Text Size

20231231 புத்தாண்டிற்கு முதல் நாள் மாலை கௌர-வில்லேஜ் சொற்பொழிவு

31 Dec 2023|Tamil|Public Address|Śrī Māyāpur, India

ஜயபதாகா ஸ்வாமி: இன்று மிகவும் மங்களகரமான நாள், புத்தாண்டிற்கு முதல் நாள் என்பதால் மட்டுமல்ல ஆனால், இன்று ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்குரர் அவர்களின் மறைவு தினம் ஆகும், ஆனாலும் இன்று உங்களுக்கு புதுவருட வாழ்த்து கூற விரும்புகிறேன், ஆயினும் நமக்கு புது வருடம் கௌர-பூர்ணிமா தான். பகவான் சைதன்யர் இரவில் கீர்த்தனம் செய்தார். புத்தாண்டின் முதல் நாள் இரவில் கீர்த்தனம் செய்வதை நாம் நல்ல வாய்ப்பாக கருதலாம். வைகுண்ட நிதாய் மற்றும் கௌர-வில்லேஜ் பக்தர்களுக்கு இதனை ஏற்பாடு செய்ததற்காக நன்றி கூறுகிறோம்.

பகவான் கிருஷ்ணர், மனிதரைப் போல வந்தாலும் அவர் தான் முழுமுதற் கடவுள் என்பதை மறைக்கவில்லை. நான் இதனை எண்ணிப் பார்க்கிறேன். ஆனால் ராதை மற்றும் கிருஷ்ணர் இணைந்த வடிவத்தில் பகவான் சைதன்யர் அவதரித்தார், மேலும் நீங்கள் மஹாபிரபுவின் தாமத்தில் வசிக்கிறீர்கள். இத்தாமம் கிருஷ்ணரின் மகிழ்ச்சிக்காக ராதாரணியால் உண்டாக்கப்பட்டதாகும். மேலும் கிருஷ்ணர் ராதாராணியின் நிறத்தையும் மனோபாவத்தையும் ஏற்று கௌராங்கராக அவதரித்தார். கௌராங்க! கௌராங்க! கௌராங்க! இதில் அற்புதம் என்னவென்றால் அவர் முழுமுதற் கடவுள் என்ற போதிலும் அவர் பக்தர்களுடன் ஆடிப் பாடினார். தேவர்களின் தலைவனான இந்திரன், வாயு தேவன் ஆகியோர் இங்கே வந்து பகவான் சைதன்யர் பரவச நிலையில் பாடி அழுவதை கண்டு மூர்ச்சையாகி விழுந்தனர்! முழுமுதற் கடவுள் தனது பக்தர்களுடன் கீர்த்தனம் செய்து அழுவதை பார்த்தனர். இது அவர்களுக்கு மிகையானது. அவர்கள் சுய நினைவிற்கு வந்த போது மனித உருவத்தை ஏற்று கீர்த்தனத்தில் கலந்து கொண்டனர். சில நேரங்களில் எனக்கு தெரியவில்லை தேவலோகத்திலிருந்து இறங்கி வந்து மக்கள் கீர்த்தனத்தில் கலந்து கொள்ளலாம். இதை பார்ப்பது மிகவும் அரிதானது. உங்களால் அடையாளம் காண முடியாதவர் யாரேனும் இருந்தால் அவர்கள் சொர்க்கலோகத்தில் இருந்து இங்கு வந்தவர்களாக இருக்கலாம்! எவ்வாறாயினும் உங்களுக்கு புத்தாண்டை வரவேற்கும் கீர்த்தனத்திற்கு வாழ்த்து கூற விரும்புகிறேன். எனக்கு நுரையீரல் மற்றும் இருமல் பிரச்சனை இருப்பதால் என்னுடைய மருத்துவர்கள் நான் காரில் இருந்து வெளியே வரக்கூடாது என்று கூறியுள்ளனர். ஆயினும் நாம் ஒரு சிறு இடைவெளியில் வந்துள்ளோம். அனைவருக்கும் மிக்க நன்றி. புனித நாமத்தை ஜபம் செய்வதன் மூலம் நீங்கள் மிகுந்த உற்சாகமடைவீர்கள் என்று நம்புகிறோம். இவ்வாறாக கிறிஸ்டாப்த புது வருடத்தை மங்களகரமாக வரவேற்கும் வழி என நம்புகிறேன்! ஹரி போல்!

நிதாய் கௌராங்க! நிதாய் கௌராங்க!

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

- END OF TRANSCRIPTION -
Transcribed by துர்லப ராதா தேவி தாஸி (8 ஜனவரி 2024)
Verifyed by
Reviewed by

Lecture Suggetions