Text Size

20211030 ஸ்ரீ மத் பாகவதம் 1.12.18

30 Oct 2021|Duration: 00:40:05|Tamil|Śrīmad-Bhāgavatam|Śrī Māyāpur, India

மூகம் கரோதி வாஞ்சலம் பங்கும் லங்காயதே கிரிம்
யத்-க்ருபா தம் அஹம் வந்தே ஸ்ரீ-குரும் தீன-தாரணம்
பரமானந்த-மாதவம் ஸ்ரீ சைதன்ய ஈஷ்வரம்
ஹரி: ஓம் தத் ஷத்

 ஓம் நமோ பகவதே வாஸுதேவாய
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய

 ஸ்ரீ மத் பாகவதம் 1.12.18

ஸ்ரீ-ராஜோவாச

அபி ஏஷ-வம்ஸ்யான் ராஜர்ஷீன்
புண்ய-ஸ்லோகான் மஹாத்மன: 
அனுவர்திதா ஸ்வித் யசஸா
ஸாது-வாதேன ஸத்தமா:

மொழிபெயர்ப்பு: மிகவும் நல்லவரான அரசர் (யுதிஷ்டிரர்) வினவினார்: ஓ மகாத்மாக்களே, இச்சிறந்த அரச குடும்பத்தில் தோன்றிய மற்றவர்களைப் போலவே, இவரும் ஒரு புனித மன்னராகவும், பக்தியுள்ளவராகவும், அவரது சாதனைகளில் புகழுக்கும், பெருமைகளுக்கும் உரியவராகவும் இருப்பாரா?

பொருளுரை: யுதிஷ்டிர மகாராஜனின் முன்னோர்கள் அனைவரும் புனித மன்னர்களாகவும் அவர்களது சாதனைகளால் புகழுக்குரியவர்களாகவும், பக்தியுள்ளவர்களாகவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் அரசபீடத்தில் அமர்ந்திருந்த ரிஷிகளாக இருந்தனர். இதனால் பிரஜைகள் அனைவரும் பக்தியுள்ளவர்களாகவும், ஒழுக்கம் உள்ளவர்களாகவும், செழிப்புடனும், ஆன்ம ஞானம் பெற்றவர்களாகவும் இருந்தனர். இத்தகைய ராஜ ரிஷிகள், மகாத்மாக்கள் மற்றும் ஆன்மீக கட்டளைகளின் கண்டிப்பான வழிகாட்டலின்கீழ் பயிற்றுவிக்கப்பட்டனர். இதன் பலனாக இராஜ்ஜியம் ஆன்மீக வாழ்வைக் கொண்ட மகிழ்ச்சி நிறைந்த இடமாகவும், புண்ணியவான்கள் நிறைந்த இடமாகவும் இருந்தது. யுதிஷ்டிர மகாராஜன் அவரது முன்னோர்களின் ஒரு சரியான பிரதியாக இருந்தார். அவருக்குப்பின் வரப்போகும் அரசரும் புகழ்பெற்ற அவரது முன்னோர்களைப் போலவே இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். மேலும் ஜோதிட சாஸ்திரப்படி குழந்தை, பகவானின் முதல்தரமான ஒரு பக்தராகப் பிறக்கும் என்பதை, கற்றறிந்த பிராமணர்களிடமிருந்து கேள்விப்பட்ட அவர் மகிழ்ச்சியடைந்தார். அதைவிட முக்கியமாக குழந்தை, அவரது முன்னோர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுமா என்பதை அவர் அறிய விரும்பினார். இதுவே அரசாட்சிக்குரிய வழிமுறையாகும். அரசாளும் மன்னர் புண்ணியவானாகவும், நல்ல வீரப் பண்புகளைக் கொண்ட பகவானின் பக்தராகவும், திடீரென உயர் அந்தஸ்து பெற்ற அற்ப மனிதர்களுக்கு அச்சமூட்டுபவராகவும் இருக்க வேண்டும். மேலும் குற்றமற்ற பிரஜைகளை ஆள்வதற்கு சமமான தகுதிகளைக் கொண்ட ஒரு வாரிசையும் அவர் விட்டுச் செல்ல வேண்டும். இக்காலத்து குடியாட்சி முறையில் மக்கள் சூத்திரர்களாகவோ அல்லது அதைவிட இழிவான நிலையிலோ உள்ளனர். மேலும் ஆட்சி முறையைப் பற்றிய சாஸ்திர அறிவைப் பெறாதவர்களான இவர்களது பிரதிநிதிகளால் ஆட்சி நடத்தப்படுகிறது. இவ்வாறாக சூழ்நிலை முழுவதுமே காமமும், பேராசையும் கொண்ட சூத்திரர்களின் குணங்கள் நிறைந்ததாக உள்ளது. இத்தகைய நிர்வாகிகள் தினந்தோறும் தங்களுக்கிடையில் சண்டை போட்டுக் கொள்கின்றனர். கட்சிகளில் காணப்படும் சுயநல நோக்கங்களின் காரணத்தால் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கின்றனர். ஒவ்வொருவனும் சாகும்வரை நாட்டின் செல்வங்களைச் சுரண்ட முய்லகின்றான். அரசியல் வாழ்விலிருந்து யாரும் ஓய்வு பெற விரும்புவதில்லை. அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற வேண்டியுள்ளது. இத்தகைய இழிவான மனிதர்களால் எப்படி மக்களுக்கு நன்மை செய்ய இயலும்? இதன் பலனாக லஞ்சம், சதியாலோசனை மற்றும் கபட நாடகம் போன்றவை அதிகரிக்கின்றன. வெவ்வேறு பதவிகளை ஏற்கும் முன்பாக, எவ்வளவு சீரிய நிர்வாகிகளாக இருக்க வேண்டுமென்பதை அவர்கள் ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

ஜெயபதாக ஸ்வாமி:  எனவே, யுதிஷ்டிர மஹாராஜா தனது முன்னோர்களின் அனைத்து நல்ல குணங்களையும் அடுத்த அரசனும் கொண்டிருப்பாரா என்பதை அறிய மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததைக் காண்கிறோம். அந்த நேரத்தில் அவர்கள் குழந்தையின் எதிர்கால ஜோதிடத்தை கணக்கிடுவார்கள். எனவே ஸ்ரீல பிரபுபாதர் முடியாட்சி முறை பற்றி அதிகம் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முந்தைய மன்னர்கள், அரியணையில் அமர்ந்திருக்கும் போதும் துறவிகளைப் போல தங்கள் செயல்களில் மிகவும் பயபக்தியுடன் இருந்தார்கள். எனவே ஸ்ரீல பிரபுபாதர் அந்த ஒப்பீட்டை இன்றைய நாளுடன் ஒப்பிட்டார். எனவே அக்காலத்தில் அரசர்கள் பக்திமான்களாகவும், பிராமண கலாச்சாரத்தைப் பின்பற்றவும் பயிற்றுவிக்கப்பட்டனர். பிராமண சமூகத்திற்குள் பிரச்சனைகள் வெடித்த போது, சத்ரிய சமூகத்திற்கும் பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பித்தன. எனவே இன்று நம்மிடம் ஜனநாயக முறை இருக்கிறது. அதனால்தான் ஸ்ரீல பிரபுபாதர், மக்கள் பக்தி கொண்டவர்களாக மாறினால், பக்தியுள்ள பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று கூறினார். பக்தர்கள் அரசியல் பதவிகளில் ஆர்வம் காட்டுவதில்லை என்று ஸ்ரீல பிரபுபாதா கூறினார். அதனால் அரசியல்வாதிகள் அவர்களுடைய வேலையைச் செய்யட்டும், ஆனாலும் அவர்கள் கிருஷ்ண உணர்வைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

பெங்களூரில் நடந்த ரத யாத்திரையில், கோவிலின் தலைவர் கூறினார், பிரதாபருத்ரா என்ற மன்னன் ஜகந்நாதப் பெருமானின் ரதத்திற்கு முன்னால் துடைப்பதாகவும் அதனால் இந்தியாவின் துணை ஜனாதிபதியை தரையை சுத்தம் பண்ணதான் அழைத்ததாகவும் கூறியது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் நாங்கள் இப்போது  ஜனநாயக ஆட்சியில் இருக்கிறோம், நாங்கள் எந்த ராஜாவையும் பின்பற்றவில்லை அதனால் நான் ஜகந்நாதப் பெருமானின் முன் துடைக்க மறுப்பதாக துணை ஜனாதிபதி கூறினார். அப்போது நான் மைக்கை எடுத்து இப்போது நாம் ஜனநாயக ஆட்சி தான், ஆனால் மக்களே அரசர்கள் என்று கூறினேன். அவர்களின் தலைவர்கள் பிரதிநிதிகளாக மாறுகின்றனர். அதனால் நான் ஜகந்நாதரை வழிபடுமாறு அனைத்து மக்களையும் கேட்டுக்கொள்கிறேன். துணைத் தலைவர் மக்களின் தலைவர் என்பதால், அவர் முதலில் செல்லலாம் என்றதும் அவர் துடைப்பத்தை எடுத்து ஒரு மைக்ரோ செகண்ட் போல ரோட்டை சுத்தம் செய்தார். எனவே நமது தற்போதைய தலைவர்களுக்கு இறைவனின் பக்தர்களாக மாற எந்த பயிற்சியும் இல்லை. தற்காலத்தில் நமது கிரஹஸ்த பக்தர்கள்  கர்பதான-சம்ஸ்காரம் செய்தால், இறைவனின் பக்தர்களாக உள்ளவர்களை தங்கள் குழந்தைகளாகக் கொள்வர். யுதிஷ்டிர மஹாராஜா, அவர் மன்னராக இருந்தார், மேலும் அடுத்த மன்னர் என்ன குணங்களால் அலங்கரிக்கப்படுவார் என்பதை அறியவும் விரும்பினார். இப்போது கிருஹஸ்த பக்தர்கள், பக்தர்களாகிய குழந்தைகளைப் பெறுவதில் ஆர்வம் காட்ட வேண்டும். யுதிஷ்டிரரைப் போலவே, குழந்தையின் எதிர்காலம் என்ன என்று ஜோதிடர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

பகவான் சைதன்யர் பிறந்தபோது அவரது தந்தை, தாத்தா நீலம்பர சக்ரவர்த்தியிடம் கேட்டார், நீலம்பர சக்கரவர்த்தி ஒரு சிறந்த ஜோதிடர். எனவே அவர் கணக்கிட்டு கூறினார், உங்கள் மகன் முழு பிரபஞ்சத்தின் பாரத்தையும் எடுத்துக்கொள்வான். அதனால்தான் அவர் பெயர் விஸ்வம்பரா என்று இருக்க வேண்டும் என்றும் கூறினார். எல்லா பெண்களும், அவர் வேப்ப மரத்தடியில் பிறந்ததால், அவரை நிமாய் என்று அழைக்க விரும்பினர். எனவே நீலம்பர சக்கரவர்த்தி, அவர் ஒரு சமரசம் செய்தார். மேலும் அவரது புனைப்பெயர் நிமாய் என்றும் அவரது உண்மையான பெயர் விஸ்வம்பரா என்றும் கூறினார். எனவே அவர் நிமாய் பண்டிதா என்றும் அழைக்கப்படுவார். ஆனால் அவர் திருமணம் மற்றும் பிற உத்தியோகபூர்வ விஷயங்களில் விஸ்வம்பர என்ற பெயரைப் பயன்படுத்தினார். அதனால் குழந்தைகளின் தரம் எப்படி இருக்கும் என்று பார்க்கும் இந்த கலாச்சாரம் சைதன்யர் காலத்திலும் காணப்பட்டது என்பதை அறியலாம்.

நாங்கள் பெற்றோர்களை கேட்க விரும்புகிறோம், அவர்கள் கிருஷ்ண உணர்வுள்ள குழந்தைகளைப் பெறுவதற்கு சிறந்த முறையில் முயற்சிக்க வேண்டும். மற்றும் கிருஷ்ண உணர்வுள்ள, ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழும் சுபுத்ரா குழந்தை கிடைக்க வேண்டி பிரார்த்தனையும் செய்ய வேண்டும். பத்ம புராணத்தில் ஒரு கதை அதில் பிரம்மாணன்  ஒருவன் இருந்தான் அவன்  குழந்தைப் பேறு இல்லாதவன் மற்றும் மிக மிக ஏழை. வேலை நிமித்தமோ அல்லது பணம் சம்பாதிக்கவோ தூர தேசம் செல்ல விரும்பி மனைவியை அணுகினான். குறைந்த பட்சம் எனக்கு இப்போது கணவன் இருக்கிறான், நீ தொலைதூரத்திற்கு சென்றால் எனக்கு கணவன் இருக்க மாட்டான் என்றாள் மனைவி. அதனால் குழந்தை இல்லாததற்காக நீ இவ்வளவு கவலைப்பட வேண்டாம் என்றாள். ஐந்து வகையான குழந்தைகள் உள்ளனர். ஒரு குழந்தை கெட்ட கர்மாவால் உருவாகிறது, அதனால் நீங்கள் ஒரு மோசமான குழந்தையைப் பெறுவீர்கள். உங்கள் கடந்தகால வாழ்க்கையில் நீங்கள் யாருக்காவது கடன்பட்டிருந்தால், அந்த நபர் உங்கள் மகனாக உங்களிடம் வருவார், மேலும் அவர் எப்போதும் உங்களிடம் அதிகமாக மிக அதிகமாக எதிர்பார்த்து காத்திருப்பார். மேலும், மற்றொரு வகை குழந்தை அது உங்கள் எதிரி. உங்களுக்குக் கஷ்டம் விளைவிப்பதற்காகவே அவர் பிறப்பார், அதன் பிறகு ஒரு நல்ல மகனும் இருப்பான். அவன் நீங்கள் இறக்கும் போது உங்கள் ஸ்ராத்தத்தை  செய்வான் மற்றும் எல்லா நல்ல காரியங்களையும் செய்வான் . அதனால் அவன் சுபுத்ரா என்று அறியப்படுகிறான். மற்றும் ஐந்தாவது வகை உதாசினா என்று அறியப்படுகிறான்.

எந்த ஒரு நல்ல அல்லது கெட்ட வேலையும் செய்யாதவன், எப்போதும் அலட்சியமாக இருப்பவன் குடும்பத்திற்காக எதையும் செய்யாதவன். எனவே இந்த ஐந்து வகைக் குழந்தைகளில் ஒருவரே நல்லவர். எனவே, சோகமாக இருக்க எந்த காரணமும் இல்லை. ஆனால் இதை அந்த கணவர் கேட்கவில்லை. அப்போது அவரது மனைவி, அருகில் உள்ள கிராமத்தில் ரிஷி  ஒருவர் இருக்கிறார், நீங்கள் அங்கு சென்று, அவரிடம் ஏன் நமக்கு குழந்தைகள் இல்லை, நீங்கள் ஏன் மிகவும் ஏழ்மையாக இருக்கிறீர்கள் என்று கேட்கும்படி பரிந்துரைத்தார். அவரும் உடனே அடுத்த கிராமத்திற்குச் சென்றார், அங்கு வசிஷ்ட முனிவர் இருந்தார், நான் ஏன் மிகவும் ஏழையாக இருக்கிறேன், எனக்கு ஏன் குழந்தைகள் இல்லை என்று கேட்டார்.  வசிஷ்ட முனி, கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் எதிர் காலத்தையும் புரிந்து கொள்ளக்கூடிய சக்தி வாய்ந்த திரிகாலஜ்ஞா யோகியாவார். எனவே அவர் கூறினார், உன்னுடைய கடந்தகால வாழ்க்கையில் நீ ஒரு பணக்கார சூத்திரனாக இருந்தாய். ஆனால் நீ ஒரு கஞ்சனாக இருந்தாய். மேலும் நீ உன்னுடைய மனைவி அல்லது குழந்தைகளுக்கு பணமே கொடுப்பதில்லை. பின்னர் நீ அகால மரணமும் அடைந்துவிட்டாய், உன் பணம் அனைத்தும் ஒரு ரகசிய இடத்தில் புதைக்கப்பட்டன. பின்னர் உன் மனைவி மற்றும் குழந்தைகள் மிகவும் வறுமையில் வாழ வேண்டியிருந்தது. எனவே, இந்த வாழ்க்கையில் உனக்கு குழந்தைகளும் இல்லை பணமும் இல்லை என்று வசிஷ்டர் கூறினார். அதை கேட்டு பிராமணர் சொன்னார், "சரி, நான் ஏன் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தேன் மற்றும் ஒரு நல்ல மனைவியைப் பெற்றேன்?"

வசிஷ்ட முனி கூறினார்,  "வைஷாக மாதத்தில் வைஷ்ணவ விருந்தாளி ஒருவர் உன்னிடம் வந்து இருந்தார்” என்றார்.

வைஷாகம் வருடத்தில், மாகம், கார்த்திகை ஆகியவை புண்ணிய மாதங்களாகும். இப்போது கார்த்திகை மாதம். தீபம் ஏற்றி இந்த தாமோதர  நிகழ்ச்சிகளை செய்வதன் மூலம் அனைத்து பலன்களையும் பெறலாம்.

எனவே வசிஷ்ட முனி அவரிடம், "வைஷாக மாதத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் சில நல்ல புண்ணிய செயல்களைச் செய்தாய், அதனால் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்து நல்ல கற்புடைய மனைவியைப் பெற்றாய்" என்று கூறினார்.

 பிறகு பிராமணர், “இந்தக் கெட்ட கர்மத்தை மாற்ற நான் என்ன செய்ய வேண்டும்?” என்றார். வசிஷ்ட முனி அவரிடம், இப்போது புனித மாதத்தில் இன்னும் ஏழு அல்லது எட்டு நாட்கள் இருப்பதால், நீங்கள் கொஞ்சம் பக்தி சேவை செய்யலாம் என்று கூறினார். அதை அவர் செய்தால், பின் அவருக்கு குழந்தைகள், பணம், எல்லாம் கிடைக்கும். அவர் கிருஷ்ண உணர்வுக்கும் மாறுவார் என்றார்.

எப்படியிருந்தாலும், இப்போது கார்த்திகை, தாமோதர மாதம், பதினோரு பன்னிரண்டு நாட்கள் முடிந்துவிட்டன. ஒவ்வொரு நாளும், நாம் இறைவனுக்கு விளக்கேற்றுகிறோம், மற்றவர்களையும் நீங்கள் இவ்வாறு செய்ய வைக்க முடிந்தால் மிகவும் நல்லது. எனவே, நான்  ஸ்ரீமத்-பாகவதம் படித்துக்கொண்டிருந்தேன், ஒரு ராஜா, பெற்றோர், குரு போன்றோரின் பார்வை எப்படி இருக்க வேண்டும்  மற்றும் பாடங்கள், குழந்தைகள் மற்றும் சீடர்கள் எவ்வாறு பின்பற்றபடுகின்றனர் என்பதைப் படித்தேன். ஆகவே, ஒரு குருவாக என் சீடர்கள் பின்பற்றுவதைப் பார்க்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எனது சீடர்களில் ஒருவர் கடந்த மூன்று ஆண்டுகளாக மந்திரம் பாடுவதில்லை என்றும், விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றும் எனக்கு ஒரு தகவல் கிடைத்தது. இந்த வழியில், எத்தனை சீடர்கள் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, அதனால் நான் கஷ்டப்பட வேண்டியிருந்தது. எனவே எங்களிடம் ஜெயபதாக ஸ்வாமி சிஷ்யா கேர் அலுவலகம் உள்ளது. ஆனால் பெரும்பாலான மின்னஞ்சல்கள், தொலைபேசி எண்கள் இப்போது செல்லுபடியாகாததால் சுமார் 20% பேரை மட்டுமே தொடர்பு கொள்ள முடிகிறது என்று கேள்விப்பட்டேன். எங்களிடம் JSSS திட்டங்கள் உள்ளன, அங்கு சீடர்கள் மற்றவர்களுக்கு கிருஷ்ண உணர்வைப் பயிற்சி செய்ய உதவ வேண்டும். இந்த வழியில் ஒவ்வொருவரும் கிருஷ்ண உணர்வு விதிகளைப் பின்பற்ற வேண்டும்.

எவ்வாறாயினும்  யுதிஷ்டிரர் எப்படி ஒரு ராஜாவாக இருந்தார், மற்றும் அடுத்த ராஜா சிறந்தவராக இருப்பாரா என்று காண அவர் மிகவும் ஆர்வமாக இருந்தார் என்பதையும் கண்டோம். எந்த அரசர்களும் சீடர்களாக இருப்பதை நான் கண்டதில்லை. ஒருவேளை ஒரு ஆப்பிரிக்க அரசர் இருந்திருக்கலாம். எப்படியிருந்தாலும், என்னிடம் பல கிருஹஸ்த சிஷ்யர்கள் உள்ளனர், அவர்கள் தங்கள் குழந்தைகள் நல்ல பக்தர்களாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். என் சீடர்கள் இல்லாவிட்டாலும், பெற்றோர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை பக்தர்கள் என்று பார்க்க வேண்டும். அவர்களின் குரு யாராக இருந்தாலும், பின்பற்றவில்லை என்றால், அவர்கள் தங்கள் குருவை சிரமத்திற்கு உள்ளாக்குகிறார்கள். யுதிஷ்டிர மஹாராஜா  பரீக்ஷித் மஹாராஜா எப்படி இருப்பார் என்பதை அறிய விரும்புவதைப் போலவே, கிருஷ்ண உணர்வுள்ள கிருஹஸ்தர்களும் தங்கள் குழந்தைகளை கிருஷ்ண உணர்வுள்ள பக்தர்களாகப் பெற முயற்சிக்க வேண்டும்.

உத்தரா ஒரு தூய பக்தை. அவள் கிருஷ்ணனிடம் சென்று கிருஷ்ணனுடன் தொடர்பு ஏற்படுத்தி கொண்டாள். மேலும் அவளது கணவர் அர்ஜுனன் மற்றும் சுபத்ரா தேவியின் மகன். அதனால், ஒரு மகனாக, சுபத்ரா மற்றும் அர்ஜுனனின் அனைத்து நல்ல குணங்களும் அவருக்கு இருந்தன. எனவே, ஸ்ரீல பிரபுபாதர், நமது கிருஷ்ண உணர்வு இயக்கத்தில் மூன்றாம் தலைமுறை பக்தர்களாக இருக்க வேண்டும் என்று கூறினார். அவர்களின் பெற்றோர், தாத்தா, பாட்டிக்கு முழுத் தகுதி இல்லை என்றாலும் கூட . ஆனால் பரீக்ஷித் மஹாராஜாவைப் பொறுத்தவரையில், அவருடைய பெற்றோர், தாத்தா, பாட்டி, அனைவரும் தூய்மையானவர்கள். அபிமன்யு, உத்தரா அவர்கள் அனைவரும் சிறந்த பக்தர்கள். மேலும் அவர்கள் அதிர்ஷ்டசாலிகள் மற்றும் அவர்கள் நல்ல குடும்பம் மற்றும் மிகவும் நல்ல க்ஷத்திரியர்களைக் கொண்டிருந்தனர். எனவே கேள்வியே இருக்கக்கூடாது. ஆனால் ஸ்ரீல பிரபுபாதர், நமது கிருஷ்ண உணர்வு இயக்கத்தில், பெற்றோரிடம் கூட இந்த இயற்கையான பிராமண குணங்கள் இருக்காது என்று கூறினார். ஆனால் மூன்று தலைமுறைக்குப் பிறகும் தொடர்ந்து பயிற்சி செய்தால், பிறப்பிலிருந்தே இயற்கையாகவே நல்ல பிராமண குணங்களைக் கண்டிப்பாக பெறுவார்கள். எப்படியிருந்தாலும், இவை மிகச் சிறந்த அறிவுரைகள், யுதிஷ்டிர மஹாராஜா வம்சம் எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்பதில் எவ்வளவு ஆர்வம் காட்டுகிறார் என்பதைப் பார்க்கிறோம். எனவே ஸ்ரீல பிரபுபாதர், நமது கிருஷ்ண உணர்வு இயக்கத்தில் வரும் குழந்தைகள், அவர்கள் வைகுண்ட குழந்தைகள், அவர்கள் கிருஷ்ணரால் அனுப்பப்பட்டவர்கள், அவர்களை நாம் மிகவும் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். கிருஷ்ணர் அவர்களை அனுப்பியுள்ளார். எனவே நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது பல குழந்தைகள், கிருஷ்ண உணர்வு இயக்கத்தை எவ்வாறு பரப்ப உதவுவது என்று சிந்தித்துக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம்.

சில நாட்களுக்கு முன்பு நரோத்தமா தாஸ தாகூரா மறைந்த நாள். மாயப்பூரில் உள்ள எங்கள் குழந்தைகளில் ஒருவர் தனது தந்தையிடம், நரோத்தம தாஸ தாகூராவின் சமாதி இடத்தை நான் பார்க்கலாமா? என்று கேட்க தந்தை, “சரி, போகலாம். மாயாபூரிலிருந்து இரண்டு அல்லது மூன்று மணி நேரப் பயணமாகும். மேலும் இது கம்பீலா, கியா-கஞ்ச், முர்ஷிதாபாத் ஆகிய இடங்களில் உள்ளது என்றார்.

இன்று வீரபத்ர பிரபு தோன்றிய நாள். இவர் நித்யானந்த பிரபுவின் மகன். அவர் க்ஷிரோதகசாயி விஷ்ணுவின் அவதாரம். அவர் ஒரு சிறந்த போதகர். உண்மையில், ஏகசக்ரா அவரது பெயரால் அழைக்கப்படுகிறது.,வீரசந்திரபூர் என்று. எனவே, நமது சம்பிரதாயத்தில் பிரசாரகர்களின் பெரும் பாரம்பரியம் உள்ளது. யுதிஷ்டிர மஹாராஜா எப்படி பரீக்ஷித் மஹாராஜா ஒரு நல்ல ராஜாவாக இருப்பாரா என்பதை அறிய விரும்புவதைப் போல, நம் குழந்தை ஒரு நல்ல பிரச்சாரகராக இருப்பாரா என்பதை அறிய நாம் ஆர்வமாக இருக்க வேண்டும். எப்படியிருந்தாலும், இப்போது வகுப்பை முடிக்க வேண்டிய நேரம் இது. ஏதாவது கேள்விகள்?

விரஜகோபி தேவி தாஸி: பெங்காலி:  வேதநூல்களின்படி, நமது முந்தைய கர்மாவின்படி நமக்கு வெவ்வேறு வகையான குழந்தைகள் உள்ளனர். ஆனால் உங்களிடமிருந்து தீட்சை பெற்ற ஒருவர், ஜபிப்பதை நிறுத்தினால், அந்த நபரை எப்படி மீண்டும் கிருஷ்ண உணர்விற்குள் கொண்டு வருவது? தயவுசெய்து எங்களுக்கு சில வழிகாட்டுதல்களை வழங்கவும்.

ஜெயபதாக ஸ்வாமி:  அவர் தீட்சை பெற குறைந்தபட்சம் ஒரு வருடம்16 சுற்றுகளாவது ஜபிக்கிறாரா என்று பார்க்க வேண்டும். அவர் ஜெபிப்பதை நிறுத்திவிட்டு, ஒழுங்குமுறைக் கொள்கைகளைப் பின்பற்றுவதை நிறுத்தினால், எனது ஜேபிஎஸ் சீடர்கள் அப்பக்தரை மீண்டும் ஜபிக்குமாறு அக்கறையோடு கேட்டுக் கொள்கின்றனர், பக்தரும் ஒப்புக்கொள்கிறார். அதனால் கேட்பதன் மூலம்தான் பலரும் ஆரம்பிக்கிறார்கள். அதனால் மற்ற சீடர்கள் குருவுக்கு உதவ முன்வர வேண்டும் பக்தரை பயிற்சி செய்யவும் பின்பற்றவும் ஊக்குவிப்பதற்காக.

கேள்வி: ஒரு மகன் ஒரு குடும்பத்தில் இருந்து பக்தனானால், அவனால் அவனது பெற்றோர் மற்றும் மூதாதையர்களை விடுவிக்க முடியும் என்பதை சாஸ்திரத்திலிருந்து நாம் அறிவோம். ஆனால் மகன் இல்லை என்றால் மகள் இருந்தால் அல்லது குழந்தை இல்லை என்றால் மகள் தன் பெற்றோருக்கு விடுதலை அளிக்க முடியுமா? அவர்கள் பக்தனாக மாறினால் அல்லது குழந்தை இல்லை என்றால் என்ன செய்வது?

ஜெயபதாக ஸ்வாமி:  நல்ல மகன் சுபுத்ரன் என்றும், நல்ல மகள் சுபுத்ரி என்றும் அழைக்கப்படுகிறாள். அதனால் அவர்கள் பெற்றோரை நரக நிலைமைகளில் இருந்து விடுவிக்க முடியும். இப்போது, ​​இது ஒரு நீண்ட கதை, மாயாபூருக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில், சைதன்யா பகவான் தனது செயலாளரிடம், தான் க்ருஹஸ்தாஸ்ரமத்தை எடுக்க வேண்டும் என்று கூறினார். அக்ரத்வீபத்தில், இது கோவிந்த கோஷாவுக்குக் கொடுக்கப்பட்ட உத்தரவு. ஆனால் அவருடைய மனைவி இறந்தார், மகன் இறந்தார், அதனால் கோவிந்த கோஷா மிகவும் மனச்சோர்வடைந்தார். அவர் கூறினார், "நான் ஒரு பிரம்மச்சாரி ஆக தகுதி பெறவில்லை, ஒரு  கிரஹஸ்தனாகவும் தோல்வி அடைந்து விட்டேன், மகன் இல்லை மனைவி இல்லை என்றான். தெய்வம் கூறியது, "நான் உங்கள் மகன்!" ஆனால் அவர், "நீங்கள் அப்படிப்பட்ட மகன் இல்லை, எனக்காக ஸ்ராத்தம் செய்ய மாட்டீர்கள்" என்றார். தெய்வம், "நான் உங்களுக்கு ஸ்ராத்தம் செய்வேன், ஆனால் நீங்கள் சரியாக எனக்கு போகத்தை வழங்கவேண்டும்" என்று கூறினார். எனவே அவர் அனைத்து கிராமத் தலைவர்களையும் அழைத்தார்,  தெய்வம் கூறியது, "கோவிந்த கோஷா மறைந்த நாளில் நான் அவரது சமாதிக்குச் சென்று சிராத்தம் செய்வேன்" என்று. மேலும் தெய்வம் கொண்டு செல்லப்பட்டது... நான் அங்கு சென்றிருந்தேன், அங்கே தெய்வம் தன் பக்தருக்கு ஸ்ராத்தம் செய்ததைக் கண்டேன். எனவே, நாம் கிருஷ்ணருக்கு சேவை செய்ய முயற்சிக்க வேண்டும், அவர் எப்போதும் நமக்கு உதவ தயாராக இருக்கிறார். எனவே, பக்தர்களாக இருக்கும் ஆண் குழந்தைகளையோ அல்லது பெண் குழந்தைகளையோ பெற முயற்சிக்க வேண்டும்.

பெங்காலி: உங்கள் சீடர்களில் ஒருவர் பக்தி மார்க்கத்தை முழுவதுமாக விட்டுவிட்டார், இப்போது அந்த நபர் திரும்பி வந்துவிட்டார். அப்படிப்பட்டவரின் கடமை என்ன?

ஜெயபதாக ஸ்வாமி: அவர் மீண்டும் ஜபிக்க ஆரம்பித்து நான்கு ஒழுங்குமுறைக் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். பக்தித் தொண்டனை விட உயர்ந்த பிராயச்சித்தம், பரிகாரம் எதுவும் இல்லை.

- END OF TRANSCRIPTION -
Transcribed by ஜனதா சுந்தர்
Verifyed by
Reviewed by

Lecture Suggetions