மூகம் கரோதி வாசலம் பங்கும் லங்காயதே கிரிம்
யத்-கிருபா தம் அஹம் வந்தே ஸ்ரீ-குருன் தின தாரிணம்
பரமானந்த-மாதவம் ஸ்ரீ சத்வத்னம்
ஹரி சைதன்ய ī.
ஜெயபதாகா சுவாமி: இந்த மாலைகளுக்கு நன்றி! நிச்சயமாக, எனக்கு ஸ்ரீல பிரபுபாதருடன் மிகுந்த தொடர்பு இருந்தது. அவர் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை மாயாபுர தாமத்திற்கு வருவார். ஒருமுறை ஒரு மாதமும், மற்றொரு முறை குறைந்தது இரண்டு வாரங்களுமாவது தங்குவார். அதுமட்டுமின்றி, ஸ்ரீல பிரபுபாதரைச் சந்திக்க நான் பல இடங்களுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் அதைப் பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. நான் சமீபத்தில் ஜலதூதக் கப்பலில் ஸ்ரீல பிரபுபாதரின் நாட்குறிப்பைப் படித்தேன். ஜலதூதக் கப்பலில் ஸ்ரீல பிரபுபாதர் கொழும்பு, கொச்சி வழியாகச் சென்று சூயஸ் கால்வாய், மத்திய தரைக்கடல் மற்றும் இறுதியாக அட்லாண்டிக் பெருங்கடலில் நுழைந்தார். இப்போது நமது வசதியான வட்டத்தைப் பேணுவதைப் பற்றிப் பேசுகிறோம்! ஏறக்குறைய 70 வயதான ஸ்ரீல பிரபுபாதர், முதல் முறையாக 45 நாட்கள் கடல் பயணம் மேற்கொள்கிறார்! அவர் கடல் நோய், மாரடைப்பு எனப் பல துன்பங்களால் அவதிப்பட்டார்! அவர் கிருஷ்ணரிடம், “எனக்கு எந்தக் குணமும் இல்லை, எனக்கு எந்தப் புத்தியும் இல்லை, எனக்கு எந்தத் திறமைகளும் இல்லை, எல்லாம் உன்னையே சார்ந்தது! நான் உன்னிடம் முழுமையாகச் சரணடைகிறேன்” என்று பிரார்த்தனை செய்தார். இவ்வாறு அவர் கிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்தார்.
நம்மால் சில காரியங்களைச் செய்ய முடிவதில்லை, ஒருவேளை சில சிறிய காரியங்களைச் செய்யலாம். ஆனால் உண்மையில், கிருஷ்ணரால் எல்லாவற்றையும் செய்ய முடியும். அதனால் ஸ்ரீல பிரபுபாதர், கிருஷ்ணரிடம், “நான் மேற்கு நோக்கி வருகிறேன், எனவே நீர் விரும்பியபடி என்னை ஆடச் செய்யும்!” என்று வேண்டினார். அவர் கிருஷ்ணரிடம் சரணடைந்தார். இதிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். சரிதானே? நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும், கிருஷ்ண உணர்வைப் பரப்பவும், சைதன்ய பகவானின் முன்னறிவிப்பை நிறைவேற்றவும் விரும்புகிறோம். ஆனால், சைதன்ய பகவானின் கருணை நமக்கு இருந்தால் மட்டுமே, கிருஷ்ண பகவானின் கருணை நமக்கு இருந்தால் மட்டுமே நம்மால் அதைச் செய்ய முடியும். சைதன்ய பகவான், ராதா-கிருஷ்ண நஹி அன்ய என்று கூறப்படுகிறது . அதாவது, சைதன்ய பகவான், இணைந்த ராதை மற்றும் கிருஷ்ணரிடமிருந்து வேறுபட்டவர் அல்ல. சமீபத்தில் நான் GBC-யிடம், கிருஷ்ணர் எவ்வளவு பெரியவர் என்று சொல்லிக்கொண்டிருந்தேன்! நமக்கு அதைப்பற்றி எந்த எண்ணமும் இல்லை! எல்லா காரணங்களுக்கும் காரணமான ஆதி புருஷன் என்று பலமுறை கேட்டிருக்கிறேன், அதன் அர்த்தம் என்ன? கடலில் எத்தனை நீர்த்துளிகள் உள்ளன? எத்தனை பறவைகள்? எத்தனை நுண்ணுயிரிகள்? எத்தனை மீன்கள்? நிலத்தில் எத்தனை தாவரங்கள்? எத்தனை பூச்சிகள்? எத்தனை? நீங்கள் எதை வேண்டுமானாலும் சொல்லுங்கள்... க்ஷீரோதகசாயி விஷ்ணுவாகிய கிருஷ்ணர் அனைவரின் இதயத்திலும் இருக்கிறார். அவர் உங்கள் இதயத்தில் இருக்கிறார். உங்களுக்கு கிருஷ்ணருடன் ஒரு தனிப்பட்ட உறவு இருக்கிறது. அதை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. இது ஒரே ஒரு கிரகம் தான். பிரபஞ்சத்தில் எண்ணற்ற கிரகங்களும், எண்ணற்ற பிரபஞ்சங்களும் உள்ளன. எப்படியோ கிருஷ்ணர் எல்லாவற்றையும் உருவாக்குகிறார்! நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை! அவர் மிகவும் பெரியவர்!
ஸ்ரீல பிரபுபாதர் மேலை நாடுகளுக்குச் சென்றபோது, கிருஷ்ணரிடம் சரணடைந்தார். கிருஷ்ணருக்கு எல்லையற்ற சக்திகள் உண்டு என்பதை அவர் அறிந்திருந்தார். எனவே, தான் வெற்றிபெற வேண்டும் என்றும், சைதன்ய மகாபிரபுவின் பணியை நிறைவேற்றி, தன் குருவின் கட்டளைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் பிரார்த்தனை செய்தார். நாங்கள் விவாதித்துக் கொண்டிருந்தபோது, அவருடைய பிரார்த்தனைகள் உண்மையிலேயே வியக்கத்தக்கவையாக இருந்தன! 12 ஆண்டுகளில் அவர் பெற்ற வெற்றிகள் யாவும், உலகம் முழுவதும் 108 கோயில்களை நிறுவியதும், எண்ணற்ற நூல்களை மொழிபெயர்த்து விளக்கவுரைகள் வழங்கியதும் தான். இத்தனை காரியங்கள் - அனைத்தும் குருவின் மற்றும் கிருஷ்ணரின் கருணையால் தான் ! ஹரிபோல்! கௌராங்கா!
ஆகவே, ஸ்ரீல பிரபுபாதரை நம்மால் ஓரளவிற்குப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் உண்மையில், அவர் சைதன்ய பகவானின் விருப்பத்தை எவ்வாறு வெளிப்படுத்துகிறார், அவர் கிருஷ்ணரிடம் எவ்வளவு சரணடைந்துள்ளார் என்பதைப் பார்க்கும்போது, நாமும் அதுபோலவே குருவிடமும் கிருஷ்ணரிடமும் சரணடைய வேண்டும். நான் பக்தர்களுடன் ஜலதூதரின் நாட்குறிப்பைப் படித்தபோது, ஸ்ரீல பிரபுபாதர் கிருஷ்ணரிடம் எவ்வாறு சரணடைந்திருந்தார் என்பது என்னை மிகவும் கவர்ந்தது. நியூயார்க்கில் அவர் தாக்கப்பட்டார், அவருடைய பொருட்கள் திருடப்பட்டன, இன்னும் பல சவால்களை எதிர்கொண்டார் என்பது நமக்குத் தெரியும். ஆனாலும், அவர் தனது குரு மற்றும் கிருஷ்ணரின் கட்டளைகளைத் தொடர்ந்து நிறைவேற்றிக்கொண்டே இருந்தார். [ஒலி இடைவெளி] இவையெல்லாம் சிறிய விஷயங்கள்தான், ஸ்ரீல பிரபுபாதருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவர் நம்மைக் காப்பாற்ற, உங்கள் அனைவரையும் காப்பாற்றச் சென்றார்! ஸ்ரீல பிரபுபாதர் கீ ஜெய! கிருஷ்ணரிடம் அந்தச் சரணாகதியின் ஒரு சிறு பகுதியை நம்மால் ஏற்க முடிந்தால், இயல்பாகவே நாம் ஸ்ரீல பிரபுபாதரின் விருப்பங்களை நிறைவேற்றுவோம். ஹரே கிருஷ்ணா!
நாம் இங்கு இந்த சிறப்புத் தெய்வ பிரதிஷ்டைக்காக வந்திருக்கிறோம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, கிருஷ்ண உணர்வை வெளிப்படுத்தவும், உங்கள் அனைவரின் சங்கத்தால் தூய்மையடையவும் நான் வந்துள்ளேன். ஆகவே, மனித வாழ்வின் நோக்கம் உண்மையில் கிருஷ்ணரைப் புரிந்துகொள்வதுதான். ஸ்ரீல பிரபுபாதர் நம் அனைவருக்கும் அந்த அறிவுறுத்தலை வழங்கினார். அவருக்குப் புனித நாமத்தின் மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது. புனித நாமம் கிருஷ்ணரிடமிருந்து வேறுபட்டதல்ல. இதை நாம் பலமுறை கேட்டிருக்கிறோம். ஒரு நிமிடம் இதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். இதன் உண்மையான அர்த்தம் என்ன? நீங்கள் ஹரே கிருஷ்ணா என்று உச்சரித்தால், நீங்கள் உண்மையில் கிருஷ்ணருடன் சங்கமிக்கிறீர்கள் என்பதுதான்! இந்த கலியுகம் குற்றங்களின் யுகம்: kaler doṣa-nidhe rājan asti hy eko mahān guṇaḥ [ SB 12.3.51] – ஒன்று, ஒன்று, ஒன்று, ஒன்று நற்குணம் – ஹரே கிருஷ்ணாவை உச்சரிப்பது! ஹரே கிருஷ்ணாவை உச்சரிப்பதன் மூலம் நீங்கள் கிருஷ்ணரிடம் திரும்பிச் செல்கிறீர்கள், பிறப்பு மற்றும் இறப்பிலிருந்து விடுதலை பெறுவீர்கள், மேலும் திரும்பிச் சென்று கிருஷ்ணரின் அன்பைப் பெறுவீர்கள்! எனவே, அனைவரும் ஸ்ரீல பிரபுபாதரின் தாமரைத் திருவடிகளைப் பின்பற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஸ்ரீல பிரபுபாதர் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருந்தார் என்பதை, அவரது புனிதர் பக்தி-விக்ன-வினாசன நரசிம்ம சுவாமி மகாராஜாவிடமிருந்து நீங்கள் கேட்டிருப்பீர்கள். அவர் தனது சீடர்களை உபதேசிக்க நேரம் ஒதுக்கினார்! தன் சீடர்களை விடுவிப்பதும், இறுதியில் முழு உலகத்தையும் விடுவிப்பதும் ஒவ்வொரு குருவின் கடமையாகும் . எனவே, சீடர்கள் ஸ்ரீல பிரபுபாதரின் முன்மாதிரிகளைப் பின்பற்றுவதில் மிகுந்த அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்.
Lecture Suggetions
-
20211108 இஸ்கான் காங்டாக் மற்றும் அம்பாலா பக்தர்களுக்கு ஸ்ரீல பிரபுபாதா திரோபாவா முகவரி
-
20210625 ஸ்ரீ அத்வைத ஆச்சார்யர் சச்சிமாதாவை அழைத்துவர பல்லக்கினை அனுப்புதல்
-
20211017 இஸ்கான் சென்னையின் படன உற்சவத்தில் உரையாற்றுகிறார்.
-
20211113 ஸ்ரீமத்-பாகவதம் 1.12.29
-
20211002 பக்தி விருட்ச சம்மேளன உரையாற்றுதல்
-
20211108 ஸ்ரீல பிரபுபாதாவின் திரோபாவா விரிவுரை இஸ்கான் மாயாபூர்
-
20210925 ஸ்ரீமத்- பாகவதம் 1.11.21
-
20210914 51வது சன்னியாச ஆண்டுவிழா உரை
-
20210918 வாமன தூவாதசி அன்று ஸ்ரீமத் பாகவதம்
-
20211014 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - சம்பிரதாயசம்மேளன முகவரி
-
20211001 கேள்வி மற்றும் பதில்கள்
-
20200903 ஜூம் கேள்வி பதில்கள்
-
20211016 உலகளாவிய தாமோதர விழா துவக்கவுரை
-
20210930 கேள்வி மற்றும் பதில்கள்
-
20210523 அமோகனை தன் கருணையினால் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காப்பாற்றுதல்
-
20210830 ஸ்ரீமத் பாகவதம்
-
20210711 “திருநாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” — பத்ர பூர்ணிமா நிகழ்ச்சி சொற்பொழிவு
-
20211016 பங்களாதேஷ் பக்தர்களுக்கான செய்தி
-
20210905 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20210904 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20211015 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - விழா துவக்கவுரை
-
20211120 ஸ்ரீமத் பாகவதம் 1.12.35 - 36
-
20210918 கோலோக பாத்ரா பிரச்சாரத்திற்கு செல்க
-
20211017 ஸ்ரீமத் பாகவதம் 1.12.2
-
20210828 ஸ்ரீமத் பாகவதம் 1.10.33-35
-
20210925 கேள்வி மற்றும் பதில் அமர்வு
-
20210710 சாந்திபூரில் ஸ்ரீ சைதன்யர் மற்றும் அவரது சகாக்களின் லீலைகளை கேட்பதால் கிடைக்கும் பலன்கள்
-
20211009 ஸ்ரீமத்பாகவதம் 1.11.34
-
20211003 ஸ்ரீமத் பாகவதம் 1.11.28
-
20210624 ஹர்மொனிக்ஸ் லைப்-ஸ்டைல் நல்லாசிவுரை