Text Size

20210801 பத்ரா பூர்ணிமா சிறப்பு பிரச்சார தொடக்க உரை

1 Aug 2021|Duration: 00:18:17|Tamil|Public Address|Śrī Māyāpur, India

பத்ரா பூர்ணிமா சிறப்பு பிரச்சார தொடக்க உரை

மூகம் கரோதி வாஞ்சலம் பங்கும் லங்காயதே கிரிம்
யத்-க்ருபா தம் அஹம் வந்தே ஸ்ரீ-குரும் தீன-தாரணம்
பரமானந்த-மாதவம் ஸ்ரீ சைதன்ய ஈஷ்வரம்
ஹரி: ஓம் தத் ஷத் 

ஜெயபதாக ஸ்வாமி: ஸ்ரீமத்-பாகவதம் கி ஜயா!

பத்ர பூர்ணிமாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறோம். அனைத்து பக்தர்களும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் - அனைத்து பக்தர்களும் சமூக இடைவெளியைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். பத்ர பூர்ணிமாவில் ஸ்ரீமத்-பாகவதம் விநியோகம் மிகவும் விசேஷமான நிகழ்வு ஆகும். அந்த நாளில், நாம் ஸ்ரீமத் பாகவதத்தைப் பெற்றால், அல்லது அதைக் கொடுத்தால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் குறிப்பாக மகிழ்ச்சியடைகிறார். ஸ்ரீமத் பாகவதத்தில், பத்ர பூர்ணிமா நாளில் ஸ்ரீமத் பாகவதத்தை தானம் செய்தால், அவர் கோலோக பிருந்தாவனம் செல்வார் என்று கூறப்பட்டுள்ளது.  தேவானந்த பண்டிதர் பாகவதத்தை பிரசாரம் செய்யும் பிரசாரகர் ஆவார் . ஆனால் அவர் ஸ்ரீவாஸ தாகுரை புண்படுத்தினார் அதனால் அவர் பகவான் ஸ்ரீ சைதன்யரின் கருணையைப் பெறவில்லை. ஆனால் அவருக்கு வக்ரேஷ்வர பாண்டிதாவின் சங்கம் கிடைத்தபோது, ​​பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் தாமரை பாதங்களில் அவருக்கு பக்தி கிடைத்தது. பிறகு தேவானந்த பண்டிதர் சைதன்ய மஹாபிரபுவிடம் ஸ்ரீமத் பாகவதத்தை எப்படி படிக்க வேண்டும் என்று கேட்டார். சைதன்ய மஹாபிரபு ஸ்ரீமத்-பாகவதம் மிகவும் சிறப்பான சாஸ்திரம், வேதநூல் என்று கூறினார். ஆகவே ஸ்ரீமத் பாகவதத்தை நாம் பக்தியை முதன்மைப்படுத்தும் வகையில் விளக்க வேண்டும். ஸ்ரீமத் பாகவதம் இருக்கும் எந்த வீட்டிலும் எந்த அசுபமும் நுழைய முடியாது. கலியுகத்தில் நாம் ஒவ்வொரு வீட்டிலும் ஸ்ரீமத் பாகவதத்தை சிறப்பாக வைத்திருக்க வேண்டும். அந்த வீட்டில் தினமும் 13 தத்துவ தேவர்களுடன் ஹரி பகவான் வருகிறார். ஸ்ரீமத் பாகவதம் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் புனிதத் தலங்கள், நதிகள், கங்கா, யமுனா மற்றும் மலைகள் தோன்றும். மேலும் தர்மம், யக்ஞம் ஆகியவையும் அங்கே தோன்றும். ஆகவே ஒவ்வொருவரும் ஸ்ரீமத் பாகவதத்தை தங்கள் வீட்டில் வைத்திருக்க வேண்டும்.

ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் ஸ்ரீமத்-பாகவதம் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக, இந்த பத்ர பூர்ணிமாவை நாங்கள் முன்னெடுத்துச் செல்கிறோம். ஸ்ரீமத் பாகவதத்தின் பெருமைகளைப் பற்றி ஸ்கந்த புராணம் போன்ற பல்வேறு நூல்களில் பல குறிப்புகள் உள்ளன. உங்களிடம் பாகவதம் இருந்தால் நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான வேதங்களைச் சேகரித்து என்ன பயன்? யாருடைய வீட்டில் ஸ்ரீமத் பாகவதம் இல்லையோ, அவர்களை யமராஜா கவனித்துக் கொள்வார். ஒருவன் தூய வைஷ்ணவனாக இருந்து அவனிடம் பாகவதம் இல்லை என்றால், அவன் சண்டாளனை விடவும் அல்லது பாவமுள்ளவனை விடவும் தாழ்ந்தவன். ஸ்ரீமத் பாகவதத்தை வாங்குவதற்கு நாம் எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டியிருந்தாலும், அதற்கு ஈடு இணை இல்லை. யாராவது தங்கள் வீட்டில் பாகவதம் இருந்தால், அவர்கள் நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள் போன்றவைகளைப் பெறுவார்கள். பாகவதம் உங்கள் முன்னால் இருப்பதைப் பார்க்கிறீர்கள். எனவே பாகவதத்தைப் பார்த்த பின் அனைவரும் தரிசனம் செய்ய வேண்டும். எனவே ஸ்ரீமத்-பாகவதம் பரம புருஷ பகவானின் இலக்கிய அவதாரமாகும். அதனால்தான் அனைவருக்கும் ஐஸ்வர்யத்தைப் பரப்ப, நாங்கள் ஸ்ரீமத்-பாகவதத்தை விளம்பரப்படுத்தவும் விநியோகிக்கவும் விரும்புகிறோம். எனவே அனைவருக்கும் பாகவதம் பெறவும், பாகவத தானம் செய்யவும் இது ஒரு அருமையான வாய்ப்பு. ஒருவர் ஒரு ஸ்லோகத்தைப் படித்தாலும் அது பலன் தரும் என்று சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாகவதத்தை பித்தளை ஆசனத்தில் வைத்து வழிபடுவதை நான் அசாமில் கண்டிருக்கிறேன்.

எப்படியிருந்தாலும், உங்கள் நண்பர்கள், உறவினர்கள் போன்றோருக்கு பாகவதத்தை எப்படி விநியோகிப்பது என்பதை இப்போதிலிருந்தே நீங்கள் திட்டமிடலாம். இப்போது இந்த தொற்றுநோய் காலத்தில், நாங்கள் ஃபோன் மூலம் பாகவதத்தை விநியோகிக்கிறோம். அது எதுவாக இருந்தாலும், அது ஸ்ரீமத்-பாகவதம் விநியோகிக்க மிகவும் முக்கியமானது மற்றும் அவசியமானது. இப்போது நாம் ஸ்ரீமத்-பாகவதத்தின் மகிமையை புனிதமான பக்தி புருஷோத்தம ஸ்வாமி, மற்றும் புனிதமான கௌராங்க பிரேம ஸ்வாமி மஹாராஜா, மற்றும் அவரது அருள் பிரஜா விலா தாஸ பிரபு ஆகியோரிடமிருந்து கேட்டோம். இந்த உலகம் காலியாக உள்ளது, ஆனால் பாகவதம் இருந்தால் அனைத்தையும் தூய்மைப்படுத்துகிறது. ஆனா, இப்போதே தாமதம் ஆகுது, அதிகம் பேச மாட்டேன். ஆனால் பத்ர பூர்ணிமா வரை 4000 பாகவதம் செட்களை விநியோகிக்க உறுதியளித்துள்ளோம் என்று புனித பக்தி விஜய பாகவத சுவாமிகள் கூறினார். இலக்கை அடைய அனைவரும் பிரார்த்தனை செய்வோம். ஹரே கிருஷ்ணா! ஸ்ரீல பிரபுபாதா கி ஜயா! ஸ்ரீல பிரபுபாதர் மிகவும் சிரமப்பட்டார். ஶ்ரீல பிரபுபாதர் அந்த இரவின் மங்கலத்தில் ஸ்ரீமத் பாகவதத்தை மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார். அவரது பக்தர் புனித பக்தி சாரு சுவாமிகள் ஸ்ரீமத் பாகவதத்தை வங்காள மொழியில் மொழிபெயர்த்தார். இந்த வழியில், இந்த பக்தர்கள் அனைவரும் சிறப்பு யாகம் செய்து ஸ்ரீமத்-பாகவதம் எழுதியுள்ளனர். எப்படியிருந்தாலும், நமது கடமை என்னவென்றால், நாம் பாகவதத்தைக் கேட்பதும், பாகவதத்தைப் படிப்பதும், இந்த பாகவதம் ஒவ்வொரு வீட்டிலும் சென்றடைய முயற்சிப்பதும்தான்.

ஹரே கிருஷ்ணா!

- END OF TRANSCRIPTION -
Transcribed by ஜனதா சுந்தர்
Verifyed by
Reviewed by

Lecture Suggetions