மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம்
யத் க்ருபா தம் அஹம் வந்தே ஸ்ரீ குரும் தீன தாரணம்
பரமானந்த மாதவம் ஸ்ரீ சைதன்ய ஈஸ்வரம்
ஹரிஹி ஓம் தத் சத்
ஜயபதாகா ஸ்வாமி: இன்று நீங்கள் அனைவரும் தீக்ஷை பெற வந்துள்ளீர்கள். இது நமது குரு-பரம்பரை முறையில் பின்பற்றி செய்யப்படுகிறது. பின்னர் பக்தர்களுக்கு தாஸன் அல்லது தாஸி என்ற பின்னொட்டுடன் ஆன்மீக பெயர்கள் அளிக்கப்படுகின்றன. நாம் இறைவனின் ஆண் அல்லது பெண் சேவகராக ஆகிறோம் என்பதே இதன் அர்த்தம். எவரேனும் இறைவனின் ஆண் அல்லது பெண் சேவகராக ஆக விரும்பவில்லையெனில் இந்த இடத்தை விட்டு செல்லலாம். ஸ்ரீ கிருஷ்ணர் தமது பக்தர்களை எப்போதும் இரட்சிப்பேன் என்று கூறினார். நமது சமூகம் கிருஷ்ண உணர்வு சமூகம் ஆகும். அதாவது நாம் எப்போதும் கிருஷ்ணரை நினைவு கொள்வோம் மற்றும் எப்போதும் கிருஷ்ண உணர்வுடன் இருப்போம். காலை, மதியம், இரவு என அனைத்து நேரத்திலும் கிருஷ்ணரை நினைவு கொள்வதேயாகும். நாம் தினமும் 16 மாலைகள் ஜபம் செய்வதாக உறுதிமொழிந்துள்ளோம். அதற்கு மேலும், மற்ற சேவைகளை செய்யும்போதும் ஸ்ரீ கிருஷ்ணரை நினைவில் கொள்வோம்.
அன்னை யசோதை பலவிதமான சேவைகளை செய்து வந்தாள். அவர் தயிரை மத்து வைத்து கடைந்து வெண்ணெய் செய்வாள். இதை செய்யும்போது, அவள் கிருஷ்ணரின் லீலைகளைப் பாடுவாள். இதில் என்ன சிக்கல்? நாம் இவ்வாறு செய்தால், நாம் மகிழ்ச்சியடைவோம். எப்போதும் ஸ்ரீ கிருஷ்ணரின் லீலைகளை, குணங்களை, நாமங்களை நினைவில் வைப்பது எப்படி என்பதின் இரகசியம் இதுவே. இப்போது மக்கள் அதை செய்யாமல், சினிமா பாடல்களைக் கேட்கின்றனர், கால்பந்து மற்றும் கிரிக்கெட்டை பற்றி சிந்திக்கின்றனர்! ஆனால் நாம் சதா-சர்வ காலமும், எப்படி ஸ்ரீ கிருஷ்ணரை எப்போதும் நினைவில் வைக்கும் வழிகளை ஆராய்வோம். இது கிருஷ்ண உணர்வு இயக்கமாகும். நமது முந்தைய ஆச்சாரியர்கள் இதன் மதிப்பை நமக்கு விளக்கியுள்ளனர்.
சிலர் ஸ்ரீ சைதன்யதேவர் இங்கு 500 வருடங்களுக்கு முன்பு இருந்தார் என்று நினைக்கலாம், ஆனால் நாம் இறைவனை பிரிவின் உணர்வில் (விப்ரளம்பம்) நினைக்க முடியும். அவ்வாறு நினைத்தால், இறைவன், அவரது நாமம், எண்ணங்கள், அவரது சேவைகளில் எந்த வேறுபாடும் இல்லை. எனவே நாம் தினமும் 16 மாலை ஜபித்து பகவானை நினைவில் கொள்கிறோம். மேலும், நாம் சங்கீர்த்தனம், நகர-சங்கீர்த்தனம் செய்கிறோம். பல வழிகளில் பகவான் சைதன்யர் நமக்கு கிருஷ்ணரை எப்போதும் நினைவில் வைக்க கற்பித்துள்ளார்.
நேற்று நான் ஸ்ரீமத்-பாகவதத்தின் 10வது ஸ்கந்தத்தை படித்தேன், சிசுபாலருடன் திருமணத்திற்கு முன்பு ருக்மிணி அம்பிகா தேவியின் கோவிலுக்கு சென்றார். அங்கு அவலள் அம்பிகா தேவிக்கும் மஹாதேவருக்கும் வணங்கினாள். அவள் அம்பிகா தேவியின் புத்திரர்கள் கார்த்திகேயன் மற்றும் கணேசருக்கும் வணக்கங்களை சமர்ப்பித்தாள். அங்கு இருந்த பெண்கள் ருக்மிணியிடம் அவளது பெரிய ஆசையை கூறுமாறு கூறினர். ருக்மிணி தேவி அம்பிகா தேவியிடம், ‘எனக்கு ஸ்ரீ கிருஷ்ணர் கணவராக வேண்டும். நான் கிருஷ்ணரை விரும்புகிறேன்!’ என்று கூறினாள். தேவர்கள், தேவிகளிடம் பிரார்த்திப்பது பெரிய விஷயம் அல்ல. அவர்களிடம் நாம் என்ன விரும்புகிறோம், கேட்கிறோம் என்பது தான் முக்கியம். ருக்மிணி கிருஷ்ணரை விரும்பி, பிரார்த்தித்தாள். அவளது விருப்பம் நிறைவேறியது. ஸ்ரீ கிருஷ்ணர் வந்து அவளை எடுத்துச் சென்றார். இவ்வாறு, நாம் எங்கு சென்றாலும், எதை செய்தாலும், ஒரே எண்ணம், ‘கௌராங்க, கிருஷ்ண,’ அவர்களை எப்போதும் எப்படி நினைவில் வைக்க முடியும் என்பதே.
இப்போது இரவு நேரம் ஆகிவிட்டது, நான் மேலும் மாட்டேன். நீங்கள் தவத்திரு கௌராங்க ப்ரேம ஸ்வாமி மஹாராஜர் மற்றும் தவத்திரு பக்தி விலாஸ கௌரசந்திர மஹாராஜர் மற்றும் உயர்திரு சாருசந்திர பிரபு அவர்களின் சொற்பொழிவுகளை கேட்டீர்கள். ஹரே கிருஷ்ண!
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
Lecture Suggetions
-
20211120 ஸ்ரீமத் பாகவதம் 1.12.35 - 36
-
20211113 ஸ்ரீமத்-பாகவதம் 1.12.29
-
20211016 உலகளாவிய தாமோதர விழா துவக்கவுரை
-
20210905 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20211002 பக்தி விருட்ச சம்மேளன உரையாற்றுதல்
-
20211003 ஸ்ரீமத் பாகவதம் 1.11.28
-
20211017 இஸ்கான் சென்னையின் படன உற்சவத்தில் உரையாற்றுகிறார்.
-
20211015 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - விழா துவக்கவுரை
-
20210624 ஹர்மொனிக்ஸ் லைப்-ஸ்டைல் நல்லாசிவுரை
-
20210711 “திருநாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” — பத்ர பூர்ணிமா நிகழ்ச்சி சொற்பொழிவு
-
20210828 ஸ்ரீமத் பாகவதம் 1.10.33-35
-
20211016 பங்களாதேஷ் பக்தர்களுக்கான செய்தி
-
20211001 கேள்வி மற்றும் பதில்கள்
-
20211017 ஸ்ரீமத் பாகவதம் 1.12.2
-
20211108 இஸ்கான் காங்டாக் மற்றும் அம்பாலா பக்தர்களுக்கு ஸ்ரீல பிரபுபாதா திரோபாவா முகவரி
-
20210904 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20210918 கோலோக பாத்ரா பிரச்சாரத்திற்கு செல்க
-
20210918 வாமன தூவாதசி அன்று ஸ்ரீமத் பாகவதம்
-
20210925 ஸ்ரீமத்- பாகவதம் 1.11.21
-
20210710 சாந்திபூரில் ஸ்ரீ சைதன்யர் மற்றும் அவரது சகாக்களின் லீலைகளை கேட்பதால் கிடைக்கும் பலன்கள்
-
20211009 ஸ்ரீமத்பாகவதம் 1.11.34
-
20210523 அமோகனை தன் கருணையினால் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காப்பாற்றுதல்
-
20211014 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - சம்பிரதாயசம்மேளன முகவரி
-
20210914 51வது சன்னியாச ஆண்டுவிழா உரை
-
20200903 ஜூம் கேள்வி பதில்கள்
-
20210830 ஸ்ரீமத் பாகவதம்
-
20210930 கேள்வி மற்றும் பதில்கள்
-
20210925 கேள்வி மற்றும் பதில் அமர்வு
-
20210625 ஸ்ரீ அத்வைத ஆச்சார்யர் சச்சிமாதாவை அழைத்துவர பல்லக்கினை அனுப்புதல்
-
20211108 ஸ்ரீல பிரபுபாதாவின் திரோபாவா விரிவுரை இஸ்கான் மாயாபூர்