Text Size

20210522 ஸ்ரீமத் பாகவதம் 1.8.41

22 May 2021|Duration: 00:38:30|Tamil|Śrīmad-Bhāgavatam|Śrī Māyāpur, India

புனித ஜெயபதாக ஸ்வாமி மஹராஜ் அவர்களால் வழங்கப்பட்டது மாயாபூர், இந்தியா

மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்காயதே கிரீம்
யத்-க்ருபா தம் அஹம் வந்தே ஸ்ரீ குரும் தீன-தாரணம்
பரமானந்தம் மாதவம் ஸ்ரீ சைதன்ய ஈஸ்வரம்
ஹரி: ஓம் தத் ஸத்
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய

ஜெயபதாக ஸ்வாமி: குந்தி மஹாராணியின் பிரார்த்தனையில் இடம்பெற்றுள்ள இந்த பதம், நமக்கு ஒரு நல்ல அறிவுரையை அளிக்கிறது. குடும்ப உறவுகள் துண்டிக்கப்பட வேண்டும் என்று குந்தி மஹாராணி பகவான் கிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்கிறாள். அந்தப் பெண்ணுக்கு இரண்டு குடும்பங்கள் மீதும் பாசம் உண்டு. ஏனெனில் இந்தியாவில் பெண் கணவனுடன் தான் அதிகம் இருப்பாள். அவளுக்கு தன் பெற்றோர் மீதும் பாசம் உண்டு. அவள் கணவன் மற்றும் அவனது குடும்ப உறுப்பினர்கள் மீதும் பற்று கொண்டவள் ஆவாள். அதனால் அவளுக்கு இரண்டு குடும்பங்கள் உள்ளன என்று அர்த்தம். ராணி குந்தி, இந்த இரு குடும்பங்கள் மீதும் தனக்குள்ள பாசம் அல்லது சிக்கலைத் துண்டிக்குமாறு கிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்கிறாள். துவாரகாவில் விருஷ்ணிகளுடன் தங்கினார். விருஷ்ணிகள் குந்திதேவியின் தந்தைவழி குடும்பம். ஆனால் அவள் கணவனின் பக்கத்தில் இருந்த தன் மகன்களான பாண்டவர்களிடமும் பற்று கொண்டிருந்தாள். ஒரு பக்கம், கிருஷ்ணர் பாண்டவர்களுடன் இருக்க வேண்டும் என்று அவள் விரும்பினாள். ஆனால் இது நடந்தால், மறுபுறம் அவளுடைய தந்தைவழி குடும்பம் கிருஷ்ணரின் தொடர்பை இழந்துவிடும். அதனால் அவள் இந்தக் குடும்பப் பற்றுகளுக்கிடையே நைந்துபோனாள். ஆனால் உண்மையில் அனைத்தும் கிருஷ்ணருடன் தொடர்புடையது. ஏனெனில் கிருஷ்ணர் இருவருடனும் மிகவும் இணைந்திருந்தார். இரு குடும்பத்தினரும் இறைவனின் தூய பக்தர்கள். எனவே மஹாராணி குந்தி இது ஒரு குடும்பப் பற்றுதல் என்பது போல் பிரார்த்தனை செய்கிறாள். ஆனால் உண்மையில், இதுவும் கிருஷ்ணரிடம் அவள் கொண்ட தூய பக்தியே ஆகும். நம் குடும்பங்களுடன் அல்லாமல், கிருஷ்ணரிடம் நாம் எவ்வாறு பற்று கொள்ள வேண்டும் என்பதற்கு அவள் நமக்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்கின்றாள். நம் குடும்பத்தில் யாருக்கேனும் நோய் ஏற்பட்டால், நாம் பொதுவாக இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம். ஆனால் சாஸ்திரம், நாம் இறைவனிடம் எந்த பௌதிக உதவியும் கேட்கக் கூடாது என்கிறது. அதனால்தான் நாம் இறைவனை நாடினால், இறைவனின் திட்டம் என்னவென்று நமக்குத் தெரியாது, அதனால் நமது பிரார்த்தனையை மட்டும் சமர்பிக்க வேண்டும், அதசமயம் இறைவனுக்கு வேறு ஏதாவது திட்டம் இருந்தால், அது இயற்கையாகவே மேலோங்கும். ஸ்ரீல பிரபுபாதர் பகவான் ராமரின் உதாரணத்தைப் பயன்படுத்தினார், அவர் ஒரு சிறந்த ராஜா. ஒரு அரசனுக்கான நல்ல உதாரணத்தைக் காட்டவே அவர் தனது மனைவியைத் துறந்தார். இதேபோல், ஸ்ரீல பிரபுபாதர் ஆறு கோஸ்வாமிகளின் உதாரணத்தையும் பயன்படுத்தினார்.அதாவது கோபால பட்ட கோஸ்வாமி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த தலைமைப் பூசாரியின் குடும்பத்தைச் சேர்ந்தவர். ரூபா மற்றும் ஸனாதன, மற்றும் ஜீவ கோஸ்வாமி, அவர்கள் கர்நாடகாவில் இருந்து வந்தவர்கள், உயர்தர பிராமணர்கள். ஆனால் அவர்கள் முகலாயப் பேரரசரால் உயர் பதவியில் அமர்த்தப்பட்டனர். ஸனாதன கோஸ்வாமி பிரதமராகவும், ரூபா கோஸ்வாமி நிதி அமைச்சராகவும் இருந்தனர். ஜீவ கோஸ்வாமி அவர்களின் மருமகன். அவ்வாறே ரகுநாத தாஹகோஸ்வாமியை எடுத்து கொண்டால் அவரது பெற்றோர் கோடீஸ்வரர்கள். ஆகவே இவர்கள் அனைவரும் உயர்ந்த இடத்தில் இருந்தனர். ஆனால் அனைவரும் பிருந்தாவனத்தில் மாண்டனர். ஸ்ரீல பிரபுபாதர் இந்த உதாரணத்தை மட்டும் பயன்படுத்தவில்லை, அவ்வாறே நாம் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை எடுத்து கொண்டோமென்றால். அவருக்கும் அன்பான தாய், அழகான மனைவி. நவத்வீபத்தில் உள்ள அனைத்து பண்டிதர்களிலும் அவர் முதன்மையானவர். 24 வயதில் அவர் சந்நியாசம் எடுத்து இந்தியா முழுவதும் சென்று பிரசங்கம் செய்தார். எனவே ஒருவர் எவ்வாறு இல்லறத்தில் இருந்து பிரிந்து செல்ல முடியும் என்பதைக் காட்டினார். அதேசமயம் அவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பற்றுதலை வெளிப்படுத்தினார். ஆனால் இதை நவத்வீபத்தில் வெளிபடுத்தவில்லை தென்னிந்தியாவில் வெளிப்படுத்தினார்.மக்களைச் சந்திக்கும் போது, அவர்களை அரவணைத்து, அவர்களுக்கு பக்தி-சக்தியைக் கொடுப்பார். அவரது லீலைகளில், நீலாசலத்தில் அரங்கேறிய நிகழ்வு, சார்வபௌமா பட்டாச்ரியா மற்றும் அவரது மனைவி, பகவான் சைதன்யருக்கு எப்படி அபரிமிதமான பிரசாதம் தயாரித்தனர் என்பதைப் பார்ப்போம். பகவான் சைதன்யர் கூறினார், நீங்கள் கிருஷ்ணருக்கு மிகவும் ஐஸ்வர்யமான மற்றும் இனிமையான பிரசாதத்தை வழங்கியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனவே பக்கத்தில் ஒரு சிறிய தட்டைக் கொடுங்கள், அதில் பிசாதத்தில் ஒரு பகுதியை வைத்து எனக்குக் கொடுங்கள், இவை அனைத்தையும் என்னால் எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறினார். இவ்வாறு நடந்தவைகளை நாங்கள் தினமும் இரவில் படிக்கின்றோம். எனவே சர்வபௌம பட்டாச்ரியா பகவான் சைதன்யரே கிருஷ்ணர் என்பதை அறிந்திருந்தார். ஆனால் சைதன்ய மஹாபிரபு இதை சாதாரணமாக வெளிப்படுத்த மாட்டார். எப்படியிருந்தாலும், என்ன நடந்தது என்று எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. ஒரு குடும்பம் மாயாப்பூரில், கோவிலுக்கு வந்ததாகக் கேள்விப்பட்டோம், அவர்களது மகன் அவர்கள் வீட்டில் உள்ள புகூரில் இறந்துவிட்டார். ஆனால் அந்த அம்மா, பொதுவாக தாய்மார்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்கள், ஆனால் அவர் சாதாரணமாக இருந்தார். அதனால் அம்மாவிடம், மகனுக்கு ஏதாவது பிரச்சனையா என்று கேட்டோம். அவள் சொன்னாள், ஆம், அவர் இறந்துவிட்டார்! நான் என்ன செய்ய முடியும், அதனால் நான் கிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்வதற்காக வந்தேன், அவருடைய ஆன்மா கிருஷ்ணரிடம் கொண்டு செல்லப்பட வேண்டும். எனவே, இந்த பெண்மணி தனது ஆன்மீக புரிதலில் மிகவும் முன்னேறியிருப்பதைக் காணமுடிகிறது. எனவே, இந்த பதத்திலிருந்து நாம் எப்படி கிருஷ்ணரிடம் அதிக பற்று கொள்ள வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். நம் குடும்பத்தின் மீது நமக்குப் பற்று இருப்பது இயல்புதான். ஆனால் நாம் கிருஷ்ணரிடம் அதைவிட அதிக பற்றுதல் கொண்டிருக்க வேண்டும். மேலும் இது நம் அனைவருக்கும் ஒரு நல்ல உதாரணம். ராணி குந்தி ஒரு தூய பக்தையாக இருந்ததால், அவர் நமக்கு ஒரு நல்ல அறிவுறையை வழங்கினார். இவ்வாறு இறைவனின் மிக உயர்ந்த, தூய்மையான பக்தர்கள் பலர் உள்ளனர். குந்தி தேவி, திரௌபதி தேவி, தேவஹூதி, சுனீதி, என பல! பகவான் ஸ்ரீ சைதன்யரின் லீலைகளைக் கண்டதும், வங்காளத்திலிருந்து பக்தர்கள் ஜகந்நாத பூரிக்குச் செல்ல ஆரம்பித்தனர். சைதன்யர் சந்நியாசியாக இருந்ததால் மனிதர்கள் அவரை அணுகலாம். சிலர் வணக்கம் செலுத்தி அவரது பாதங்களைத் தொட்டு வணங்குவார்கள், மேலும் சிலர் இறைவனுடனான அவர்களின் குறிப்பிட்ட உறவின்படி அவரைத் தழுவுவார்கள். ஆனால் பெண்கள், அவர்கள் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள், அவர்கள் இறைவனின் பாதங்கள் தொடப்படுவதைக் காண்பார்கள், அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தோடும். இவ்வாறு இந்த பெண்கள், பகவானின் தூய பக்தர்களாக இருந்தனர். சைதன்ய பகவான் தினமும் கிருஹஸ்தாக்களின் வீட்டிற்குச் சென்று பிரசாதம் எடுத்துக் கொள்வார். ஒரு சந்நியாசியாக, அவர் நெருப்பைத் தொடக்கூடாது, எனவே மற்றவர்கள் சமைக்கும் உணவை ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே பெண்கள் சைதன்யருக்கு சமைத்து வந்தனர். சில சமயங்களில் அவர்களுடன் சேர்ந்து, அவர்களின் கணவர்களும் சமையலில் உதவுவார்கள். ஏனெனில் கணவன்மார்களும் சைதன்ய பகவானுக்கு சேவை செய்யக் காத்திருந்தனர். ஆகவே, கிருஷ்ணரையே சேவிக்க மக்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு இதுவாகும். எனவே சார்வபௌம பட்டாச்ரியார், சைதன்யர் பகவான் தனது வீட்டில் 30 நாட்கள் பிரசாதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினார். ஆனால் பகவான் சைதன்யர் இல்லை என்று கூறினார். பிறகு சார்வபௌமா பட்டாச்ரியார், சரி, குறைந்தபட்சம் 20 நாட்களுக்கு என் இடத்தில் சாப்பிடுங்கள் என்றார். பகவான் சைதன்யர், “இல்லை. 15 நாட்கள்? இல்லை! 10 நாட்கள்! குறைந்தபட்சம்! இல்லை! இறுதியாக, அவர் ஐந்து நாட்களுக்கு ஒப்புக்கொண்டார்! ” வங்காளத்தில் சந்தைப் பகுதிகளில் மக்கள் பேரம் பேசுவதையும், இழுபறியில் ஈடுபடுவதையும் நாம் பார்ப்பது போல, அங்கேயும் அதுதான் நடந்து கொண்டிருந்தது! இறுதியில் அவரது வீட்டில் 5 நாட்கள் பிரசாதம் எடுத்துக் கொள்வதாகவும், பின் ஸ்வரூப தாமோதரரை 5 நாட்களுக்கும், மற்ற பக்தர்களை பிற நாட்களுக்கும் பிரசாதம் எடுத்துக் கொள்ளச் செய்வதாகக் கூறினார்.இவ்வாறு ஒரு மாதம் முடிவடைந்தது. இதனால் பக்தர்கள் சைதன்ய பகவானை தனிப்பட்ட முறையில் சேவிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆறு ஆண்டுகளாக, அவர் தென்னிந்தியா மற்றும் மேற்கு இந்தியா முழுவதும் பயணம் செய்தார். ஒவ்வொரு நாளும் அவர் வெவ்வேறு கிரூஹஸ்தர்களின் வீட்டில் தங்கினார். கிருஹஸ்தர்கள் அவருடைய பாதங்களைக் கழுவுவார்கள், பெண்மணிகள் தண்ணீர் ஊற்றுவார்கள், கணவர்கள் பாதங்களை மசாஜ் செய்வார்கள். இங்கு எத்தனை பேர் சைதன்ய பகவானின் தாமரை பாதங்களை நீராட்ட விரும்புகிறார்கள்?! ஹரிபோல்! எப்படியிருந்தாலும், இந்த வழியில், எப்படியோ பகவான் சைதன்யர் தனது அனைத்து பக்தர்களின் விருப்பங்களையும் பூர்த்தி செய்தார். எப்படி புல்லும், களைகளும் ஆற்றில் மிதக்கின்றனவோ, அதைப் போலவே நாமும் ஜட உலகில் இருக்கிறோம். புல் சில சமயங்களில் சுழலில் ஒன்று சேர்கின்றன, பிறகு அது பிரிந்து கிடக்கிறது. இப்படியாக, நம்மில் சிலர் ஆணாகவும், சிலர் பெண்ணாகவும் பிறக்கிறோம், வெவ்வேறு வாழ்நாளில் நாம் ஒன்றுசேர்ந்தும் பிரிந்தும் இருக்கிறோம். எனவே, இந்த வழியில், இந்த தற்போதைய பௌதிக வாழ்க்கை மிகவும் முக்கியமானது என்று நாங்கள் நினைக்கிறோம். ஆனால் இந்த வாழ்நாளுக்குப் பிறகு நாம் எதையாவது நினைவில் வைத்திருக்கிறோமா? இந்த வழியில் நாம் வெவ்வேறு உறவுகளில் இருக்கிறோம், ஆனால் பின்னர் அதை மறந்துவிடுகிறோம். ஆனால் நிரந்தரமானது கிருஷ்ணருடனான நமது உறவு. எனவே ஸ்ரீல பிரபுபாதா மிகவும் கருணையுள்ளவராக இருந்தார், அவர் வந்து, கிருஷ்ணருடனான நமது நித்திய உறவைப் பற்றிய இந்தத் தகவலைத் தந்தார். எப்படியிருந்தாலும், இந்த ஸ்ரீமத்-பாகவதம் நாம் கேட்பதற்கு மிகவும் முக்கியமானது.

- END OF TRANSCRIPTION -
Transcribed by ஜனதா சுந்தர்
Verifyed by
Reviewed by

Lecture Suggetions