மூகம் கரோதி வாசலம் பங்கும் லங்காயதே கிரிம்
யத்-கிருபா தம் அஹம் வந்தே ஸ்ரீ-குருன் தின தாரிணம்
பரமானந்த-மாதவம் ஸ்ரீ சத்வத்னம்
ஹரி சைதன்ய ī.
ஜெயபதாகா சுவாமி: சு-ஸ்வாகதம் ! இன்று நாம் ஒரு தீக்ஷா சடங்கைக் கடைபிடிக்கிறோம் . தேர்வர்கள் பல்வேறு கட்டங்களைக் கடந்து வந்துள்ளனர். மேலும், திருநாமத்திற்கு எதிரான பத்து குற்றங்களைப் பற்றிய சொற்பொழிவை நீங்கள் அனைவரும் கேட்டீர்கள். இந்தப் பத்து குற்றங்களையும் நாம் மிகவும் கவனமாகத் தவிர்க்க வேண்டும். உண்மையில், கலியுகத்தில் நல்ல குணங்கள் என்பதே இல்லை. அது குற்றங்களின் சமுத்திரம்.
காலேர் தோஷ-நிதே ராஜன்
அஸ்தி ஹை ஏகோ மஹான் குணா
[ SB 12.3.51]
ஒரே ஒரு நல்ல குணம் மட்டுமே! அதுதான் கீர்த்தனம் , அதாவது கிருஷ்ணரின் திருநாமங்களை உச்சரிப்பது! அது நமக்கு தெய்வீகத் தொடர்பைத் தந்து, ஆன்மீக உலகிற்கு அழைத்துச் செல்கிறது! எனவே, கலியுகத்தில் திருநாமத்தைத் தவிர வேறு நம்பிக்கை இல்லை! இப்போது, நாம் திருநாமத்தை அவமதித்தால், வேறு யாரும் நமக்கு உதவ முடியாது. நாம் தேவர்களையோ, யாரையோ அவமதித்தாலும், திருநாமம் நமக்கு உதவி, நம்மை விடுவிக்கும். ஆனால் நாம் திருநாமத்தை அவமதித்தால், திருநாமத்தைத் தவிர வேறு யாரும் நமக்கு உதவ மாட்டார்கள்! எனவே நாம் திருநாமத்தை உச்சரிக்க வேண்டும், மன்னிப்புக் கோர வேண்டும், மேலும் ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை இடைவிடாமல் உச்சரிக்க வேண்டும். ஹரிநாமம் மிகவும் கருணையானது! எனவே, அது நமது பிரியமான நண்பன்! ஆகவே, தீட்சை பெறுபவர்கள் மாயைக்கு எதிராகப் போர் தொடுக்கிறார்கள் ! தற்கால வீரர்கள் துப்பாக்கிகள் முதலான ஆயுதங்களை ஏந்திச் செல்கின்றனர். மாயைக்கு எதிரான இந்தப் போரில் , நம்மிடம் பக்தி யோகிகளும் யோகினிகளும் உள்ளனர் ; நாம் ஹரினாமனின் கரத்தை ஏந்திச் செல்கிறோம்! ஹரிபோல! கௌராங்க!
இந்த சங்கீர்த்தன யாகத்தை வழங்குவதற்காக , சைதன்ய பகவான் கோலோக பிருந்தாவனத்திலிருந்து அவதரித்து வந்தார் ! அவரது தெய்வீக அருளால் ஏ.சி. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் இதை உலகம் முழுவதும் பரப்பினார்! இப்போது அவருடைய சீடர்கள் இதை மேலும் பரப்பி வருகிறார்கள். ஒரு குரு தனது சீடர்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும் என்று அது கூறுகிறது. சைதன்ய பகவான் அந்த உன்னதமான வழிமுறையைக் கொடுத்திருப்பதால் என்னால் அதைச் செய்ய முடிந்தது! ஆனால் நீங்கள் பின்பற்றினால் மட்டுமே என்னால் அதைச் செய்ய முடியும்! நீங்கள் பின்பற்றவில்லை என்றால், நான் தீட்சை பெற்றுக்கொள்வேன் என்று நினைக்கிறீர்கள், ச்சே! அவ்வளவுதான்! நீங்கள் இப்படி நினைத்தால், இந்த அரங்கத்தை விட்டு வெளியேறலாம்! இப்போது, நாம் அனைவரும் இதில் ஒன்றாக இருக்கிறோம்! இது மிகவும் தீவிரமான விஷயம். எனவே, நீங்கள் அனைவரும் இதை மிகவும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். எந்த சாக்குப்போக்கும் சொல்லக்கூடாது! அதனால், ஒருவர் என்னிடம் கேட்டார், என் வாழ்நாள் முழுவதும் என் உற்சாகத்தை எப்படித் தக்கவைத்துக் கொள்வது? வாழ்க்கை குறுகியது, நாம் தீட்சை பெறுகிறோம் என்றால், ஆம், நான் கிருஷ்ண பக்தி செய்யத் தயாராக இருக்கிறேன் ! மேலும் நான் குரு பரம்பரையான ஸ்ரீல பிரபுபாதர் மற்றும் அவருக்கு முந்தைய ஆச்சார்யர்கள் அனைவரையும் பின்பற்ற விரும்புகிறேன் . எனவே, தீட்சையின் நோக்கம் குரு பரம்பரையுடன் முறைப்படி உறவாடுவதே ஆகும் . ஒருவேளை நீங்கள் முறைசாராமல் அதை ஏற்கெனவே ஏற்றிருக்கலாம். ஆகவே இது மிகவும் தீவிரமான ஒரு சடங்கு, நான் ஒரு பெரிய பொறுப்பை ஏற்கிறேன், நீங்களும் ஒரு பொறுப்பை ஏற்கிறீர்கள். மேலும் நீங்கள் உங்கள் சபதங்களை ஏற்றுள்ளீர்கள் அல்லவா? அப்படியானால், சபதங்களை ஏற்காதவர்கள் யாரேனும் உண்டா? எனவே நீங்கள் தினமும் 16 சுற்றுகள், அதாவது ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தின் 1728 மந்திரங்களை உச்சரிக்கிறீர்கள் . மேலும் நீங்கள் நான்கு ஒழுங்குமுறைக் கொள்கைகளை மீறாமல் இருக்கப் பின்பற்றுகிறீர்கள். இதுபோல, கிருஷ்ணருக்கான பக்தி சேவையில் நீங்கள் எல்லாவற்றையும் முறையாகச் செய்ய முயற்சிப்பீர்கள். உண்மையில், இப்போது நாம் இதை மிகவும் தீவிரமாகச் சொன்னாலும், இது உண்மையில் மிகவும் பேரின்பமானது! அதனால்தான், நாம் இதை இத்தனை ஆண்டுகளாகச் செய்து வருகிறோம்! அவர் நமக்கு மகிழ்ச்சியைத் தராவிட்டால் நம்மால் அதைச் செய்ய முடியாது! அதனால் தான் இந்த பௌதிக உலகில் மக்கள் துன்பப்படுகிறார்கள். கலியுகத்தில் மக்கள் துரதிர்ஷ்டசாலிகளாகவும், வசதியற்றவர்களாகவும், சோம்பேறிகளாகவும், மனக்கசப்புடனும், கவலையுடனும் இருக்கிறார்கள். காரணமின்றி மக்கள் சண்டையிடுகிறார்கள், விவாகரத்து செய்கிறார்கள், பல்வேறு எதிர்மறையான செயல்களைச் செய்கிறார்கள். பாருங்கள், பரமபுருஷ பகவான் முற்றிலும் நல்லவர்! அவருடைய தொடர்பால் எல்லாம் சரியாகிவிடும். ஆனால் இந்தக் கலியுகம் கடவுளற்றது. எனவே, அதுதான் துரதிர்ஷ்டவசமான நிலை! அதனால் தான் நாங்கள் மக்களுக்கு உணர்த்த முயற்சிக்கிறோம் – கிருஷ்ணரின் பெயர், புகழ், லீலைகள் போன்றவை அனைத்தும் தெய்வீகமானவை. மக்கள் கிருஷ்ணருடன் தொடர்பு கொள்ள முடிந்தால், அது அவர்களுக்கு மிகவும் மங்களகரமானது!
இன்று மிகவும் மங்களகரமான நாள். பகவான் நரசிம்மதேவர், தனது பக்தரான பிரகலாதனைக் காப்பாற்ற அவதரித்துள்ளார். நரசிம்மதேவர், பக்த பிரகலாதர், லட்சுமி தேவி ஆகியோரை நாங்கள் பிரார்த்திக்கிறோம். மாயை தரும் தடைகளை எல்லாம் கடந்து, அனைத்து பக்தர்களும் தங்களது பக்தி சேவையில் பெரும் வெற்றி பெற வேண்டும். இந்த மனித வாழ்வு, கிருஷ்ணருடனான நமது உறவைப் புரிந்துகொள்வதற்காகவே உள்ளது. உண்ணுதல், புணர்தல், உறங்குதல், சண்டையிடுதல், தற்காத்துக் கொள்ளுதல் போன்றவை விலங்குகளுக்கும் உண்டு. ஆனால் மனிதர்களுக்கு கிருஷ்ணரைப் புரிந்துகொள்ளும் அறிவும், திறனும் உண்டு. அவரது பக்தி சேவையில் ஈடுபடுவதால் வாழ்க்கை வெற்றி பெறுகிறது. ஹரே கிருஷ்ணா!
சில பெண்கள் சேலையை நகர்த்தும்போது தங்கள் வலது காதைத் திறப்பதில்லை – உங்கள் வலது காது திறந்திருக்க வேண்டும்.
ஆகவே, நான் ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை மும்முறை உச்சரிப்பேன் :
ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே/
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே!
Lecture Suggetions
-
20211017 ஸ்ரீமத் பாகவதம் 1.12.2
-
20210710 சாந்திபூரில் ஸ்ரீ சைதன்யர் மற்றும் அவரது சகாக்களின் லீலைகளை கேட்பதால் கிடைக்கும் பலன்கள்
-
20211108 ஸ்ரீல பிரபுபாதாவின் திரோபாவா விரிவுரை இஸ்கான் மாயாபூர்
-
20210914 51வது சன்னியாச ஆண்டுவிழா உரை
-
20211108 இஸ்கான் காங்டாக் மற்றும் அம்பாலா பக்தர்களுக்கு ஸ்ரீல பிரபுபாதா திரோபாவா முகவரி
-
20210828 ஸ்ரீமத் பாகவதம் 1.10.33-35
-
20211120 ஸ்ரீமத் பாகவதம் 1.12.35 - 36
-
20211017 இஸ்கான் சென்னையின் படன உற்சவத்தில் உரையாற்றுகிறார்.
-
20210830 ஸ்ரீமத் பாகவதம்
-
20211003 ஸ்ரீமத் பாகவதம் 1.11.28
-
20211113 ஸ்ரீமத்-பாகவதம் 1.12.29
-
20210925 கேள்வி மற்றும் பதில் அமர்வு
-
20211014 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - சம்பிரதாயசம்மேளன முகவரி
-
20210930 கேள்வி மற்றும் பதில்கள்
-
20200903 ஜூம் கேள்வி பதில்கள்
-
20211015 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - விழா துவக்கவுரை
-
20210904 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20211016 பங்களாதேஷ் பக்தர்களுக்கான செய்தி
-
20210625 ஸ்ரீ அத்வைத ஆச்சார்யர் சச்சிமாதாவை அழைத்துவர பல்லக்கினை அனுப்புதல்
-
20210711 “திருநாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” — பத்ர பூர்ணிமா நிகழ்ச்சி சொற்பொழிவு
-
20210925 ஸ்ரீமத்- பாகவதம் 1.11.21
-
20211009 ஸ்ரீமத்பாகவதம் 1.11.34
-
20211001 கேள்வி மற்றும் பதில்கள்
-
20211002 பக்தி விருட்ச சம்மேளன உரையாற்றுதல்
-
20210523 அமோகனை தன் கருணையினால் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காப்பாற்றுதல்
-
20210918 வாமன தூவாதசி அன்று ஸ்ரீமத் பாகவதம்
-
20210624 ஹர்மொனிக்ஸ் லைப்-ஸ்டைல் நல்லாசிவுரை
-
20210905 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20211016 உலகளாவிய தாமோதர விழா துவக்கவுரை
-
20210918 கோலோக பாத்ரா பிரச்சாரத்திற்கு செல்க