மூகம் கரோதி வாசலம் பங்கும் லங்காயதே கிரிம்
யத்-கிருபா தம் அஹம் வந்தே ஸ்ரீ-குருன் தின தாரிணம்
பரமானந்த-மாதவம் ஸ்ரீ சத்வத்னம்
ஹரி சைதன்ய ī.
ஜெயபதாகா சுவாமி: எனவே, நாரத முனிவர் தனது தந்தையும் குருவுமான பிரம்மதேவரை அணுகினார். அவர் அவரிடம், “நான் பிரபஞ்சம் முழுவதும் பயணிக்கிறேன், கலியுகத்தில், கலியுகத்தின் களங்கத்திலிருந்து நான் எப்படி விடுபடுவது?” என்று கேட்டார்.
பிரம்மதேவர் கூறினார், “மிகவும் இரகசியமான ஒரு மந்திரம் உள்ளது , அதை நீங்கள் இடைவிடாமல் உச்சரித்தால் கலியுகத்தின் தாக்கத்திலிருந்து விடுபடுவீர்கள்.”
நாரத முனிவர், “அது என்ன?” என்று கேட்டார்.
பிரம்மதேவன் கூறினார்:
ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே,
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
இதி ஷோஷகஸ் நாம்நாம்
கலி-கல்மஷ-நாசானம்
நாதঃ பரதரோபாய
ঃ ஸர்வ-வேதேஷு ধৃஷ்யதே
வேத இலக்கியங்கள் அனைத்தையும் ஆராய்ந்ததில், ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிப்பதை விட இந்த யுகத்திற்கு மேன்மையான ஓர் மத வழிமுறையைக் காணமுடியவில்லை.
எல்லா வேதங்களிலும் இதைவிடச் சிறந்த மாற்றீட்டை நீங்கள் காண முடியாது. ஆகவே, நீங்கள் இந்தக் கீர்த்தன-மேளாவை அனுபவிக்கிறீர்கள், நான் இங்கு இருப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்! ஹரே கிருஷ்ண மந்திரம் மிகவும் விசேஷமானது. பார்வதி சிவபெருமானிடம், “கலியுகத்தில் மக்கள் எப்படி வாழ்வார்கள்? புலன்கள் முதலைகளைப் போல மிகவும் மூர்க்கமாக இருக்கின்றன! புலன்களை அனுபவிப்பதற்காக ஒரு கணத்தில் அவர்கள் வெறி கொள்கிறார்கள். எனவே, அவர்கள் பாவமான விளைவுகளையும் கர்ம வினைகளையும் அனுபவிக்கிறார்கள் ” என்று கேட்டார்.
பகவான் சிவபெருமான் பதிலளித்தார், “அவர்கள் 'ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா' என இருமுறை, 'கிருஷ்ணா' என இருமுறை, 'ஹரே' என இருமுறை, 'ஹரே ராமா' என இருமுறை, 'ராமா' என இருமுறை, 'ஹரே' என இருமுறை ஜபித்தால். அதன் பொருள்:
ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே/
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
ஆகவே நாம் பௌதிக ஜீவன்கள், நமது பெயர்கள் நம்மிடமிருந்து வேறுபட்டவை. ஆனால் கிருஷ்ணர் பரம்பொருளாக இருக்கிறார். எனவே அவருடைய பெயர், லீலைகள் போன்றவை அவரிடமிருந்து வேறுபட்டவை அல்ல. கிருஷ்ணரின் திருநாமம் நமது சிறந்த நண்பன் என்று சாஸ்திரம் கூறுகிறது! சிறந்த நண்பன்! நாம் எப்போதும் திருநாமத்தை உச்சரிக்க வேண்டும்!
காலேர் தோஷ-நிதே ராஜன்
அஸ்தி ஹை ஏகோ மஹான்
குணா கீர்த்தனாத் ஏவ கிருஷ்ணாஸ்ய
முக்தா-சங்கம் பரண் வ்ரஜேத்
( SB 12.3.51)
கலியுகம் என்பது குற்றங்களின் சமுத்திரம் – அதற்கு முடிவே இல்லை! இப்போது போர்கள், சண்டைகள், தீய கர்மவினைகள் , எல்லா விதமான எல்லையற்ற குறைகளும் இருக்கின்றன. ஆனால், ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை உச்சரிப்பது என்ற ஒரே ஒரு நல்ல குணம் மட்டும் இருக்கிறது .
ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே/
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
நீங்கள் அனைவரும் வைஷ்ணவர்கள் மற்றும் வைஷ்ணவிகள். ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் அறிவீர்கள் . புதிதாக வருபவர்கள் கூட பஜனை மன்றங்களில் கலந்துகொள்கிறார்கள்! அவர்களுக்கு ஒன்றும் தெரியாது! அவர்கள் மந்திரத்தைக் கேட்கிறார்கள் , நடனமாடவும், உச்சரிக்கவும் விரும்புகிறார்கள்! எனவே, நீங்கள் அனைவரும் மனநிறைவுடன் ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை உச்சரிப்பீர்கள் என்று நம்புகிறேன்! நீங்கள் பரவசத்தில் நடனமாடுவீர்கள்! ஸ்ரீல பிரபுபாதர் நமக்கு இந்த ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை, அதாவது மாபெரும் பரிசை, கொண்டு வந்தார்! அவர் அதை நம்முடன் சேர்ந்து உச்சரித்தார்! எனவே, உச்சரியுங்கள், நடனமாடுங்கள், உங்கள் கைகளை உயர்த்துங்கள், உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள், இதன் மூலம் சைதன்ய பகவானின் பணியை நிறைவேற்றுங்கள்!
சந்திரமௌலி மகாராஜா என்னிடம், அவர் ஒரு சிறைச்சாலை நிகழ்ச்சியை நடத்தி வருவதாகவும், அதில் கைதிகள் ஹரே கிருஷ்ணா என்று கோஷமிட்டுக் கொண்டிருந்ததாகவும் கூறினார். நீங்கள் அனைவரும் விடுதலையானவர்கள், சிறையில் இல்லை! இங்கு வந்து ஹரே கிருஷ்ணா என்று கோஷமிட்ட உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்! கிருஷ்ணரின் திருநாமம், அவர் தூய்மையானவர், நாம் அவருடைய திருநாமத்தை உச்சரித்தால், நமக்கு கிருஷ்ணருடன் தொடர்பு கிடைக்கிறது, நாம் தூய்மையடைகிறோம்! ஹரே கிருஷ்ணா!
கௌராங்கா! நித்யானந்தா! கௌராங்கா! நித்யானந்தா!
என் குரல் சற்று தாழ்ந்துள்ளது, ஆனாலும் நான் கொஞ்சமாவது பாட முயற்சிப்பேன்.
( குரு மஹாராஜா ஹரே கிருஷ்ண மஹா-மந்திரத்தை சில நிமிடங்கள் உச்சரித்து பாடினார் !)
ஹரினாம சங்கீர்த்தனத்திற்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த மேன்மைமிகு ஐந்திர பிரபு அவர்களுக்கு எனது சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் ! ஹரிபோல்! மேலும், ஹரினாம மகா மந்திரத்தை உலகம் முழுவதும் கொண்டு சென்ற முக்கிய நபரான ஸ்ரீல பிரபுபாதருக்கும் நன்றி!
Lecture Suggetions
-
20210918 வாமன தூவாதசி அன்று ஸ்ரீமத் பாகவதம்
-
20210925 கேள்வி மற்றும் பதில் அமர்வு
-
20210711 “திருநாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” — பத்ர பூர்ணிமா நிகழ்ச்சி சொற்பொழிவு
-
20210925 ஸ்ரீமத்- பாகவதம் 1.11.21
-
20211016 உலகளாவிய தாமோதர விழா துவக்கவுரை
-
20211108 இஸ்கான் காங்டாக் மற்றும் அம்பாலா பக்தர்களுக்கு ஸ்ரீல பிரபுபாதா திரோபாவா முகவரி
-
20210625 ஸ்ரீ அத்வைத ஆச்சார்யர் சச்சிமாதாவை அழைத்துவர பல்லக்கினை அனுப்புதல்
-
20211014 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - சம்பிரதாயசம்மேளன முகவரி
-
20210523 அமோகனை தன் கருணையினால் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காப்பாற்றுதல்
-
20210930 கேள்வி மற்றும் பதில்கள்
-
20211017 ஸ்ரீமத் பாகவதம் 1.12.2
-
20211015 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - விழா துவக்கவுரை
-
20210624 ஹர்மொனிக்ஸ் லைப்-ஸ்டைல் நல்லாசிவுரை
-
20210828 ஸ்ரீமத் பாகவதம் 1.10.33-35
-
20210710 சாந்திபூரில் ஸ்ரீ சைதன்யர் மற்றும் அவரது சகாக்களின் லீலைகளை கேட்பதால் கிடைக்கும் பலன்கள்
-
20210830 ஸ்ரீமத் பாகவதம்
-
20211120 ஸ்ரீமத் பாகவதம் 1.12.35 - 36
-
20211003 ஸ்ரீமத் பாகவதம் 1.11.28
-
20211113 ஸ்ரீமத்-பாகவதம் 1.12.29
-
20210918 கோலோக பாத்ரா பிரச்சாரத்திற்கு செல்க
-
20211108 ஸ்ரீல பிரபுபாதாவின் திரோபாவா விரிவுரை இஸ்கான் மாயாபூர்
-
20211017 இஸ்கான் சென்னையின் படன உற்சவத்தில் உரையாற்றுகிறார்.
-
20211009 ஸ்ரீமத்பாகவதம் 1.11.34
-
20210904 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20211001 கேள்வி மற்றும் பதில்கள்
-
20210914 51வது சன்னியாச ஆண்டுவிழா உரை
-
20200903 ஜூம் கேள்வி பதில்கள்
-
20210905 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20211016 பங்களாதேஷ் பக்தர்களுக்கான செய்தி
-
20211002 பக்தி விருட்ச சம்மேளன உரையாற்றுதல்