Question: ஒருவரது மரணகாலத்தின் சமயம் நாற்பதாயிரம் தேள் கொட்டும் வலியை அனுபவிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வேதனையை பக்தர்களும் அனுபவிப்பார்களா?
Author: சுவர்ண கோபிகா தேவீ தாஸீ
Date: 2020-10-12
ஒருநாள் நான் ஒரு பல் மருத்துவர் அலுவலத்திற்கு சென்றிருந்தேன். அந்த பல் மருத்துவர் கூறினார், மரணத்தின் வலி, குழந்தை பெற்றெடுக்கும் வலி (மகப்பேறு), கிட்னியில் கல், மற்றும் பல் மருத்துவமனை, இவை மிகவும் உச்சகட்ட வலியாகும். ஆக, உங்களை பல் மருத்துவமனைக்கு வரவேற்கிறேன். ஆனால் உண்மையில் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இவ்வுலகை விட்டு செல்வார்கள், ஏனென்றால் அவர்கள் மீண்டும் கடவுளிடம் செல்கிறார்கள்.
தவத்திரு பக்திசாரு ஸ்வாமி மஹாராஜர் அவரது முகத்தில் புன்னகையுடன் தன் உடலை நீத்தார் என்று நாம் கேள்விப்பட்டோம். ஹரிபோல்!
Category: [மரணம்]