மூகம் கரோதி வாஞ்சலம் பங்கும் லங்காயதே கிரிம்
யத்-க்ருபா தம் அஹம் வந்தே ஸ்ரீ-குரும் தீன-தாரணம்
பரமானந்த-மாதவம் ஸ்ரீ சைதன்ய ஈஷ்வரம்
ஹரி: ஓம் தத் ஷத்
ஜெயபதாக சுவாமி: எல்லாப் புகழும் ஸ்ரீமதி ராதாராணிக்கே. 51 ஆண்டுகளுக்கு முன்பு இந்த புனித நாளில், லாஸ் ஏஞ்சல்ஸில் ஒன்பது சந்நியாசிகள் இருப்பதாகவும் இந்தியாவில் இருவர் இருப்பதாகவும் ஸ்ரீல பிரபுபாதர் கூறியது எனக்கு நினைவிருக்கிறது, , அதனால் நான் 11 வது நபர் என்று அவர் கூறினார். புனிதத் தன்மையோடு அவர் எனக்கு தண்டம் கொடுத்தார், சந்நியாச காயத்ரி கொடுத்தார். நான் ஆங்கிலத்தில் பேசவா அல்லது பெங்காலியில் பேச வேண்டுமா? நான் ஆங்கிலத்தில் பேசினால், சுஜிதேந்திரிய பிரபு பெங்காலியில் சொல்ல வேண்டும். ஒரே நேரத்தில் மொழிமாற்றம் நடக்கிறது என்று கேள்விப்பட்டேன். எதுஎவ்வாறாயினும், நம்ம க்ருஹஸ்தர்களில் பலர் சந்நியாசிகளைப் போல் இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் கிருஷ்ணருக்கு சேவை செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். கிருஷ்ணருக்கு சேவை செய்வதே உண்மையான விஷயம். ஆன்மீக குருவின் கட்டளையை நிறைவேற்றுங்கள். நான் சந்நியாசியாக இருந்ததால், கோவிலுக்கும் சீடர்களுக்கும் ஆன்மீக குருவுக்கும் என் கடமை இருந்தது. நான் ஒரு வேளை க்ருஹஸ்தனாக இருந்திருந்தால், என் குடும்பத்தை பராமரிக்க நிறைய நேரம் செலவிட வேண்டியிருக்கும். ஸ்ரீல பிரபுபாதர் மிகவும் கருணையுள்ளவராக இருந்தார், அவர் எனக்கு பல அறிவுரைகளை வழங்கினார் மற்றும் அவர் எனக்கு நிறைய சங்கத்தை வழங்கினார். மாயாபூர் தாமாவில் முன்னேற்றங்களை ஏற்படுத்தச் சொன்னார். இன்று ராதாராணி கிருஷ்ணரின் மகிழ்ச்சிக்காக மாயாபூர் தாமமான நவத்வீப தாமத்தை எப்படி உருவாக்கினார் என்று கேள்விப்பட்டோம்.
எனவே இது மிகவும் விசேஷமான இடம் மற்றும் நான் இங்கு புனிதமான தாமத்தில் இருப்பதால் மிகவும் அதிர்ஷ்டசாலி. இந்த கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக, நான் ஒரு வருடத்திற்கும் மேலாக மாயாபூரில் இருக்கிறேன். அதே சமயம் இணையத்தைப் பயன்படுத்தி உலகெங்கிலும் உள்ள பல கோயில்களுக்குச் சென்று வர முடிகிறது. ஸ்ரீல பிரபுபாதா என்னிடம் கூறினார் மாயாபூரில் அதிக நேரம் செலவிட வேண்டும் என்றும், அதே நேரத்தில் அதிக இடங்களுக்கு பயணம் செய்து பிரசங்கம் செய்ய வேண்டும் என்றும் சொன்னார். இப்போது இணையதளத்தின் துணையோடு நான் இரண்டையும் செய்கிறேன். நிச்சயமாக, நான் உலகம் முழுவதும் பல முறை பயணம் செய்கிறேன் . சில சமயம் வருடத்தில் ஐந்து அல்லது ஆறு முறை கூட பயணம் செய்கிறேன் . பல நேரங்களில் நான் எனது செயலாளர்களை சோர்வடையச் செய்து விடுவேன்! மேலும் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பக்தர்களைப் பார்ப்பது எனக்கு மிகவும் உத்வேகமாக இருக்கிறது. எனவே எல்லா ஆண்களும், பெண்களும் எப்படி கிருஷ்ண உணர்வோடு இருக்க முடியும் என்பது பற்றி இப்போது யோசித்துக் கொண்டிருக்கிறேன். சுனிதி, மற்றும் தேவஹூதி, தங்கள் குழந்தைகளை கிருஷ்ண உணர்விற்கு வழிநடத்தும் தாய்மார்களாக இருந்து, கடவுளிடம் திரும்பிச் சென்றதை நாம் காண்கிறோம். நிச்சயமாக தேவஹுதி, அவள் பரம புருஷ பகவானையே தன் மகனாகக் கொண்டாள் கபில தேவராகப் பகவான் அவதரித்தார்.
எல்லா ஆண்களும், பெண்களும், ஸ்ரீல பிரபுபாதரின் விருப்பங்களையும், பஞ்ச தத்துவத்தின் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் வகையில், கிருஷ்ண உணர்வில் ஈடுபட வேண்டும் என்று நான் நினைக்கிறேன் . கிருஷ்ணர் என்னை இந்த உலகில் எவ்வளவு காலம் தங்க வைப்பார் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் எனது கடைசி மூச்சு வரை ஸ்ரீல பிரபுபாதாவின் வழிமுறைகளைப் பின்பற்ற முடியும் என்று நம்புகிறேன்.
மற்ற பக்தர்களுடன் பாதயாத்திரையை துவக்கிய பிறகு, தனிப்பட்ட முறையில் தெய்வங்களை விரைவாக தரிசனம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதனால் நான் உங்களிடம் உரையாற்றுகிறேன். நாம் ஸ்ரீல பிரபுபாதாவை, அவருடைய அறிவுறுத்தல்களை மையத்தில் வைத்திருக்க விரும்புகிறோம். இந்த பௌதிக உலகம் மிகவும் ஆபத்தான இடம் என்பதை நாம் அறிவோம். ஒவ்வொரு அடியிலும் ஆபத்து இருக்கிறது. எனவே கிருஷ்ணருக்கு சேவை செய்ய முயல்கையில் ஸ்ரீல பிரபுபாதரின் கருணையால் மகத்தான பலன்களை உணர்கிறேன். மேலும் இறைவனின் அன்பை அனைவரும் சுவைக்க வேண்டும் என்று பகவான் ஸ்ரீ சைதன்யர் விரும்பினார். பக்தி மரத்தின் பழங்கள் வழங்கப்பட உள்ளது, அதனால் அனைவரும் அந்தப் பழத்தை சுவைத்து, பகவான் ஸ்ரீ சைதன்யரின் வேண்டுகோளின்படி பிறரிடமும் விநியோகிக்க உதவுவார்கள் என்று நம்புகிறேன் என கூறினார். ஒரு சமயம் ஒருவர் ஸ்ரீல பிரபுபாதாவிடம் தெய்வங்களின் முன், அவர் எதற்காக ஜெபிக்கிறார் என்று கேட்டார். நிச்சயமாக இது மிகவும் தனிப்பட்ட கேள்வி மற்றும் ஒரு சீடருக்கு இதுபோன்ற கேள்வியைக் கேட்க உண்மையில் உரிமை இல்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால் ஸ்ரீல பிரபுபாதர் அந்த சீடரிடம் திரும்பி, நான் கீழே விழக்கூடாது என்று பிரார்த்திக்கிறேன் என்றார். எனவே, நிச்சயமாக, இந்த ஜடவுலகம் நம்மை எப்பொழுதும் சோதிக்கிறது என்பதை நாம் அறிவோம். மேலும் குருவிற்கும் கௌரங்காவிற்கும் நம்மை அர்ப்பணிப்பது மிகவும் முக்கியம். எனவே, எனக்கு இந்த சந்நியாசியாகும் வாய்ப்பு கிடைத்தது, தற்போது 51வது ஆண்டு விழாவையும் கொண்டாடுகிறோம், ராதா மற்றும் மாதவரின் கருணையால் ஸ்ரீல பிரபுபாதருக்கு நான் எப்போதும் சேவை செய்வேன் என்று நம்புகிறேன். ஹரே கிருஷ்ணா!
உண்மையில் ஸ்ரீமதி ராதாராணியின் மகிமைகளைப் பற்றி பக்தி புருஷோத்தம ஸ்வாமிகள் மிக அழகாக புத்தகம் எழழுதியுள்ளார்,, அதன் இரண்டாம் பாகத்தைப் படிக்க ஆவலோடு காத்திருக்கிறேன். ஆனால் முதல் பாகத்தில் கூறப்பட்டிருந்தது, அவர்கள் வெவ்வேறு பெண்களின் கற்பை சோதிப்பதற்காக பல ஓட்டைகள் கொண்ட சில பானைகளை வைத்திருப்பதாக. அந்த பானையை வைத்து கொண்டு அவர்கள் யமுனை அல்லது ஏதாவது ஒன்றைக் கடக்க வேண்டும், மேலும் அதேசமயம் அனைத்து தண்ணீரும் பானையில் தங்க வேண்டும். ஆனால் ராதாராணியைத் தவிர அனைவரும் தேர்வில் தோல்வியடைந்தனர். ஸ்ரீமதி ராதாராணி கி ஜெய்!
Lecture Suggetions
-
20210930 கேள்வி மற்றும் பதில்கள்
-
20211009 ஸ்ரீமத்பாகவதம் 1.11.34
-
20211017 ஸ்ரீமத் பாகவதம் 1.12.2
-
20210711 “திருநாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” — பத்ர பூர்ணிமா நிகழ்ச்சி சொற்பொழிவு
-
20211108 இஸ்கான் காங்டாக் மற்றும் அம்பாலா பக்தர்களுக்கு ஸ்ரீல பிரபுபாதா திரோபாவா முகவரி
-
20210925 ஸ்ரீமத்- பாகவதம் 1.11.21
-
20210523 அமோகனை தன் கருணையினால் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காப்பாற்றுதல்
-
20211003 கேள்வி மற்றும் பதில்கள்
-
20211113 ஸ்ரீமத்-பாகவதம் 1.12.29
-
20210710 சாந்திபூரில் ஸ்ரீ சைதன்யர் மற்றும் அவரது சகாக்களின் லீலைகளை கேட்பதால் கிடைக்கும் பலன்கள்
-
20210828 ஸ்ரீமத் பாகவதம் 1.10.33-35
-
20211017 இஸ்கான் சென்னையின் படன உற்சவத்தில் உரையாற்றுகிறார்.
-
20200903 ஜூம் கேள்வி பதில்கள்
-
20211014 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - சம்பிரதாயசம்மேளன முகவரி
-
20211016 பங்களாதேஷ் பக்தர்களுக்கான செய்தி
-
20211016 உலகளாவிய தாமோதர விழா துவக்கவுரை
-
20210830 ஸ்ரீமத் பாகவதம்
-
20210905 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20210925 கேள்வி மற்றும் பதில் அமர்வு
-
20211015 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - விழா துவக்கவுரை
-
20211003 ஸ்ரீமத் பாகவதம் 1.11.28
-
20211108 ஸ்ரீல பிரபுபாதாவின் திரோபாவா விரிவுரை இஸ்கான் மாயாபூர்
-
20210904 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20211001 கேள்வி மற்றும் பதில்கள்
-
20211002 பக்தி விருட்ச சம்மேளன உரையாற்றுதல்
-
20210918 வாமன தூவாதசி அன்று ஸ்ரீமத் பாகவதம்
-
20210624 ஹர்மொனிக்ஸ் லைப்-ஸ்டைல் நல்லாசிவுரை
-
20210625 ஸ்ரீ அத்வைத ஆச்சார்யர் சச்சிமாதாவை அழைத்துவர பல்லக்கினை அனுப்புதல்
-
20210918 கோலோக பாத்ரா பிரச்சாரத்திற்கு செல்க
-
20211120 ஸ்ரீமத் பாகவதம் 1.12.35 - 36