ஜயபதாக ஸ்வாமி: நாம் அபராதமின்றி பகவானின் நாமத்தை ஜபம் செய்ய வேண்டும். பகவானின் நாமத்தை ஜபம் செய்வதற்கு சிறப்பான வழிமுறை உள்ளது. பகவானுக்கும் அவரது நாமத்திற்கும் எந்த வேறுபாடும் கிடையாது. அதனால் தான் ஒவ்வொரு நாளும் பகவானின் நாமத்தை ஜபம் செய்வேன் என்னும் நமது உறுதிமொழிக்கு கட்டுப்பட்டிருக்கிறோம். இன்று சபலா ஏகாதசி. இன்று 700 பக்தர்கள் பஞ்ச-க்ரோஷ பரிக்ரமாவை மேற்கொண்டு இருக்கிறார்கள். இன்று நீங்கள் சிறப்பான கோரிக்கையை முன்வைக்கிறீர்கள். பூக்களை அர்ப்பணம் செய்வது போல, பழங்கள் மற்றும் பிற பொருட்களை அர்ப்பணம் செய்வது போல, ஆனால், நீங்கள் சிறப்பான அர்ப்பணம் செய்கிறீர்கள் சரணடைதல் - அதாவது “ஆத்ம-நிவேதனம்”. நீங்கள் அனைவரும் உங்கள் ஆத்மாவை பகவான் கிருஷ்ணரின் சேவைக்காக அர்ப்பணிக்கிறீர்கள். நாம் ஒவ்வொரு நாளும் பகவானின் நாமத்தை ஜபம் செய்து, பகவானுக்கு பக்தித்தொண்டு செய்யும்போது பகவான் மகிழ்ச்சி அடைகிறார். பல்வேறு யுகங்களில் பகவான் அவதரிக்கிறார். பகவானுடன் இருந்து அவருக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே பக்தர்களின் சிறப்பான விருப்பம். இதுவே பக்தர்களின் சிறப்பான விருப்பம். பகவானுக்கு சேவை செய்வது அவருடைய நாமத்தை ஜபம் செய்வது பக்தர்களை மகிழ்விக்கிறது மேலும் இது பகவானையும் மகிழ்விக்கிறது.
ஸ்ரீல பிரபுபாதர் லண்டனில் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவில் அவருடைய கிரஹஸ்த சீடர்கள், பரமஹம்சர்கள் ஆகும் விதத்தில் பக்தி தொண்டு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அவருடைய குருதேவர் ஸ்ரீல பக்திவினோத தாகூரரின் மகன் என்று அவர் கூறினார். நீங்கள் அனைவரும் கிரஹஸ்தர்கள். நீங்கள் கிருஷ்ண பக்தர்களை ஆச்சாரியர்களை உங்கள் குழந்தைகளாகப் பெற முயற்சிக்க வேண்டும். நமக்கு பல ஆச்சாரியர்கள் தேவை என்று ஸ்ரீல பிரபுபாதர் கூறியுள்ளார். இப்போது, நம்மால் கிருஷ்ணருக்கு சேவை செய்ய முடிந்தால், பகவான் சைதன்யருக்கு சேவை செய்ய முடிந்தால் அதுவே நமது வாழ்வின் பூரணத்துவம் ஆகும். நாம் பல பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கிறோம் ஆனால், நாம் பகவானுக்கு சேவை செய்தால் அதுவே சிறந்தது. சிலர் பகவானிடம் எனக்கு அதை கொடுங்கள், எனக்கு இதை கொடுங்கள் என்று கேட்கின்றனர். ஆனால் நாம் பகவானுக்கு சேவை செய்தால் அதுவே அனைத்திலும் சிறந்தது. உண்மையில் சொல்லப்போனால் பகவானுக்கு நம்மிடமிருந்து எதுவும் தேவையில்லை. ஆனால் நம்மால் ஏதேனும் சேவை செய்ய முடிந்தால் அதுவே நமக்கு நல்லது. பொதுவாக தந்தையிடம் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் நான் உங்களுக்கு எந்த வகையிலாவது சேவை செய்யட்டுமா? என்று கேட்கிறார்கள்.
ஆயினும் இவ்வகையான நடத்தை மிகவும் அரிதானது. தற்போது பொதுவாக அவர்கள் தந்தையிடம் நான் அதைச் செய்கிறேன், நான் இதைச் செய்கிறேன், சினிமா பார்க்கிறேன் எனக்கு பணம் கொடுங்கள் என்று கேட்கிறார்கள். ஆனால் நாம் பகவானுக்கு ஏதேனும் சேவை செய்தால் நம்முடைய வாழ்க்கை வெற்றி அடையும். தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அனைவரும் பகவான் கௌராங்கர், பகவான் கிருஷ்ணரின் பக்தியை பெற வேண்டும் என்று விரும்பினார். நமக்கு சேவை செய்வதும் கிருஷ்ணரின் மீது அன்பு செலுத்துவதுமே சிறந்தது. கிருஷ்ணர் வ்ரஜ-தாமத்தில் பல்வேறு லீலைகளை புரிந்துள்ளார். அவருடைய அவதாரம் போன்ற பல லீலைகளை புரிந்துள்ளார். அவர் அவதரிக்கும் போது, மனிதனைப் போல அவதரிக்கிறார். ஆனால் அவர் மனிதன் அல்ல. அவரே பூரண உண்மை அனைத்து காரணங்களுக்கும் காரணம். நமக்கு இப்போது அவருக்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நாம் சைதன்ய மஹாபிரபுவை பின்பற்றினால் கிருஷ்ண பக்தர்கள் ஆகலாம் என்று பகவான் சைதன்யர் ஆசீர்வதித்துள்ளார். நாம் பகவானுக்கு சேவை செய்வதற்கு பிராமணராக இருக்க வேண்டும் என்பது இல்லை. ஆனால் நாம் கவனமுடன் இருந்தால் பகவானுக்கு சேவை செய்யலாம். ஹரே கிருஷ்ண!
ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண,
கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே,
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
Lecture Suggetions
-
20211108 ஸ்ரீல பிரபுபாதாவின் திரோபாவா விரிவுரை இஸ்கான் மாயாபூர்
-
20210925 ஸ்ரீமத்- பாகவதம் 1.11.21
-
20210904 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20210905 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20211113 ஸ்ரீமத்-பாகவதம் 1.12.29
-
20211016 பங்களாதேஷ் பக்தர்களுக்கான செய்தி
-
20210918 கோலோக பாத்ரா பிரச்சாரத்திற்கு செல்க
-
20210930 கேள்வி மற்றும் பதில்கள்
-
20210624 ஹர்மொனிக்ஸ் லைப்-ஸ்டைல் நல்லாசிவுரை
-
20211016 உலகளாவிய தாமோதர விழா துவக்கவுரை
-
20211014 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - சம்பிரதாயசம்மேளன முகவரி
-
20211003 ஸ்ரீமத் பாகவதம் 1.11.28
-
20210523 அமோகனை தன் கருணையினால் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காப்பாற்றுதல்
-
20211001 கேள்வி மற்றும் பதில்கள்
-
20210625 ஸ்ரீ அத்வைத ஆச்சார்யர் சச்சிமாதாவை அழைத்துவர பல்லக்கினை அனுப்புதல்
-
20210918 வாமன தூவாதசி அன்று ஸ்ரீமத் பாகவதம்
-
20211015 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - விழா துவக்கவுரை
-
20211017 இஸ்கான் சென்னையின் படன உற்சவத்தில் உரையாற்றுகிறார்.
-
20211002 பக்தி விருட்ச சம்மேளன உரையாற்றுதல்
-
20210710 சாந்திபூரில் ஸ்ரீ சைதன்யர் மற்றும் அவரது சகாக்களின் லீலைகளை கேட்பதால் கிடைக்கும் பலன்கள்
-
20210830 ஸ்ரீமத் பாகவதம்
-
20200903 ஜூம் கேள்வி பதில்கள்
-
20210711 “திருநாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” — பத்ர பூர்ணிமா நிகழ்ச்சி சொற்பொழிவு
-
20211120 ஸ்ரீமத் பாகவதம் 1.12.35 - 36
-
20211017 ஸ்ரீமத் பாகவதம் 1.12.2
-
20210914 51வது சன்னியாச ஆண்டுவிழா உரை
-
20211009 ஸ்ரீமத்பாகவதம் 1.11.34
-
20211108 இஸ்கான் காங்டாக் மற்றும் அம்பாலா பக்தர்களுக்கு ஸ்ரீல பிரபுபாதா திரோபாவா முகவரி
-
20210925 கேள்வி மற்றும் பதில் அமர்வு
-
20210828 ஸ்ரீமத் பாகவதம் 1.10.33-35