முகன் கரோதி வாசலம் பங்கும் லங்காயதே கிரிம்
யத் கிருபா தம் அஹம் வந்தே ஸ்ரீ-குரும் தினா-தாரணம்
பரமானந்த மாதவம் ஸ்ரீ சைதன்ய
ஓஹரி.
ஜெயபதாக சுவாமி: திருநாமத்திற்கு எதிரான பத்து அவமதிப்புகளை நீங்கள் ஏற்கனவே கேட்டீர்கள் என்றும், தீக்ஷா சடங்கின் முக்கியத்துவத்தையும் கேட்டீர்கள் என்றும் கேள்விப்பட்டேன். குறைந்தபட்சம் 16 சுற்றுகள் ஜபிக்கவும், நான்கு ஒழுங்குமுறைக் கொள்கைகளைப் பின்பற்றவும் நீங்கள் விரதம் பூண்டுள்ளீர்கள். எனவே, நான் ஒரு சிறு சொற்பொழிவு ஆற்றுகிறேன்.
சிலர் தீட்சை பெறுவதே பாதையின் முடிவு என்று நினைக்கிறார்கள்! ஆனால் உண்மையில், அதுவே ஆரம்பம்! பக்தி யோகத்தின் செயல்முறையைப் பின்பற்றுவதற்கு நீங்கள் ஒரு முறையான உறுதிமொழியை எடுக்கிறீர்கள். நாம் இது போன்ற சபதங்களை எடுத்து, உறுதியுடன் இருக்கிறோம். தியான யோகம், கர்ம யோகம், அஷ்டாங்க யோகம் எனப் பல்வேறு வகையான யோகங்கள் உள்ளன. நாம் பக்தி யோகத்தைப் பின்பற்றுகிறோம். பக்தி யோகமே மிக உயர்ந்த யோகம் ! மேலும் அதுவே மிகவும் நுட்பமான யோகமும் ஆகும் ! நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் , ஒவ்வொரு நடவடிக்கையையும் கிருஷ்ணருக்கே அர்ப்பணிக்கிறோம் ! மேலும் நாம் பக்தி யோகத்தைப் பயிற்சி செய்வதில் மிகவும் உறுதியுடன் இருக்கிறோம் . இந்தக் கலியுகம் குற்றங்களின் சமுத்திரம். Kaler doṣa-nidhe rājann asti hy eko mahān guṇaḥ [ SB 12.3.51] - இதில் ஒரே ஒரு நல்ல குணம் உண்டு – அது கிருஷ்ண கீர்த்தனம். Kīrtanād eva kṛṣṇasya mukta-saṅgaḥ paraṁ vrajet – இந்த வழிமுறையைப் பின்பற்றுவதன் மூலம் பிறப்பு மற்றும் இறப்பிலிருந்து விடுபட்டு, பரம நிலையை அடைகிறீர்கள். எனவே, நாங்கள் தினமும் ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை உச்சரிக்கிறோம், மந்திரங்கள் பொறிக்கப்பட்ட திலகங்களை அணிந்து எங்கள் உடலை ஒரு கோவிலாக அர்ப்பணிக்கிறோம் . மேலும் , எங்களின் அனைத்துச் செயல்களும் கிருஷ்ணருக்கே அர்ப்பணிக்கப்பட்டவை! எங்களின் நிதியும் கூட ஓரளவிற்கு கிருஷ்ணருக்கே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது! ஆகவே, நாங்கள் செய்யும் அனைத்தும் கிருஷ்ண உணர்வுடன் கூடியவை!
இந்த தீட்சை சடங்கின் மூலம், ஒருவரின் சூட்சும உடல் மாற்றமடைகிறது. அந்த மாற்றங்களை நாம் வெளியில் பார்க்க முடியாமல் இருக்கலாம், ஆனால் உள்ளே ஒரு மாற்றம் இருக்கிறது. அதுபோல, இப்போது தீட்சை பெறுவது என்பது, நான் உங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதாகும்! ஒவ்வொரு குருவும் தங்கள் சீடர்களைப் பிறப்பு மற்றும் இறப்பிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று ஸ்ரீல பிரபுபாதர் கூறினார். ஸ்ரீல பிரபுபாதர் நமக்கு அத்தகைய ஒரு நல்ல முறையை வழங்கியதால் அது சாத்தியமாகிறது! ஆனால் நீங்கள் அதைப் பின்பற்ற வேண்டும்! நீங்கள் பயிற்சி செய்யாவிட்டால், நான் என்ன செய்ய முடியும்? நீங்கள் அனைவரும் கிருஷ்ண உணர்வைப் பெற ஆர்வமாக இருக்கிறீர்கள் என்று நான் கருதுகிறேன்! எனவே, நான் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், வழியில் பல்வேறு பக்தர்கள் தங்கள் வழிகாட்டுதலை வழங்குவார்கள் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். சில சமயங்களில், பக்தர்கள் என்னிடம், நான் இன்னாரை எனது சிக்ஷா குருவாக ஏற்றுக்கொள்ளலாமா என்று கேட்பார்கள் . எங்கள் முறை என்னவென்றால், உங்களுக்கு ஒரு தீக்ஷா குருவும் , பல சிக்ஷா குருக்களும் இருப்பார்கள் . ஆகவே, ஒவ்வொரு சீடனுக்கும் பல்வேறு சிக்ஷா குருக்கள் இருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன் ! இது இயல்பானதுதான். ஆனால், சிக்ஷா குரு மட்டுமே தீக்ஷா குருவுக்கு எதிராகப் பேசக்கூடாது . தீக்ஷா குருவின் போதனைக்கு எதிராக அவர் எந்தப் போதனையையும் வழங்கக்கூடாது . உதாரணமாக, பெற்றோர்கள் பக்தர்களாக இருந்தால், ஒருவேளை அவர்களும் சிக்ஷா குருக்களாக இருக்கலாம் ! ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரின் தாயார் , தனது மரணப் படுக்கையில் , ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் இயக்கத்தை உலகம் முழுவதும் பரப்புமாறு அவரிடம் வேண்டிக்கொண்டார்! ஆனால் வேறு சில குருக்களும் சிக்ஷா குருக்களாக இருக்கலாம் – யாருக்குத் தெரியும்! பொருத்தமான போதனைகளை வழங்கும் எந்தவொரு பக்தரும் சிக்ஷா குருக்களே . அவர்களில் சிலர் முக்கியமானவர்கள். ஆகவே, நான் சுருக்கமாகப் பேசுவதாகக் கூறினேன். ஆகவே, இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.
இப்போது நான் ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை மும்முறை கூறுவேன் . அனைத்து பக்தர்களும் இதைக் கேட்டு மீண்டும் கூறலாம்.
ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே/
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே!
Lecture Suggetions
-
20210918 கோலோக பாத்ரா பிரச்சாரத்திற்கு செல்க
-
20211014 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - சம்பிரதாயசம்மேளன முகவரி
-
20211003 ஸ்ரீமத் பாகவதம் 1.11.28
-
20211108 இஸ்கான் காங்டாக் மற்றும் அம்பாலா பக்தர்களுக்கு ஸ்ரீல பிரபுபாதா திரோபாவா முகவரி
-
20210625 ஸ்ரீ அத்வைத ஆச்சார்யர் சச்சிமாதாவை அழைத்துவர பல்லக்கினை அனுப்புதல்
-
20211001 கேள்வி மற்றும் பதில்கள்
-
20210828 ஸ்ரீமத் பாகவதம் 1.10.33-35
-
20210918 வாமன தூவாதசி அன்று ஸ்ரீமத் பாகவதம்
-
20211120 ஸ்ரீமத் பாகவதம் 1.12.35 - 36
-
20210905 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20210830 ஸ்ரீமத் பாகவதம்
-
20210925 கேள்வி மற்றும் பதில் அமர்வு
-
20211015 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - விழா துவக்கவுரை
-
20200903 ஜூம் கேள்வி பதில்கள்
-
20210710 சாந்திபூரில் ஸ்ரீ சைதன்யர் மற்றும் அவரது சகாக்களின் லீலைகளை கேட்பதால் கிடைக்கும் பலன்கள்
-
20211016 உலகளாவிய தாமோதர விழா துவக்கவுரை
-
20211016 பங்களாதேஷ் பக்தர்களுக்கான செய்தி
-
20211113 ஸ்ரீமத்-பாகவதம் 1.12.29
-
20211108 ஸ்ரீல பிரபுபாதாவின் திரோபாவா விரிவுரை இஸ்கான் மாயாபூர்
-
20210523 அமோகனை தன் கருணையினால் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காப்பாற்றுதல்
-
20210624 ஹர்மொனிக்ஸ் லைப்-ஸ்டைல் நல்லாசிவுரை
-
20210930 கேள்வி மற்றும் பதில்கள்
-
20210914 51வது சன்னியாச ஆண்டுவிழா உரை
-
20210711 “திருநாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” — பத்ர பூர்ணிமா நிகழ்ச்சி சொற்பொழிவு
-
20211017 ஸ்ரீமத் பாகவதம் 1.12.2
-
20210925 ஸ்ரீமத்- பாகவதம் 1.11.21
-
20211017 இஸ்கான் சென்னையின் படன உற்சவத்தில் உரையாற்றுகிறார்.
-
20211002 பக்தி விருட்ச சம்மேளன உரையாற்றுதல்
-
20210904 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20211009 ஸ்ரீமத்பாகவதம் 1.11.34