கொண்டிருந்தன. ஆனால் அவர் டெல்லி மாகாணத்தில் புகுந்து, பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சௌரஸ்த்ர, குஜராத் மற்றும் இறுதியாக அவரது சொந்த மாகாணமான துவாரகையை அடைந்தார் என்பதைச் சுட்டிக்காட்ட போதுமான ஆதாரங்கள் தரப்பட்டுள்ளன. இன்றைய மாகாணங்களை பழங்காலத்து மாகாணங்களுடன் ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்வதால் மட்டுமே எந்த இலாபத்தையும் நாம் அடையப்போவதில்லை. ஆனால் ராஜஸ்தான் பாலைவனமும், மத்திய பிரதேசத்தைப் போன்ற தண்ணீர் பஞ்சமுள்ள மாகாணங்களும் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் இருந்ததாகத் தெரிகிறது. பாலைவனம் சமீபகாலத்தில் உண்டானதென்ற நில ஆய்வு நிபுணர்களின் விஞ்ஞான தத்துவ விளக்கம் பாகவதத்தின் கூற்றுக்களால் ஆதரிக்கப்படவில்லை. பிரபஞ்சம் வெவ்வேறு நிலைகளில் மாறிக்கொண்டே போகிறது என்பதால், இதை ஆராய்ந்து கண்டுபிடிக்கும் வேலையை பூகோள சாஸ்திரிகளுக்காக ஒதுக்கி விடுகிறோம். குரு மாகாணங்களில் இருந்து புறப்பட்ட பகவான் அவரது சொந்த மாகாணமான துவாரகையை இப்பொழுது அடைந்துவிட்டதில் நாம் திருப்தியடைகிறோம். குருட்சேத்திரம் வேத காலத்திலிருந்து இன்னமும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. கருத்துரையாளர்கள் குருட்சேத்திரத்தின் இருப்பை மறுக்கின்றனர் அல்லது புறக்கணிக்கின்றனர். இது அவர்களுடைய சுத்த முட்டாள்தனத்தையே காட்டுகிறது.

ஜெயபதாக ஸ்வாமி:  பாண்டவர்கள், குரு வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் காண்கிறோம். பாசத்தால் அவர்கள் சிறிது தூரம் இறைவனுடன் சென்றனர். பின்னர் பகவான் அவர்களைத் திரும்பிச் செல்லும்படி கேட்டுக் கொண்டார். எனவே அவர் எப்படி துவாரகைக்குச் சென்றார் என்பது இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இந்தியாவின் பகுதிகள், அவைகளுக்கு இப்போது வேறு பெயர் இருக்கலாம் ஆனால் அவைகள் இந்தியாவின் பகுதிகள்தான். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது தாமரை பாதங்களை இந்த பாரத பூமியின் மீது வைத்தார். பாண்டவர்கள் எப்போதும் இறைவனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தனர். மேலும் அவர்களின் அர்ப்பணிப்பு காரணமாக, அவர்கள் இறைவனின் கடந்த கால லீலா நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். எனவே இறைவனின் பக்தி யோகத்தில் நாமும் பங்கேற்க வேண்டும்.  பக்தி-யோகத்தின் செயல்முறை என்பது ஒரு நாளின் 24 மணிநேரமும், எல்லா நேரத்திலும் பகவானுக்கு  சேவை செய்வதாகும்.. மேலும் பக்தி-யோகா செயல்பாட்டின் மூலம் நாம் எப்போதும் பக்தி சேவையில் சுறுசுறுப்பாக இருப்போம். பக்தி சேவையில் ஒன்பது விதமான வெவ்வேறு செயல்முறைகள் உள்ளன, மேலும் ஒருவர் பக்தி சேவையின் ஒன்று அல்லது ஏதாவதொரு  செயல்முறைகளில் ஈடுபட வேண்டும். இப்போது நான் கீர்த்தனம் பாடுகிறேன். கீர்த்தனை வெவ்வேறு வகைகளில் உள்ளது, இப்போது நான் இறைவனை மகிமைப்படுத்தி பாடுகிறேன், இது மற்றொரு வகை கீர்த்தனையாகும். நீங்கள் அனைவரும் இதை கேட்கிறீர்கள் என்பதால் இதுவும் பக்தி சேவையின் செயல்முறைகளில் ஒன்றாகும். பகலில் இறைவனை நினைத்தால் அது ஸ்மரணம். பின்னர் நீங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்தால், வணக்கம் செலுத்துவீர்கள் அது வந்தனம். மேலும் பாத சேவனம் என்பது இறைவனுக்குச் சில சேவைகளைச் செய்வதாகும். அதாவது இறைவனுக்கு சமைப்பதாக இருக்கலாம் அல்லது புத்தகங்களை விநியோகிப்பதாக இருக்கலாம். இதன்மூலம் நீங்கள் சில நடைமுறை சேவை செய்கிறீர்கள். ஒருவேளை நீங்கள் கோவிலை சுத்தம் செய்வதாக கூட இருக்கலாம். நீங்கள் உங்கள் வீட்டைச் சுத்தம் செய்கிறீர்கள்,  உங்கள் வீட்டில் கோயில் இருப்பதாக வைத்து கொண்டால், அது இறைவனின் ஸ்தலமாகிறது. பிரம்மச்சாரிகள்  கோயிலைச் சுத்தம் செய்கிறார்கள் அல்லது சில ஆன்மீகச் செயல்களைச் செய்கிறார்கள். கிருஹஸ்தராக இருப்பவர்கள் கிருஷ்ணரையே நினைத்துக் கொண்டு தங்கள் செயல்கள் அனைத்தையும் செய்ய வேண்டும். நான் கிருஷ்ணருக்காக இதைச் செய்கிறேன் என்று நினைத்து, குழந்தையைப் பார்த்துக்கொள்வது அல்லது வேறு ஏதாவது செயலைச் செய்வது. எனவே இந்த வழியில், நீங்கள் அர்ச்சனம் எனும் தெய்வ வழிபாட்டைச் செய்கிறீர்கள். நீங்கள் உங்களை கிருஷ்ணரின் வேலைக்காரன் என்று நினைக்கிறீர்கள் என்றால் அது தாஸ்யம். இறைவன் என் நெருங்கிய நண்பன் என்று நான் நினைத்தால், அது ஸக்யம்  மற்றும் நட்பு எனப்படும். இந்த வழியில், நாம் அனைத்தையும் இறைவனின் தாமரை பாதங்களில் சமர்ப்பிக்கிறோம், அது ஆத்ம-நிவேதனம், இறைவனின் தாமரை பாதங்களில் ஒருவரின் சுயத்தையும் அர்ப்பணிக்கிறோம். இவ்விதத்தில் பாண்டவர்கள் ஒரு சிறப்பு நிலையை பெற்றிருந்தனர், அவர்கள் ஏற்கனவே இறைவனின் கடந்தகால லீலா நிகழ்வுகளில் ஒரு பகுதியாக இருந்தனர் மற்றும் கிருஷ்ணரிடம் மிகவும் பற்று கொண்டிருந்தனர். எனவே நாம் பக்தி சேவையுடன் தொடங்கும் போது, ​​நாம் விதி-மார்காவைப் பின்பற்றுகிறோம். இறைவன் மீது நமக்கு இயல்பான பாசம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் நாம் தொடர்ந்து நடைமுறை விதிகளை பின்பற்றுகிறோம். மேலும் இறைவனுக்குத் தொடர்ந்து பக்தித் தொண்டு செய்வதால், இறைவன் மீது நமக்குள்ள பற்று அதிகரிக்கிறது. பக்தியின் அமிர்தமான பக்தி-ரஸிம்ருத-சிந்துவில், வைதி-பக்தியின் செயல்முறைக்குள்  ராகானுகா-பக்தி என்று ஒரு நிலை உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உங்கள் சேவையை எவ்வாறு மேம்படுத்துவது என்று நீங்கள் நினைக்கும் போது, நான் எனது பக்தி சேவையை  உயர்ந்த நிலைக்கு கொண்டு வர விரும்பும் வகையில் செய்வேன். மற்ற எல்லா யோகாக்களும்,  எல்லா நேரத்திலும் முழுமையாக நிலைநிறுத்தப்படுவதில்லை. ஆனால் பக்தி சேவை செய்வதன் மூலம் நீங்கள் எப்போதும் கிருஷ்ண உணர்வில் நிலைத்திருப்பீர்கள்.

ஆகவே எங்களுக்கு அது தெரியும் பிரம்மச்சாரியாக இருப்பது மிகவும் அருமை. ஆனால் எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மேலும் ஒருவர் ஒரு குடும்பத்துடன் வாழ விரும்பலாம் மற்றும் ஒரு கிருஹஸ்தராகவும் இருக்கலாம். மேலும் இரண்டு வகையான திருமணமானவர்கள் உள்ளனர் கிரஹமேதிகள்  மற்றும் கிருஹஸ்தர்கள். ஒரு நாள் நான் ஸ்ரீல பிரபுபாதாவுடன் மாயாப்பூரில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அங்கே சில காளை மாடுகள் ஒரு குச்சியைச் சுற்றிச் சுற்றி வந்து, செடியிலிருந்து பயிறுகளை பிரிக்கத் தங்கள் கால்களால் மிதித்து கொண்டிருந்தன. எனவே ஸ்ரீல பிரபுபாதர் கூறினார், இந்த குச்சியின் பெயர் என்ன? இது மெய்-தண்டம், பெண்ணின் குச்சி என்று அழைக்கப்படுகிறது! க்ருஹமேதி சுற்று சுற்றி வருகிறார் ஆனால் அவரது கவனம் புலன் திருப்தியில் மட்டுமே உள்ளது. ஆனால் கிருஹஸ்தர் ஆன்மீக கவனம் கொண்டவர்களாக உள்ளனர். சில புலன் திருப்திக்கான உரிமம் அவர்களிடம் இருக்கலாம் ஆனால் அவர்கள் அதை கிருஷ்ண உணர்வோடு செய்கிறார்கள். எனவே திருமணமானவர்கள் கிருஹஸ்தர்களாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆணுக்கு பெண் நரகத்தின் நுழைவாயில் என்று கூறுகிறது சாஸ்திரம். மேலும் ஒரு பெண்ணுக்கு ஆண் நரகத்தின் நுழைவாயில். ஆணோ பெண்ணோ யாராயினும் புலன் இன்பத்திற்காக ஆனவர்களே என்று  வெறுமனே பார்த்தார்கள் என்றால், ஆண், தன் மனைவியுடன் இணைந்திருப்பதால், அடுத்த பிறவி பெண்ணாகவே எடுக்கிறான். மேலும் பெண் என்பதால், அவள் தன் கணவனுடன் இணைந்திருப்பதால், அவள் ஒரு ஆணாக அடுத்த பிறவி எடுக்கிறாள். ஆனால் அவர்கள் இருவரும் கிருஷ்ண உணர்வுடன் இருந்தால், இந்த ஆபத்து இல்லை. ஏனெனில், அவர்களுக்கு பகவான் கிருஷ்ணரிடம் அதிக பற்று இருக்கும். நாங்கள் பாகவதத்தில் படித்த்திருக்கிறோம்,தேவஹுதி  எப்படி கடவுளிடம் திரும்பினாள் என்று. அவள் தன் கணவருக்கு சேவை செய்தாள், இந்த வழியில் அவள் பத்து குழந்தைகளைப் பெற்றாள். ஆனால் அவள் மீண்டும் கடவுளிடம் சென்றாள். துருவ மகாராஜாவின் தாயார் சுனீதியும் கடவுளிடம் திரும்பிச் சென்றார். இதைப் போலவே எங்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் பக்தி-யோகிகளாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர்கள் அனைவரும் கடவுளிடம் திரும்ப வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நான் ஸ்ரீல பிரபுபாதாவிடம், வாழ்க்கைக்குப் பின் மீண்டும் மீண்டும் உங்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன் என்று சொன்னேன். அவர் கேட்டார், ஏன் என்னை திரும்பி வரச் செய்ய வேண்டுமா என்று? நான் ஏதாவது தவறாக சொன்னேனா? நான் சரியாகச் சொல்லவில்லையா? என்று குழம்பினேன். பிறகு நான் சொன்னேன், வாழ்க்கைக்குப் பிறகும் உங்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன் என்று. அப்போது அதைக் கேட்டு ஸ்ரீல பிரபுபாதா சிரித்தார். ஆகவே நமது சீடர்கள் பக்தி மார்க்கத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

ஒவ்வொரு அவதாரமும், இறைவனின் ஒவ்வொரு அவதாரங்களும் ஒரு குறிப்பிட்ட மனாநிலையைக் கொண்டுள்ளன. பகவான் நரசிம்ஹதேவருக்கு கோபமான மனநிலை இருப்பது போல, வராஹதேவர் பூமி தாயை  கர்ப்போதக சமுத்திரத்தின் ஆழத்திலிருந்து தூக்கிவிட்டார். பகவான் ராமச்சந்திரன் சிறந்த அரசர். பகவான் கிருஷ்ணர் பரம புருஷர். மேலும், பகவான் சைதன்யரும், பஞ்ச தத்துவமும், பதித-பாவனாவாக இருப்பதால், விழ்ந்த ஆத்மாக்கள்அனைவரையும் விடுவிக்க இறங்கினர். கிருஷ்ண உணர்வு எவ்வளவு அதிகமாக விரிவடைகிறதோ, அவ்வளவு அதிகமாக கிருஷ்ணரின் அன்பு உலகம் முழுவதும் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே அந்த வகையில், இந்த ஹரிநாம  ஸங்கீர்த்தனத்தைப் உலகம் முழுதும் பரப்புவதன் மூலம் நாம் உதவலாம், இறைவனுக்குச் சேவை செய்யலாம். சிலர் புத்தகங்களை விநியோகம் செய்கிறார்கள். சிலர் நாஹட்டாவை உபதேசிக்கிறார்கள். சிலர் பக்தி விருட்சா நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். பக்தி விருட்சா நிகழ்ச்சிகளை நடத்த பல மாதாஜிகளும் பிரபுக்களும் உள்ளனர். அப்படியானால், மற்றவர்களும் கிருஷ்ண உணர்வில் இருக்க நாம் எவ்வாறு உதவலாம் என்று அவர்கள் சிந்திக்கின்றனர். எனவே அந்த வகையில் நாம் சைதன்ய பகவானுக்கும் பஞ்ச தத்துவத்திற்கும் உதவுகிறார்கள். மற்றும் அவர்கள் புனித நாமம் உலகின் ஒவ்வொரு நகரத்திலும் கிராமத்திலும் பரவுவதைக் காண விரும்புகிறார்கள். ஸ்ரீல பிரபுபாதர் கௌர வாணியைப் பரப்பிக்கொண்டிருந்தார். எனவே, நாம் சைதன்ய பகவானின் செய்தியை பரப்ப உதவ வேண்டும். அவ்வழியில் கிருஷ்ண உணர்வு பரவ உதவும்  பிரம்மசாரிகள் மற்றும் கிருஹஸ்தர்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நான் பிரம்மச்சாரிகள் என்று சொல்லும்போது, ​​அதில் வனப்பிரஸ்தங்கள் மற்றும் சந்நியாசிகள் அடங்குவர்.

எனவே கருணையை எப்படிக் கொடுப்பது என்பதுதான் பகவான் ஸ்ரீ சைதன்யரின் மனநிலை. யவனர்கள் அனைவரும் எவ்வாறு விடுதலை பெற முடியும் என்பதை அவர் ஹரிதாச தகூராவிடம் விளக்கி கூறினார்.  ஹரிதாச தாகூராவும்  தயவு செய்து கவலைப்பட வேண்டாம், அவர்களும் கண்டிப்பாக விடுதலை பெறுவார்கள் என்று கூறினார். ஒரு பக்தனின் மனநிலை இவ்வாறாக இருப்பதை நாம் காண முடிகிறது, அவர்கள் எப்போதும் இறைவனின் விருப்பத்தையே பூர்த்தி செய்ய விரும்புகிறார்கள். கிருஷ்ணர் ஹஸ்தினாபுரத்திலிருந்து துவாரகைக்குச் சென்றபோது, ​​யுதிஷ்டிரர் இறைவனைக் காக்க நான்கு அக்ஷௌஹிணிகள் அல்லது நான்கு விதமான படை வீரர்களை அனுப்பினார். இதை ஒரு கோணத்தில் பார்த்தால் அவசியமில்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர் இறைவன் மீதுள்ள அன்பினால் இதைச் செய்தார். எனவே, சைதன்ய பகவான் அனைவருக்கும் விடுதலை கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார். அனைத்து பக்தர்களும் நினைத்தால், பக்தி-யோகம், பக்தித் தொண்டு போன்றவற்றின் பக்கம் மக்களை எப்படியும் ஈர்க்க முடியும். எனவே ஸ்ரீல பிரபுபாதர் சொன்னது போல் ஒருவரை பக்தனாக்க, அதிகமான  வாளிகள் இரத்தம் தேவைபடுகிறது. ஒருவன் பக்தனாக மாறுவது எளிதல்ல. பகவத் கீதை  கூறுகிறது, நாம் இந்த உடல் அல்ல நாம் ஆன்மா. ஆனால் பொதுவாக மக்கள் தங்களை உடல் என்று நினைக்கிறார்கள். மேலும் அவர்கள் இந்த உடலை திருப்திப்படுத்துவதற்காக அனைத்தையும் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் உடல் உணர்வுடன் இருப்பதன் மூலம் அவர்கள் உண்மையில் துன்பத்திற்கு ஆளாகிறார்கள் என்பது தெரியாது. ஏனெனில் புலன்கள் இன்பத்திற்கு மட்டுமல்ல, துன்பத்திற்கும் ஆதாரம். வெப்பமான காலநிலையில் ஒரு விசிறி நன்றாக இருக்கும், ஆனால் குளிர்ந்த காலநிலையில் நன்றாக இருக்காது. புலன்கள் இன்பம் தருவது போல் துன்பமும் தருகிறது.

 எனவே மக்கள் உயர்ந்த ரசனையை வளர்க்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நாம் கிருஷ்ணரின் ஒரு பகுதி. நாம் கிருஷ்ணரைப் மகிழ்ச்சிபடுத்தினால், நாமும் மகிழ்ச்சி அடைகிறோம். கிருஷ்ணர் சிறிது மகிழ்ச்சி அடைந்தால், நாம் சுனாமியைப் போல மகிழ்ச்சியைப்பெறுகிறோம்

நாம் எப்போது சைதன்ய மஹாபிரபுவை பற்றி ஹுசைன் ஷாவிடம் விவரித்தாலும், ​​அப்போது அவருடைய கண்களில் இருந்து கங்கை நீர் போல்  கண்ணீர் வருகிறது. மேலும் அவர் ஆறு மணி நேரம் சிரிப்பார்! ஆறு மணி நேரம் யாரால் சிரிக்க முடியும்?! யாரால் இப்படி நடிக்க முடியும்? அவர் இதை முற்றிலும் பரவசமாகவும், முற்றிலும் மகிழ்ச்சியாகவும், ஆனந்தமாகவும் செய்வார். இந்தியாவில் சில பொது பூங்காக்களில் இந்த சிரிப்பு கிளப் உள்ளது. ஹாஹாஹாஹா! தினமும் பத்து நிமிடம் சிரிக்கிறார்கள். ஆனால் ஆறு மணி நேரம்? கௌராங்கா! கௌராங்கா! இதைக் கேட்ட ஹுசைன் ஷா கண்கள் கலங்கின! இந்த சைதன்ய மஹாபிரபு, அவர் குதாவிலிருந்து வேறுபட்டவராக இல்லை என்று கூறினார். எனவே சைதன்ய பகவானை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றார். எனவே சைதன்ய மஹாபிரபுவின் கடந்தகால லீலா நிகழ்வுகளில் இருப்பதற்கு நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளானோம். சைதன்யபாகவதத்தில்  ஒரு  ஸ்லோகம் உள்ளது:  அத்யாபி ஹோ நித்ய-லீலா கரே கௌர-ராய, கோனா கோனா பாக்யவன் தேகி பரே பாயா. இன்றுவரை, சைதன்ய பகவான், கௌர ராயப் பெருமான் தனது நித்திய கடந்தகால லீலா  நிகழ்வுகளையும் நிகழ்த்த சில அதிர்ஷ்டசாலி ஆன்மாக்களால் அதை பார்க்க முடிகிறது.

இன்னும் சில நாட்களில், ஸ்ரீல பிரபுபாதரின் வியாச-பூஜையை கடைப்பிடிக்கிறோம். மேலும் ஐநூறு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தனது சேனாபதி பக்தரை அனுப்புவார் என்று பகவான் சைதன்யரால் கணிக்கப்பட்டது. மேலும் அவர் செய்தியை உலகம் முழுவதும் கொண்டு செல்வார். எனவே எப்படியாயினும், யாராயினும் காஷதேஷம் அல்லது ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் வசிப்பவர்கள் யாராயினும் பகலான் ஸ்ரீ சைதன்யருக்கு உதவலாம்.  எனவே அனைவரும் புனித நாமத்தை ஜபிப்பதை நாம் பார்க்கலாம். மாயாப்பூரில் ஒரு விரிவுரையில், ஸ்ரீல பிரபுபாதா, 1900 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கல்கத்தாவில் ஒரு கடுமையான பிளேக் நோய் இருந்தது என்று கூறினார். மேலும் சில பாபாஜிகள் ஹரே கிருஷ்ண கோஷத்தை பரப்பினார்கள். இந்துக்கள் மட்டுமின்றி, இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், யூதர்களும் கோஷமிட்டனர். இதன் மூலம் அவர்கள் அனைவரும் இந்த கொள்ளை நோயிலிருந்து காப்பாற்றப்பட்டனர். ஆனால் ஸ்ரீல பிரபுபாதர் சில பௌதிக நன்மைக்காக ஹரிநாமத்தை உச்சரிப்பது புண்படுத்தும் என்று விளக்கினார். ஆனால் பக்தர்கள் எப்பொழுதும் இறைவன் விரும்பினால் மட்டுமே முதலில் சொல்ல முடியும். ஆனாலும் மற்றவர்கள் மனதை புண்படுத்தும் வகையில் கோஷமிட்டாலும் ஓரளவுக்கு பலன் கிடைக்கும். வருங்காலத்தில் ஒருவன் குற்றங்களுடன் ஜபித்தாலும், அவன் தூய நாமங்களை ஜபிக்க முடியும்.

எனவே இப்போது  COVID-19 தொற்றுநோய் அதிகரித்து வருகிறது, புதிய மாறுபாடுகளாக முழு உலகமும் புனித நாமங்களை ஜபிக்க வேண்டும். அவர்கள் ஹரே கிருஷ்ண மஹா-மந்திரத்தை  ஜபிக்க விரும்பவில்லை என்றால், அவர்கள் கடவுளின் மற்ற நாமங்களை உச்சரிக்கலாம்.

எப்படியிருந்தாலும், பாண்டவர்கள் எப்படி எப்போதும் கிருஷ்ண உணர்வில் இருந்தார்கள் என்பதை உணர்கிறோம், அவர்களைப் போல் நீங்களும்  எப்போதும் கிருஷ்ண உணர்வோடு இருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால், ஐந்து நிமிடங்களில் பதில் தருகிறேன்.

பெங்காலி: ஒரு சாமியார், ஆலோசகர் மற்றும் கோவில் அதிகாரியின் உணர்வு மற்றும் மனநிலை எப்படி இருக்க வேண்டும்?

ஜெயபதாக ஸ்வாமி: ஒன்றை கவனத்தில் கொள்ளுங்கள் - கிருஷ்ணரை எப்படிப் பிரியப்படுத்துவது, ஆன்மீக குருவை எப்படிப் பிரியப்படுத்துவது. பங்கேற்பாளர்களை எப்படி கிருஷ்ண உணர்வுக்கு மாற்ற முடியும் என்பது பற்றி சிந்தியுங்கள்.

பெங்காலி: ஸுகமலா நித்யானந்தா தாஸா, இஸ்கான் ஹபீப்கஞ்ச்: ஸ்ரீல பிரபுபாதர் உலகம் முழுவதையும் கிருஷ்ண உணர்வால் நிரப்பினார். ஏற்கனவே பல மத போதகர்கள் இதைச் செய்ய முயற்சித்துள்ளனர். ஆனால் அவர்களில் யாராலும் வெற்றிபெற முடியவில்லை. ஸ்ரீல பிரபுபாதாவின் வெற்றிக்குப் பின்னால் செயல்பட்ட இந்த வெற்றியின் சிறப்புத் தன்மை என்ன? ஸ்ரீல பிரபுபாதாவின் சேவையில் நாம் எவ்வாறு வெற்றியுடன் ஈடுபடலாம்?

ஜெயபதாகா ஸ்வாமி: ஸ்ரீல பிரபுபாதா தனது வெற்றியின் அடையாளம் என்ன என்பதை விளக்கிக் கொண்டிருந்தார். அவர் எப்போதும் குரு பரம்பரையைப் பின்பற்றினார். அவர் தனது ஆன்மிக குருவின் கட்டளைகளை, நடைமுறையில் வார்த்தைகள் மாறாமல் சரியாக பின்பற்றி வந்தார். அதுபோல, ஸ்ரீல பிரபுபாதா மற்றும் நமது குருதேவரின் கட்டளையைப் பின்பற்றினால், இயற்கையாகவே நமக்கு இந்த வெற்றி கிடைக்கும். இறுதிக்கேள்வி.

ஸ்ரீகுரு பக்தி தேவி தாஸி, சிட்னி, ஆஸ்திரேலியா: குரு மஹராஜா, வாழ்க்கைக்குப் பின் வாழ்க்கைக்கும், அதோடு கூட வாழ்க்கைக்குப் பிறகு வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஜெயபதாக ஸ்வாமி: நீங்கள் பார்க்கிறீர்கள், வாழ்க்கைக்குப் பின் வாழ்க்கை என்பது ஜடவுலகில் பிறப்பதாகும். வாழ்க்கைக்குப் பிறகு வாழ்க்கை என்பதில் கூட, நாம் கடவுளிடம் திரும்பிச் செல்லலாம். ஆனால் நாம் செல்லவில்லை என்றால், நாம் இன்னும் ஸ்ரீல பிரபுபாதாவுக்கு சேவை செய்யவேண்டும் என்பதாகும். நாம் ஆன்மீக உலகிற்குச் சென்றால், இயற்கையாகவே இறைவனுக்குச் சேவை செய்தவர்களாக இருப்போம்.

- END OF TRANSCRIPTION -
Transcribed by ஜனதா சுந்தர்
Verifyed by
Reviewed by

Lecture Suggetions