மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம்
யத்-க்ருபா தம் அஹம் வந்தே ஸ்ரீ-குரும் தீன-தாரணம்
பரமானந்த-மாதவம் ஸ்ரீ சைதன்ய ஈஸ்வரம்
ஹரிஹி ஓம் தத் ஸத்
ஜயபதாகா ஸ்வாமி: “முதலில், பாத்ர பூர்ணிமாவிற்காக எனக்கு வழங்கப்பட்ட விருதை, நான் தவத்திரு பக்தி விஜய பாகவத ஸ்வாமிக்கு அளித்தேன். நாம் தவத்திரு பக்தி புருஷோத்தம ஸ்வாமி மற்றும் உயர்திரு பீம பிரபு ஆகியோரிடமிருந்து மிகவும் ஊக்கம் அளிக்கும் சொற்பொழிவுகளைக் கேட்டோம். அதேபோல, தவத்திரு பக்தி விஜய பாகவத ஸ்வாமி மற்றும் உயர்திரு சுபேக்ஷண பிரபு ஆகியோரிடமிருந்து மற்றொரு ஊக்கம் அளிக்கும் சொற்பொழிவையும் கேட்டோம். நான் ஒரு சில வார்த்தைகளைப் பகிர முயற்சிக்கிறேன்.”
நமது பிரம்மச்சாரி பக்தர்கள் ஆண்டு முழுவதும், அவர்கள் புத்தக விநியோகத்தில் முயற்சி செய்கின்றனர். மற்றொரு நாள், சங்கீர்தன பக்தர்கள், நான் கணக்கிடவில்லை, ஆனால் சுமார் 100 கிருஹஸ்த பக்தர்கள், எனது ஆசிர்வாதத்தைப் பெறுவதற்கு வந்தனர். அவர்கள் சொன்னார்கள், இந்த கிருஹஸ்த பக்தர்கள் புத்தக விநியோக சேவைக்காக அர்ப்பணிப்போடு உதவுகின்றனர். கூடுதலாக, தவத்திரு பக்தி விஜய பாகவத ஸ்வாமியும் 35 கிருஹஸ்த பக்தர்களை என்னிடம் ஆசிர்வாதம் பெறுவதற்காக கூட்டி வந்தார். இந்த பக்தர்கள், தினசரி புத்தக விநியோகம் செய்கின்றனர். இது ஒரு மிகவும் அழகான முயற்சி. இதில் 125-க்கும் மேற்பட்ட பக்தர்கள் உள்ளனர்.
நான் அசௌகரியமாக இருந்தபொழுது, நான் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அங்கு நான் டெல்லி கோவிலின் சில யுக்திகளைக் கண்டேன். கோவில் தலைவர் ஒவ்வொரு நாமஹட்டாவிற்கும், ஒவ்வொரு குழுவுக்கும், ஒவ்வொரு பக்தரிடமும் செல்வார். பின்னர் அவர் கேட்பார், “மாரத்தானுக்கு உங்கள் உறுதிமொழி என்ன?” பெண்கள், ஆண்கள், அனைவரும் ஓர் உறுதிமொழி அளிப்பார்கள். ஒரு பக்தர், அவர் ஒரு வானபிரஸ்தர் வாழ்வை கடைபிடிப்பவர் போல, அவர் ஏதோவொரு விதமாக 5000 பகவத் கீதைகளை வினியோகிப்பேன் என உறுதிமொழி அளித்திருந்தார். டெல்லியில் பல அரசு அலுவலகங்கள் உள்ளதால் அவர்களுக்கு அது ஓர் அனுகூலமான சூழல். பல்வேறு தொழிற்சாலைகள், நிறுவனங்கள், அவையும் பெருமளவில் புத்தகங்களை வாங்குகின்றன. வங்காளத்தில் பல சணல் தொழிற்சாலைகள் உள்ளன. அங்கு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இருக்கலாம். நீங்கள் உரிமையாளர்களை, அவர்களின் தொழிலாளர்களுக்கு பகவத் கீதையை மானியமாக வழங்க சம்மதிக்க வைக்க வேண்டும். நிச்சயமாக, நான் சில மக்களை சந்தித்தேன், “நான் மிகவும் கல்வியறிவு இல்லாதவர், நான் படிக்க முடியாது...” அவர்களுக்கு என்ன வழிமுறை என்று தெரியாது, ஆனால் மும்பையில் உள்ள பி.பி.டி சில ஆடியோ புத்தகங்களை தயாரித்துள்ளது. படிக்க தெரியாதவர்களும் இப்பொழுது புத்தகத்தைக் கேட்கலாம். நாம் அனைவரின் இதயத்திலும் ஸ்ரீ கிருஷ்ணர் வீற்றிருக்க வேண்டும் விரும்புகிறோம். அவர்கள் மனதில் எப்போதும் ஸ்ரீ கிருஷ்ணரை ஸ்மரணிக்க வேண்டும். இது அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம். நாம் மக்கள் ஸ்ரீ கிருஷ்ணரை நினைக்க விரும்புகிறோம். படிக்க தெரிந்தவர்கள் புத்தகங்களைப் படிக்கட்டும். படிக்க முடியாதவர்கள் கேட்கலாம்.
ஒவ்வொரு நாமஹட்டாவும், எனக்கு எண்ணிக்கை தெரியவில்லை, ஆனால் மாயாபுரின்கீழ், வேறு எங்கும் இல்லாததை விட அதிக நாமஹட்டாக்கள் உள்ளன. மாயாபுரின்கீழ் சுமார் 5000 நாமஹட்டாக்கள் இருக்கின்றன என்று கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு நாமஹட்டாவும் உறுதிமொழி எடுத்தால், உதாரணமாக நூறு பகவத்-கீதைகள் வீதம், 5000 x 100 என்பது 5 லட்சம் பகவத்-கீதைகள். எனவே, இந்த ஆண்டு, “நான் எத்தனை புத்தகங்களை வினியோகிப்பேன்” என்று சிந்திக்க வேண்டும். தற்போது நமது அனைத்து புத்தகங்களும் மும்பையில் அச்சிடப்பட்டுள்ளன. உயர்திரு பீம பிரபு கூறுகிறார், நாம் அவர்களை (அச்சிடுபவர்களை) அதிக நேரம் வேலை செய்ய வைக்கலாம். எனவே நாம் இந்த முறையில் முயற்சிக்க வேண்டும். நாம் அனைவரும் பகவானிடம் செல்லும் வழியை காண விரும்புகிறோம், நாம் மட்டுமல்ல. நான் புத்தக விநியோகத்தில் உதவும் அனைத்து பக்தர்களுக்கும் மிகவும் நன்றிகடன்பட்டுள்ளேன். புத்தகங்களை அச்சிடும் உயர்திரு பீம பிரபு மற்றும் ஆனந்த தீர்த்த பிரபு மற்றும் அவர்கள் குழுவிற்கும் நான் மிகவும் நன்றிகடன்பட்டுள்ளேன். நீங்கள் பார்க்கலாம், ஸ்ரீல பிரபுபாதர், அவர் ஒரு புத்தகத்தை கையில் பெறும்பொழுது, அவரது கண்களில் கண்ணீர் கலங்கும். இங்கே வங்காள ஆண் பக்தர்கள், அவர்கள் நன்றாக முன்வந்து புத்தகங்களை விநியோகிகின்றனர். ஆனால், பெண்கள், ஆணின் சிறந்த பாதி, வங்காளத்தில் பெண்கள் அதீத பக்தி கொண்டவர்கள். வங்காளத்தில் உளு-த்வனி (குலவை) செய்வார்கள்! ஸ்ரீல பக்திவினோத தாகூர் எழுதியபடி, அவர் கிராமங்களில் ஹரிநாம சங்கீர்த்தனம் செய்தபோது, ஆண்கள் “ஹரிபோல்! ஹரிபோல்!” என்று கோஷமிட்டனர், மற்றும் பெண்கள் உளு-த்வனி (குலவை) செய்தனர். அனைவரும் சேர எழுப்பிய ஒலியதிர்வு ஆகாயத்தை ஹரிநாமத்தால் எட்டியது! எனவே, நீங்கள் எவ்வளவு புத்தகங்கள் உறுதிமொழி அளிப்பீர்கள் என்று முன்கூட்டியே சிந்தியுங்கள். ஹரே கிருஷ்ண!
Lecture Suggetions
-
20210624 ஹர்மொனிக்ஸ் லைப்-ஸ்டைல் நல்லாசிவுரை
-
20211120 ஸ்ரீமத் பாகவதம் 1.12.35 - 36
-
20211017 இஸ்கான் சென்னையின் படன உற்சவத்தில் உரையாற்றுகிறார்.
-
20210925 கேள்வி மற்றும் பதில் அமர்வு
-
20211108 இஸ்கான் காங்டாக் மற்றும் அம்பாலா பக்தர்களுக்கு ஸ்ரீல பிரபுபாதா திரோபாவா முகவரி
-
20210918 கோலோக பாத்ரா பிரச்சாரத்திற்கு செல்க
-
20210711 “திருநாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” — பத்ர பூர்ணிமா நிகழ்ச்சி சொற்பொழிவு
-
20211113 ஸ்ரீமத்-பாகவதம் 1.12.29
-
20200903 ஜூம் கேள்வி பதில்கள்
-
20211002 பக்தி விருட்ச சம்மேளன உரையாற்றுதல்
-
20211003 ஸ்ரீமத் பாகவதம் 1.11.28
-
20211017 ஸ்ரீமத் பாகவதம் 1.12.2
-
20211016 பங்களாதேஷ் பக்தர்களுக்கான செய்தி
-
20210918 வாமன தூவாதசி அன்று ஸ்ரீமத் பாகவதம்
-
20210830 ஸ்ரீமத் பாகவதம்
-
20211014 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - சம்பிரதாயசம்மேளன முகவரி
-
20210828 ஸ்ரீமத் பாகவதம் 1.10.33-35
-
20210914 51வது சன்னியாச ஆண்டுவிழா உரை
-
20210925 ஸ்ரீமத்- பாகவதம் 1.11.21
-
20211001 கேள்வி மற்றும் பதில்கள்
-
20210625 ஸ்ரீ அத்வைத ஆச்சார்யர் சச்சிமாதாவை அழைத்துவர பல்லக்கினை அனுப்புதல்
-
20211108 ஸ்ரீல பிரபுபாதாவின் திரோபாவா விரிவுரை இஸ்கான் மாயாபூர்
-
20210930 கேள்வி மற்றும் பதில்கள்
-
20210523 அமோகனை தன் கருணையினால் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காப்பாற்றுதல்
-
20210904 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை
-
20210710 சாந்திபூரில் ஸ்ரீ சைதன்யர் மற்றும் அவரது சகாக்களின் லீலைகளை கேட்பதால் கிடைக்கும் பலன்கள்
-
20211009 ஸ்ரீமத்பாகவதம் 1.11.34
-
20211016 உலகளாவிய தாமோதர விழா துவக்கவுரை
-
20211015 ஸ்ரீலபிரபுபாதா வருகிறார் - விழா துவக்கவுரை
-
20210905 JSSS உலகளாவிய இணையதள பதில்உபசாரம் விரிவுரை