மூகம் கரோதி வாஞ்சலம் பங்கும் லங்காயதே கிரிம்
யத்-க்ருபா தம் அஹம் வந்தே ஸ்ரீ-குரும் தீன-தாரணம்
பரமானந்த-மாதவம் ஸ்ரீ சைதன்ய ஈஷ்வரம்
ஹரி: ஓம் தத் ஷத்
ஜெயபதாகா ஸ்வாமி : நான் மூன்று கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன் என்று கூறியிருந்தேன் - இரண்டு பேஸ்புக் ஆங்கிலத்திலிருந்து மற்றும் ஒன்று பேஸ்புக் பெங்காலியிலிருந்து.
கேள்வி: இது உருவகமானதா அல்லது உண்மையானதா – பகவான் சைதன்யரின் உடல் திரவமாக்கப்பட்டது.
ஜெயபதாக சுவாமி: நாம் புனிதமான ஜெயத்வைத மஹாராஜாவிடம் சொன்னது போல் அவரால் எதையும் செய்ய முடியும். அவர் திரவமாக முடியும், பின்னர் அவர் திடமாக முடியும். அவரை மீறி நாம் எதையும் கையாள முடியாது. அவர் எல்லாவற்றையும் செய்ய முடியும்! அவர் மரங்களைப் பார்த்த மாத்திரத்தில், அது தவறான பருவத்திலும் பூக்களை உற்பத்தி செய்தது. அதனால் சில சமயங்களில் அவர் மிகவும் பரவசமாக இருந்தார், விருந்தாவனம் பற்றி சொல்வதற்கு முன்பே விருந்தாவனம் என கேட்டதும் அவர் சிரிப்பார், நடனமாடுவார், அவரது பரவசம் நூறு மடங்கு அதிகரித்தது. அவர் மதுராவில் இருந்தபோது, அவரது பரவசம் ஆயிரம் மடங்கு அதிகரித்தது, அவர் பிருந்தாவனத்தில் இருந்தபோது, அவரது பரவசம் பத்தாயிரம் மடங்கு அதிகரித்தது! இது கற்பனை செய்தும் பார்க்க முடியாதது! அவருடைய இயல்பான பரவசம் எவ்வளவு பெரியது, அது எப்படி பத்தாயிரம் மடங்கு பெருகியது என்பது நினைத்தும் பார்க்க முடியாதது! ஹரே கிருஷ்ணா!
கேள்வி: கௌர-மண்டலம் மற்றும் விரஜ-மண்டலத்தின் கடந்த கால நிகழ்வுகள் சமமானதா?
ஜெயபதாக ஸ்வாமி: ராதாராணி புல்லாங்கழலை இசைத்து கிருஷ்ணரைக் கவர்ந்தார், கிருஷ்ணர் சொன்னார், நீங்கள் இந்த அழகான தாமத்தை எனக்காக உருவாக்கினீர்கள். நவத்வீப தாமா . இந்த இடம் விருந்தாவனத்திலிருந்து வேறுபட்டதல்ல. அதனால் கிருஷ்ணர் ராதாராணியோடு ஒன்றிணைந்தார். அவர்கள் ஒன்றாக இருந்தார்கள், அவர்கள் இரண்டாகி, மீண்டும் ஒன்றாக மாறினர். அவரே பகவான் ஸ்ரீ சைதன்யர். அவர் ராதாராணியின் நிறத்தையும் இதயத்தையும் கொண்டிருந்தார், ஆனால் அவர் கிருஷ்ணரே ஆவார். எனவே நவத்வீபம் விருந்தாவனத்திலிருந்து வேறுபட்டதல்ல என்று கிருஷ்ணர் கூறினார். மேலும் நரோத்தம தாஸ தாகூரா பாடுவார் கௌர-மண்டல-பீமி, ஜெப ஜானே சிந்தாமணி, தாரா ஹய வ்ரஜ-பூமி வாசா என்று, நிச்சயமாக பகவான் ஸ்ரீ சைதன்யர் இங்கே இருந்ததால் இந்த இடம் புனிதமானது என்று நாங்கள் நினைக்கிறோம். ஆனால் பகவான் ஸ்ரீ சைதன்யர் விருந்தாவனத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். அதனால் நாம் நவத்வீப பரிக்ரமத்திற்கு செல்வோம் பகவான் ஸ்ரீ சைன்யரின் கடந்தகால நிகழ்வுகளை நினைவில் கொள்வோம்.
இக்ஷ்வாகு தாஸா: நான் சமீபத்தில் இஸ்கான் அமைப்பின் புகழ்பெற்ற சந்நியாசி ஒருவர் கூறக் கேட்டேன். ஹரி-பக்தி-விலாஸா ஒரு சாஸ்திரம் அல்ல. ஏனெனில் சாது மற்றும் குரு எனும் பிரிவின் கீழ் விழுகிறது.எனவே அதன் அறிக்கைகள் முழுமையான அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளப்பட முடியாதது. அதனை சாஸ்திரமாக கருதுவதற்கும் ஏற்பதற்கும் ஆன அளவுகோல்கள் என்ன. அங்கீகரிக்கபட்ட சாஸ்திரங்களில் கூறப்படும் அறிக்கைகள் சாதுக்களாலும் குருவாலும் தரப்பட்டவையே, பகவானிடமிருந்து பிரத்யேகமாக அல்ல, உதாரணமாக ஸ்ரீமத் பாகவதம் மற்றும் பகவத் கீதை முதலியன... ?
ஜெயபதாக ஸ்வாமி: ஹரி-பக்தி-விலாஸா வெவ்வேறு சாஸ்திரங்களில் இருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்களின் ஒரு தொகுப்பு, ஸநாதன கோஸ்வாமியால் வழங்கப்பட்டது. எனவே இந்த மேற்கோள்கள் பீஷ்ம-பஞ்சகத்தைக் கடைப்பிடிப்பதற்கான வழி என்ன என்பது குறித்து வழங்குகிறது. எனவே அவர் வெவ்வேறு வேதங்கள் , வெவ்வேறு சாஸ்திரங்கள் , புராணங்கள் ஆகியவற்றை மேற்கோள் காட்டுகிறார் . இதை உங்களிடம் சொன்னவருக்கு ஸனாதன கோஸ்வாமி என்ன செய்கிறார் என்பதை புரிந்துகொள்ளமுடியாது. அவர் தனது சொந்த கருத்துக்களை எழுதவில்லை, சாஸ்திரங்களிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளார். ஹரே கிருஷ்ணா!
Lecture Suggetions
-
20211014 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - சம்பிரதாயசம்மேளன முகவரி
-
20211120 ஸ்ரீமத் பாகவதம் 1.12.35 - 36
-
20210523 அமோகனை தன் கருணையினால் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காப்பாற்றுதல்
-
20210625 ஸ்ரீ அத்வைத ஆச்சார்யர் சச்சிமாதாவை அழைத்துவர பல்லக்கினை அனுப்புதல்
-
20211108 ஸ்ரீல பிரபுபாதாவின் திரோபாவா விரிவுரை இஸ்கான் மாயாபூர்
-
20210918 வாமன தூவாதசி அன்று ஸ்ரீமத் பாகவதம்
-
20210930 கேள்வி மற்றும் பதில்கள்
-
20211108 இஸ்கான் காங்டாக் மற்றும் அம்பாலா பக்தர்களுக்கு ஸ்ரீல பிரபுபாதா திரோபாவா முகவரி
-
20210904 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20200903 ஜூம் கேள்வி பதில்கள்
-
20211113 ஸ்ரீமத்-பாகவதம் 1.12.29
-
20211002 பக்தி விருட்ச சம்மேளன உரையாற்றுதல்
-
20211017 இஸ்கான் சென்னையின் படன உற்சவத்தில் உரையாற்றுகிறார்.
-
20211009 ஸ்ரீமத்பாகவதம் 1.11.34
-
20211003 ஸ்ரீமத் பாகவதம் 1.11.28
-
20210914 51வது சன்னியாச ஆண்டுவிழா உரை
-
20210918 கோலோக பாத்ரா பிரச்சாரத்திற்கு செல்க
-
20210925 ஸ்ரீமத்- பாகவதம் 1.11.21
-
20211001 கேள்வி மற்றும் பதில்கள்
-
20210828 ஸ்ரீமத் பாகவதம் 1.10.33-35
-
20210830 ஸ்ரீமத் பாகவதம்
-
20211017 ஸ்ரீமத் பாகவதம் 1.12.2
-
20210925 கேள்வி மற்றும் பதில் அமர்வு
-
20211016 உலகளாவிய தாமோதர விழா துவக்கவுரை
-
20211015 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - விழா துவக்கவுரை
-
20210711 “திருநாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” — பத்ர பூர்ணிமா நிகழ்ச்சி சொற்பொழிவு
-
20210710 சாந்திபூரில் ஸ்ரீ சைதன்யர் மற்றும் அவரது சகாக்களின் லீலைகளை கேட்பதால் கிடைக்கும் பலன்கள்
-
20211016 பங்களாதேஷ் பக்தர்களுக்கான செய்தி
-
20210905 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20210624 ஹர்மொனிக்ஸ் லைப்-ஸ்டைல் நல்லாசிவுரை