Text Size

20240104 ஹரி நாம உற்சவத்தின் சொற்பொழிவு

4 Jan 2024|Tamil|Public Address|Agartala, India

ஜயபதாகா ஸ்வாமி: அகர்தலாவிற்கு வர முடிந்ததை எண்ணி நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இங்குள்ள பக்தர்கள் மிக உற்சாகத்தோடு இருப்பதை உணர்கிறேன். கிருஷ்ணர் துவாரகையில் இருந்தபோது ருக்மணி சிலவற்றை கூறினாள். உங்களுக்கு பிரம்மா பிரம்மலோகத்தில் என்ன செய்கிறார் என்று தெரியும், மகாதேவர் கைலாயத்தில் என்ன செய்கிறார் என்று தெரியும், எண்ணற்ற பிரபஞ்சங்களில் என்ன நடக்கிறது என்பது தெரியும் . நீங்கள் எல்லாம் அறிவீர்கள். ஆனால் உங்களுக்கு தெரியாதது ஒன்று உள்ளது. கிருஷ்ணர் ஆச்சரியத்துடன் கேட்டார்”, எனக்கு தெரியாதது என்ன?” அவள் கூறினாள். உங்களை விட உயர்ந்தவர் எவரும் இல்லை, அதனால் உங்களுக்கு தெரியாது - எனக்குத் தெரியும், ராதாராணிக்குத் தெரியும், ஆனால் உங்களுக்கு தெரியாது!” அவர் கேட்டார்” அது என்ன, அது என்ன எனக்கு தெரியாதது?” ருக்மணி தேவி கூறினாள்,” உங்களது பக்தர்கள் உங்கள் மீது எவ்வளவு அன்பு செலுத்துகிறார்கள், எப்படி அன்பு செலுத்துகிறார்கள் என்று உங்களுக்கு தெரியாது. உங்களது பக்தர்கள் உங்கள் மீது எவ்வாறு அன்பு செலுத்துகிறார்கள் என்பது ராதாராணிக்குத் தெரியும். ஆனால் அது உங்களுக்கு தெரியாது.” பிறகு கிருஷ்ணர் கூறினார், “நான் ஒரு காரியம் செய்கிறேன்- கலியுகத்தில் நான் என் பக்தனாக வருகிறேன். நான் என் பக்தனாக வரும்போது என்னுடைய பக்தர்கள் என் மீது எவ்வாறு அன்பு செலுத்துகிறார்கள் என்பதை நான் புரிந்து கொள்வேன்”

பகவான் சைதன்யராக அவதரித்திருப்பது கிருஷ்ணரே. ஆனால் அவர் அவருடைய பக்தராக அவதரித்திருக்கிறார். ராதாராணியின் மனோபாவத்தையும், நிறத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளார். அவர் சங்கீர்த்தனை இயக்கத்தை ஸ்தாபித்தார். இவ்வாறாக அவர் முதல் சங்கீர்த்தன-லீலையை துவங்கினார். இறுதியில் ஸ்ரீமதி ராதாராணி பிரிவில் அனுபவித்த மனோநிலையை வெளிப்படுத்தினார். சைதன்யதேவர் நாம் பிரிந்திருக்கும் மனோபாவத்தில் சேவை செய்யும்போது, நாம் கிருஷ்ணருடன் இருக்கலாம் என்று கூறினார். ஏனெனில் கிருஷ்ணர் முழுமுதற் கடவுள் மேலும் அவரே பூரண உண்மை. பிரிவில் அவரைப் பற்றி எண்ணும் போது நாம் அவரை அடையலாம். பகவான் சைதன்யர் பல்வேறு லீலைகளை புரிந்துள்ளார்.

கிருஷ்ணர் துவாபர யுகத்தில் அவருடைய சுதர்சன சக்கரத்தை வைத்துக் கொண்டிருந்தார். ஆனால் இந்த கலியுகத்தில் பகவான் சைதன்யர் வந்தபோது, சுதர்சன சக்கரம், கதை முதலான எந்த ஆயுதத்தையும் கொண்டு வரவில்லை. இந்த கலியுகத்தில் அனைவரும் பாவம் செய்கின்றனர், இறக்கின்றனர். எனவே எப்படியோ அவர்கள் இறக்கின்றனர்,.அவர் அனைவருக்கும் முக்தி அளிக்க விரும்பினார். பக்தர்களும் அவரது சகாக்களுமே பகவான் சைதன்யரின் ஆயுதங்கள். நீங்கள் அனைவரும் பகவான் சைதன்யரிடம் சரணடைவதன் மூலம் அவரது சகாக்களாக மாறலாம். இவ்வாறாக பகவான் சைதன்யரோடு தொடர்பு கொள்வதன் மூலம் நீங்கள் வெற்றி அடையலாம். ஹனுமான் மற்றும் அவரது வீரர்கள் பகவான் இராமருக்கு சேவை செய்தனர். இவ்வாறாக அவர்கள் இராவணனை வதம் செய்தனர். பகவான் சைதன்யரின் பக்தர்களாகிய நாம் மக்களை கொல்வதில்லை. ஆனால் அவர்களிடம் உள்ள அசுர குணத்தை கொல்கிறோம். பகவான் சைதன்யர் அனைவருக்கும் பகவத் பிரேமையை வழங்குவதற்காக வந்தார். அவர் சாந் காசியை நோக்கி சங்கீர்த்தனம் செய்து கொண்டு போகும் போது லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். நான்கு சங்கீர்த்தன குழுக்கள் இருந்தன. சில நாஸ்திகர்கள், அவர்களைப் பார்த்து சிரித்து ஏளனம் செய்தனர். ஆனால், சைதன்யர் அஷ்ட-சாத்வீக-பாவத்தை வெளிப்படுத்தி பரவச நிலையில் இருந்ததைக் கண்ட அவர்களது இதயங்கள் மென்மையாகின. அந்த நாஸ்திகர்கள் பிறகு கீர்த்தனத்தில் கலந்துகொண்டு ஆடி பாடத் துவங்கினர். ஸ்வர்க்க லோகத்தில் இருந்து இந்திரன், வாயுதேவன் ஆகியோர் கீழே இறங்கி இங்கே வந்தனர். அவர்கள் முழுமுதற் கடவுள் எவ்வாறு பரவச நிலையில் நடனம் ஆடுகிறார் என்பதை கண்டனர். அவர்கள் ஆச்சரியத்தில் மூச்சையுற்றனர். அவர்கள் சுயநினைவிற்கு வந்த போது பக்தர்களைப் போல் தோற்றம் கொண்டு கீர்த்தனத்தில் பங்கு கொண்டனர்.இவ்வாறாக பகவான் சைதன்யர் அனைவருக்கும் கிருஷ்ணப் பிரேமையை வழங்கினார். இங்குள்ள மக்கள் மிக எளிமையாக பகவான் சைதன்யரின் உபதேசங்களை பின்பற்றி அதனை மற்றவர்களுக்கும் பிரச்சாரம் செய்கின்றனர் என்பதை நான் காண்கிறேன். பகவான் சைதன்யர் இவ்வழியாக வந்து அனைவருக்கும் கிருஷ்ணப் பிரேமையை வழங்கினார்.

பிரம்ம வைவர்த்த புராணத்தில் அடுத்து வரும் பத்தாயிரம் வருடங்கள் கிருஷ்ண பக்தியின் பொற்காலமாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது கலியுகம் துவங்கி 50000 ஆண்டுகளுக்குப் பின் வரும் காலமாகும். இப்போது கலியுகத்தின் 5000 ஆண்டுகள் முடிந்துள்ளன. ஓம் விஷ்ணுபாத ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் தோன்றி, எனது ஆன்மீக குருவான தெய்வத்திரு அ.ச. பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதரிடம் மேலை நாடுகளுக்குச் சென்று பிரச்சாரம் செய்யும்படி உபதேசித்தார் .அவர் தனது எழுபதாவது வயதில் இம்முயற்சியை மேற்கொண்டு உலகை 14 முறை வலம் வந்தார். பகவான் சைதன்யரின் கட்டளைகள் அவர் மூலமாக பூர்த்தி செய்யப்பட்டு இப்போது நாம் உலகம் முழுவதும் 800 ஆலயங்களை கொண்டுள்ளோம்.

அகர்தலாவிற்கு பகவான் சைதன்யரின் கருணை உள்ளது .பகவான் சைதன்யருக்கு சேவை செய்வதில் நீங்கள் அனைவரும் உற்சாகமாக இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன் 1930ல் ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகூர் பிரபுபாதர் திரிபுராவின் மன்னருடன் இருக்கும் புகைப்படத்தை நான் பார்த்தேன். அந்த மன்னர் அறங்காவலர் அல்லது ஏதேனும் பொறுப்பில் இருக்கலாம். எப்படியோ, எமது பரமகுரு, குருவின் குரு பகவான் சைதன்யரின் போதனைகள் பரவ வேண்டும் என்று விரும்பினர். பகவான் சைதன்யர் கூறியுள்ளார்,

ப்ருʼதி வீதே ஆசே  யத நகராதி க்ராம
ஸர்வத்ர ப்ரசார ஹைபே மோர நாம
[சைதன்ய சரிதாம்ருதம் அந்த்ய-கண்டம் 4.126]

இதனை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு, எமது ஆன்மீக குரு அவருடைய சீடர்கள் மற்றும் பேரச்சீடர்கள் இதனை செயல்படுத்த வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார். நாம் பகவான் சைதன்யரின் போதனைகள் திரிபுரா முழுவதும் பரவும் என்று நம்புகிறோம். இப்போது இது உலகெங்கும் நடந்து கொண்டிருக்கிறது.

நான் வெளிநாட்டில் பிறந்தவன் என்றாலும், எனது குரு தேவரின் கட்டளையை ஏற்று இந்திய குடியுரிமை பெற்றேன். பகவான் சைதன்யரின் போதனைகள் அனைவருக்கும் பரவும் என்று நான் நம்புகிறேன். பகவான் சைதன்யர் 24 ஆண்டுகள் கிரஹஸ்தராகவும் 24 ஆண்டுகள் சந்நியாசியாகவும் இருந்தார். அனைவருக்கும் கிருஷ்ண-ப்ரேமையை வழங்குவதே அவரது விருப்பம். அவர் ஆறு வருடங்கள் பிருந்தாவனம் மற்றும் தென்னிந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அவர் தெருவில் யாரையேனும் சந்தித்தால் அவர்களை கட்டித் தழுவுவதன் மூலமாக அவர்களுக்கு கிருஷ்ண-ப்ரேமையை வழங்கினார். பொதுவாக தீவிரமான பக்தர்களே கிருஷ்ண பக்தியை பெற முடியும். ஜகாய், மாதாய் போன்ற மக்கள் மிகப் பெரும் பாவிகளாவர் .ஆனால் பகவான் சைதன்யர் மற்றும் பகவான் நித்தியானந்தர் அவர்களுக்கும் கருணையை வழங்கினர். உடைந்த மது பாட்டிலைக் கொண்டு மாதாய் நித்தியானந்தரை தாக்கினான். அவருக்கு ரத்தம் வழிய ஆரம்பித்தது. ஆனாலும் பகவான் நித்தியானந்தர் கூறினார், நீ என்னை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்ததனால் உனக்கு பகவத்-ப்ரேமையை வழங்க மாட்டேன் என்று நினைத்தாயா? பிறகு ஜகாய் மாதாயிடம் கூறினான், நீ அவரை காயப்படுத்தினாய் ஆனாலும் அவர் உன்னிடம் அன்பாகப் பேசுகிறார். அவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல. நாம் நம்முடைய தவறுகளுக்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த நிதாய்-கௌர மிகவும் கருணை வாய்ந்தவர்கள், அவர்கள் துன்புறுத்தப்பட்ட போதிலும் கிருஷ்ண-ப்ரேமையை வழங்கினர்.

நீங்கள் அனைவரும் கிருஷ்ணரின் பக்தி தொண்டில் ஈடுபட்டு பகவான் சைதன்யரின் நாமத்தை ஜபம் செய்து கிருஷ்ண-பக்தியை அடைவீர்கள் என்று நான் நம்புகிறேன். இக்கலியுகத்தில் நான் பாவம் செய்யவில்லை என்று யாரும் கூற முடியாது. கலியுகம் பாவத்தின் யுகமாகும். ஆனாலும் மற்ற யுகங்களின் மக்கள் கலியுகத்தில் பிறந்து, பகவான் சைதன்யரின் கருணையை பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றனர். கௌராங்க! நித்தியானந்த!

பகவான் சைதன்யரின் சிறப்பான கருணையை பெறுவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும். கௌடீய மடத்திலிருந்து சில பக்தர்கள் இங்கு வந்துள்ளனர். எமது குருவின் குரு திரிபுராவில் கௌடீய மடத்தை நிறுவினார். எமது ஆன்மீக சகோதரர், ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் அவர்களின் சீடர், இங்கு அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை நிறுவினார். பகவான் சைதன்யரின் கருணையை அனைவரும் பெறுவீர்கள் என்று நாம் நம்புகிறோம். ஹரி போல்!

பகவான் சைதன்யர் நம் அனைவரையும் விடுவிக்க வந்தார். தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் எவ்வாறு ஒருவர் கிருஷ்ண பக்தியை பெற முடியும் என்று கூறினார். அவர் அனைத்து சாஸ்திரங்களையும் படித்திருக்க வேண்டும். ஆனால் ஒரு பக்தர் அவரிடம் ஒரு கேள்வி கேட்டார். நான் ஒரு அமெரிக்கன் ஆஸ்திரேலியன் நான் என்னுடைய வாழ்வில் எந்த நல்ல செயலையும் செய்யவில்லை அப்படி இருக்க எனக்கு எப்படி கிருஷ்ண பக்தி கிடைத்தது? என் வாழ்க்கை முழுவதும் நான் பாவ காரியங்களையே செய்துள்ளேன் எனக்கு எப்படி கிருஷ்ண பக்தி கிடைத்தது? அதற்கு என்னுடைய குருதேவர் கூறினார், உன்னுடைய நல்ல அதிர்ஷ்டத்தை நான் உருவாக்கினேன். இவ்வாறாக என்னுடைய குருவின் குரு. என்னுடைய குருதேவர் மற்றும் முந்தைய ஆச்சாரியர்கள் நமக்கு நல்அதிர்ஷ்டத்தை கொடுப்பதற்காக வந்துள்ளனர். பகவான் சைதன்யரின் போதனைகளை நம் வாழ்வில் கடைபிடிப்பதன் மூலம் நாம் வாழ்வில் வெற்றி அடையலாம். கலியுகத்தில், இங்கும் சரி மேலை நாடுகளிலும் சரி மக்கள் பாவ காரியங்களிலேயே ஈடுபடுகின்றனர். பாவ காரியங்களை செய்வதன் மூலம் தாங்கள் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கலாம் என்று நினைக்கின்றனர். ஆனால், இதனால் நம்மால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. நாம் கிருஷ்ண உணர்வோடு இருப்பதன் மூலம் மட்டுமே திருப்தி அடைய முடியும். மேலைநாடுகள் இதனை மெதுவாக உணர்கின்றன. அவர்கள் கிருஷ்ண பக்தியை தவிர வேறு எதிலும் மகிழ்ச்சி இல்லை என்பதை புரிந்து கொள்கின்றனர். கிருஷ்ண கீர்த்தனம். சைதன்ய சரிதாமிருதத்தில் (மத்ய 19.149)கூறப்பட்டுள்ளது

க்ருʼஷ்ண-பக்த—நிஷ்காம, அதஏவ ‘சாந்த’
புக்தி-முக்தி-ஸித்தி
-காமீ—ஸகலி ‘அசாந்த’

இந்த வாழ்க்கை நிம்மதியாக இல்லை ஆனால் அடுத்த பிறவியில் நான் நிம்மதியாக இருக்கலாம் என்று அவர்கள் நம்புகின்றனர். இவ்வாறாக அவர்கள் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கின்றனர். உண்மையில் பார்க்கப் போனால் கிருஷ்ண பக்தர்கள் மட்டுமே உண்மையான மகிழ்ச்சியுடன் உள்ளனர். “க்ருʼஷ்ண-பக்த—நிஷ்காம, அதஏவ ‘சாந்த’. நீங்கள் இந்த மனிதப் பிறவியை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு கிருஷ்ண-பக்தியை அடைவீர்கள் என்று நான் நம்புகிறேன். என்னுடைய குருதேவர் என்னை மாயாபூரில் தங்கி இருக்கச் சொன்னது எனது நல்அதிர்ஷ்டம் .பகவான் சைதன்யர் அங்கு அவதரித்தார். ராதாரணி நவத்தீவிபத்தை தோற்றுவித்தார் மேலும் அது 9 தீவுகளை கொண்டது. எனவே அது நவத்தீவிபம் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள ஒவ்வொரு தீவுகளும் ஒன்பது விதமான பக்தி தொண்டுடன் தொடர்பு கொண்டுள்ளன. ஸ்ரவணம், கீர்த்தனம், ஸ்மரணம் முதலானவை. ஆனால் நாம் எங்கிருந்தாலும் நாம் பகவானை எப்போதும் நினைத்துக் கொண்டும், பக்தித் தொண்டு செய்து கொண்டும், அவரைப் பற்றி கேட்டுக் கொண்டும் இருந்தால் நாம் எப்போதும் பகவானுடனையே இருக்கலாம். நாம் நித்தியமானவர்கள் என்று பகவத்-கீதையில் உபதேசிக்கப்பட்டுள்ளது. நாம் ஆத்மா. உடல் மரணம் அடைகிறது. மேலும் நாம் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கிறோம். கிருஷ்ணரின் செயல்கள் அனைத்தும் திவ்யமானவை என்று நாம் புரிந்து கொண்டால் நாம் இந்த பௌதிக உலகில் மீண்டும் பிறவி எடுக்க வேண்டியதில்லை. கற்றறிந்தவர்கள் பலரும் தங்களை உடல் என்று எண்ணுகின்றனர். ஆனால் அவர்கள் நாம் இந்த உடல் அல்ல, ஆத்மா என்று உணர்ந்தால் அவர்கள் அனைவரையும் விட அதிர்ஷ்டசாலிகள் ஆவர்.

இங்கு கூடி உள்ளவர்களில் எத்தனை பேருக்கு சைதன்ய தேவரின் கருணை வேண்டும்? கைகளை உயர்த்துங்கள் ஹரி போல்! எங்கெல்லாம் வைஷ்ணவ ஆலயங்கள் மற்றும் வைஷ்ணவர்களின் சங்கம் உள்ளதோ அங்கு கிருஷ்ண பக்தி கிடைக்க வாய்ப்புள்ளது.

கேள்வி பதிலுக்கு நேரம் உள்ளதா? சரி, ஒரு கேள்வி மட்டும்.

கேள்வி: ஒரு சீடன் குருவிற்கு அபராதம் செய்துவிட்டால் பிறகு அவர் என்ன செய்ய வேண்டும்?

ஜயபதாகா ஸ்வாமி: அவன் குருவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். கிருஷ்ண பக்தியில் இதை தவிர வேறு வழி இல்லை. அவன் குருவிடம் இருந்து அறிவுரைகளைப் பெற்று மீண்டும் பக்தித் தொண்டில் ஈடுபட வேண்டும். ஹரி போல்!

- END OF TRANSCRIPTION -
Transcribed by துர்லப ராதா தேவி தாஸி (8 ஜனவரி 2024)
Verifyed by
Reviewed by

Lecture Suggetions